6 ஆம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 1 , கவிதைப்பேழை - இன்பத்தமிழ் - வினாவிடை / 6th TAMIL - FIRST TERM - EYAL 1 - INBATH TAMIL - QUESTION & ANSWER

 

ஆறாம் வகுப்பு - தமிழ் 

முதல் பருவம் 

இயல் 1 - கவிதைப்பேழை - இன்பத் தமிழ்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1 ) ஏற்றத்தாழ்வற்ற ------- அமைய வேண்டும்

அ ) சமூகம் 

ஆ ) நாடு

இ ) வீடு

ஈ ) தெரு

விடை : அ ) சமூகம்

2 ) நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ----- ஆக இருக்கும்.

அ ) மகிழ்ச்சி

ஆ ) கோபம்

இ ) வருத்தம்

ஈ ) அசதி

விடை : ஈ ) அசதி

3 ) நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -----

அ ) நிலயென்று

ஆ ) நிலவென்று

இ ) நிலவன்று

ஈ ) நிலவுஎன்று

விடை : நிலவென்று

4 ) தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் அடைக்கும் சொல் -----

அ ) தமிழங்கள்

ஆ ) தமிழெங்கள்

இ ) தமிழுஙுகள்

ஈ ) தமிழ்எங்கள்

விடை : தமிழெங்கள்

5 ) ' அமுதென்று ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -----

அ ) அமுது + தென்று

ஆ ) அமுது + என்று

இ ) அமுது + ஒன்று

ஈ ) அமு + தென்று

விடை : ஆ ) அமுது + என்று


Post a Comment

0 Comments