ஆற்றல் ஆசிரியர் விருது - Green Tamil Youtube & சென்னை கூத்துப்பட்டறை - விருது பெற்ற ஆசிரியர்கள் விபரம் / AATRAL AASIRIYAR VIRUDHU - GREEN TAMIL YOUTUBE & CHENNAI KOOTHUPPATTARAI - TEACHERS DAY - SEP 2022

 ஆற்றல் ஆசிரியர் விருது விழா - 


செப்டம்பர் 5 - 2022

சென்னை கூத்துப் பட்டறை மற்றும் 

பைந்தமிழ் வலையொளி ( Green Tamil - You Tube ) இணைந்து வழங்கிய ஆற்றல் ஆசிரியர் விருது வழங்கும் விழா

நாள் : செப்டம்பர் 05 

இடம் : அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , இளமனூர், மதுரை

விழாவைச் சிறப்பித்த இருபெரும் ஆசிரியப் பெருமக்கள் பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா மற்றும் கவிஞர் மூரா அவர்களுடன் சென்னை கூத்துப்பட்டறை நிறுவுநர் திரு.இரா.முத்துசாமி மற்றும் பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு.

ஆற்றல் ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்.

1. ஜே.பரஞ்சோதி டேவிட் , தலைமையாசிரியர் அவர்கள் , அரசு ஆதிந.மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை.

தலைமை என்ற சொல்லுக்குத் தகுதியானவர்.
தம் பேச்சும் மூச்சும் பள்ளிக்கே 
என்று அர்ப்பணித்த பண்பாளர்.
முத்தாய்ப்பாய் மூன்று ( 10 , 11 & 12 ) வகுப்புகளிலும் 100 % தேர்ச்சி பெற்றுத்தந்த மாமனிதர் திரு.ஜே. பரஞ்சோதி டேவிட் அவர்களுக்கு ' ஆற்றல் ஆசிரியர் விருது ' வழங்கி மகிழ்கின்றோம்.

2 ) திரு.சூ. வின்சென்ட் கிளமண்ட் ஜோசப் அவர்கள் , தலைமையாசிரியர் , அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி , அச்சம்பட்டி.

மாணவர் நலன் போற்றும் மகத்தான ஆசிரியர் .
பெருந்தொற்றுக் காலத்தில் 
பேரன்பு காட்டியவர்.
உதவித் தலைமையாசிரியராகவும் , 
உதவும் தலைமையாசிரியராகவும் உள்ளத்தில் நிறைந்த திரு.சூ.கிளமண்ட் வின்சென்ட்  ஜோசப் அவர்களுக்கு '  ஆற்றல் ஆசிரியர் விருது ' வழங்கி மகிழ்கிறோம்.
3 ) திரு.சோ.முருகேசன் அவர்கள் , முதுகலைப் பொருளியல் ஆசிரியர் , அரசு மே.நி.பள்ளி  , அல்லிநகரம் , சிவகங்கை மாவட்டம்.


தமிழால் தடம் பதித்து 
மாணவர் மனதில் இடம்பிடித்தவர்.
ஆசிரியர்களுக்கு அரணாக , 
அரவணைக்கும் அண்ணலாக 
உதவும் தலைமையாக உலாவரும் திரு.சோ.முருகேசன் அவர்களுக்கு ' ஆற்றல் ஆசிரியர் விருது ' வழங்கி மகிழ்கிறோம்.
4 )  திரு.பி.இளங்கோ அவர்கள் , பட்டதாரி ஆசிரியர் , அரசு உயர்நிலைப் பள்ளி ,வரிச்சியூர்
.

வளம் தரும் மரங்களை வளர்த்து
நலம் தரும் நாயகனாய்
வலம் வரும் தூயவன்.
வரலாறாய் வாழும் வரலாற்று ஆசிரியர் திரு.பி இளங்கோ அவர்களுக்கு ' ஆற்றல் ஆசிரியர் விருது ' வழங்கி மகிழ்கின்றோம்.

5 ) திருமதி.ஜெ.சுமதி அவர்கள் , பட்டதாரி ஆசிரியர் , மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , மீனாட்சி நகர்.

ஆங்கிலப் பாடம் கற்றலில் 
ஆர்வத்தைத் தூண்டி
இன்முகத்துடன் இனிதே 
கிராமத்து மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் தரும் ஆசிரியை திருமதி.ஜெ.சுமதி அவர்களுக்கு ' ஆற்றல் ஆசிரியர் விருது ' வழங்கி மகிழ்கின்றோம்.6 ) திரு.இரா.சரவண குமார் அவர்கள் , இடைநிலை ஆசிரியர் , மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , மங்களக்குடி.

கடைநிலை மாணவரையும்
தம் கற்பித்தலால் 
மேல்நிலைக்குக் கொண்டுவரும் 
இடைநிலை ஆசிரியர்
திரு.இரா.சரவணகுமார் அவர்கள்  ' எண்ணும் எழுத்தும் '  கற்பித்தல் திறனைப் பாராட்டி ' ஆற்றல் ஆசிரியர் விருது ' வழங்குவதில் மகிழ்கின்றோம்.


ஆற்றல் ஆசிரியர்களை மகிழ்வித்து மகிழும்,

பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு
தமிழாசிரியர் , அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , இளமனூர் , மதுரை.
அழைத்து மகிழ - 97861 41410

****************    **********   **************Post a Comment

0 Comments