75 ஆம் ஆண்டு - சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்புக்ஙகவிதை
🤝இந்தியனே உருமாறு🤝
இந்தியம் எங்குள்ளது இந்தியாவில்?
இந்தியன் எங்குள்ளான் இந்தியாவில்?
இந்தியத் தாய் மருகுகிறாள்- என்
இந்தியப் புதல்வர்கள் எங்கே என்று!
தாய்க்கே அடையாளம் தெரியவில்லை !
நாய்களாய் உருமாறி
யலையும் பிள்ளைகளை!
தவம் முதற்கொண்டு அனைத்துப் பண்பிற்கும் அவனியில் எடுத்துக்காட்டாம் நம் இந்தியா!
முல்லைக்குத் தேரீந்த பாரி வழி வந்தோம்.
தொல்லையென செடி கொடியழிக்க முனைந்தோம்!
புறாவுக்கு ஊனிந்த சிபி வாழ்ந்த நாட்டில் புறாவைக் கண்டதும் உணவாக்குகிறார் நாட்டில்!
சித்தத்தை சிவன்பால் வைத்த நாயன்மாரும்
புத்தர் போல் ஆசை துறந்த முனிவர் பலரும்
ஆன்மீகம் வளர்த்த சித்தர் பதினெண்மரும்
தான்தன தென்று வாழா சான்றோர் பலரும்
வசையொழிய வாழ்ந்து நம் இந்தியத் தாயை இசை பட அவனியில் சிகரமேற்றிப் போற்றினர்!
அந்தோ! இன்று நம் தாயின் பொலி வெங்கே?
சந்தனச் சிலையென ஒளிரும் தேகமெங்கே?
பெண்மையைக் காலிலிட்டு மிதிக்கும் போது
பெண்மையைப் போற்றும் ராமனாய் மாறு!
மானம் நீங்கும்போது தவறாமல் நீயும்
கானகம் வாழ் கவரிமானாய் மாறு!
மற்றவர் பொருள் கவர எண்ணும்போது
சற்றும் சிந்தியாமல் முற்றும் துறந்த முனிவனாய் மாறு!
பொய்யும் புரட்டும் கைக்கொண்டு வீணராய்க்
கையூட்டு பெறும்போது காந்தியாய் மாறு!
பொன்னகை இச்சையில் உயிரெடுக்கும் போது
புன்னகை மாறா புத்தனாய் மாறு!
ஏசுவார் பார்இருப்பினும் உன் சினமறுத்து
இயேசு போல் அமைதியின் உருவாய் மாறு!
நூறடி நிலம் வேண்டி மாற்றான் நிலம் கவரும்போது
ஆறடி நிலம் போதுமென்று
சவமாய் மாறு!
தாயின் பொலிவும் அழகும் மீண்டும் பெற
நாயினும் கேடாய் வாழும் இந்தியனே உருமாறு!!
சு.பழனிச்செல்வி
ஈரோடு
0 Comments