6 ஆம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல்ஒன்று - கவிதைப்பேழை - துன்பம் வெல்லும் கல்வி - மதிப்பீடு / 6th TAMIL - SECOND TERM - EYAL 1 - THUNBAM VELLUM KALVI - QUESTION & ANSWER

 

ஆறாம் வகுப்பு - தமிழ்

இரண்டாம் பருவம் - இயல் 1

கவிதைப்பேழை - துன்பம் வெல்லும் கல்வி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் ------- நடக்கக் கூடாது.

அ) போற்றும்படி  ஆ)தூற்றும்படி

இ ) பார்க்கும்படி   ஈ ) வியக்கும்படி

விடை : ஆ ) தூற்றும்படி

2. நாம் ------  சொல்படி நடக்க வேண்டும்.

அ) இளையோர் ஆ) ஊரார்

இ ) மூத்தோர்    ஈ) வழிப்போக்கர்

விடை  : இ ) மூத்தோர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------

அ) கையில் + பொருள் 

ஆ) கைப் + பொருள்

இ) கை + பொருள்

ஈ) கைப்பு + பொருள்

விடை : இ ) கை + பொருள்

4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) மானம்இல்லா

ஆ) மானமில்லா

இ) மானமல்லா

ஈ) மானம்மில்லா

விடை : ஆ ) மானமில்லா 

சொற்றொடரில் அமைத்து எழுதுக


1. மனமாற்றம் -  கொரானா தொற்றால் மனமாற்றம் ஏற்பட்டது.

2. ஏட்டுக் கல்வி -நாம் ஏட்டுக்கல்வி கற்க வேண்டும்

3. நல்லவர்கள்  - நாம், நல்லவர்களுடன் பழக வேணுடும் 

4. சோம்பல் - நாம் சோம்பலை நீக்க வேண்டும்.

குறுவினா

1. நாம் யாருடன் சேரக் கூடாது?

            தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது.

2. எதை நம்பி வாழக் கூடாது?

           பிறர் உழைப்பை நம்பி வாழக்கூடாது.

3. நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?

        பெற்ற தாயின் புகழும் , நம் தாய் நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும்.

4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

                   மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி  வாழ வேண்டும். அதன்மூலம் வெற்றிகளையும் , விருதுகளையும் , பெருமைகளையும் பெறலாம் என  பட்டுக்கோட்டையார் கூறுகிறார்.

************  *************    ***************






Post a Comment

0 Comments