6 ஆம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 1 - கவிதைப்பேழை - மூதுரை - மதிப்பீடு - வினா & விடை / 6th TAMIL - SECOND TERM - EYAL 1 MOOTHURAI - QUESTION & ANSWER

 ஆறாம் வகுப்பு - தமிழ்

இரண்டாம் பருவம் 

கவிதைப்பேழை - இயல் ஒன்று

மூதுரை 

மதிப்பீடு

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 

1 ) மாணவர்கள் நூல்களை ----- கற்க வேண்டும் 

அ ) மேலோட்டமாக ஆ ) மாசுற

 இ )  மாசற ஈ )மயக்கமுற

விடை : இ ) மாசற

2 )  இடமெல்லாம் என்னும் சொல்லை பிரித்து எழுதக்  கிடைப்பது ------

 அ ) இடம் + மெல்லாம்  ஆ ) இடம் + எல்லாம் 

இ ) இட  + எல்லாம்  ஈ ) இட + மெல்லாம் 

விடை : ஆ ) இடம் + எல்லாம்

3 ) மாசற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது -------

 அ ) மாச + அற     ஆ )  மாசு +  அற 

 இ ) மாச + உற  ஈ )  மாசு  + உற

விடை : ஆ ) மாசு + அற

4 ) குற்றம் +  இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக்  கிடைக்கும் சொல் -------

 அ )  குற்றமில்லாதவர்  

ஆ ) குற்றம் இல்லாதவர் 

இ ) குற்றமல்லாதவர் 

ஈ ) குற்றம் அல்லாதவர் 

விடை : அ ) குற்றமில்லாதவர்

5 ) சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------

அ )  சிறப்புஉடையார் 

ஆ )  சிறப்புடையார்

இ )  சிறப்படையார் 

ஈ ) சிறப்பிடையார் 

விடை : ஆ ) சிறப்புடையார்

குறுவினா

1 ) கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை ?

            மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பீட்டு ஆராய்ந்து பார்த்தால்  மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன்நாட்டில் மட்டுமே சிறப்பு . கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

***************    ************   **************

மனப்பாடப்பாடல்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் 

சென்ற இடமெல்லாம் சிறப்பு

*************     *************    *************

சொல்லும் பொருளும்

மாசற - குற்றம் இல்லாமல்

சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்தால்

தேசம் - நாடு


*******************   ************    **********

Post a Comment

0 Comments