உலக காற்று தினம் - சிறப்புக் கவிதை / WORLD AIR DAY - JUNE 15

 

உலக காற்று தினம்!

      15 • 06 • 2022


புவியைச் சூழ்ந்த பெருவளி

உயிர்கள் வாழ இவையே வழி

புவியின் சுழற்சியில் உருவாகி

தருவாய் உயிர்களைக் கருவாக்கி

அசையும் வாயுக்களின் இயக்கமே !

விவசாயிகளுக்கு நீதான் விலாசமே!

வெப்பமும் வேகமும் வன்மையுயும் மென்மையும் 

கொண்டு வீசுவதால் 

வாடையும் கோடையும் கொண்டலும் தென்றலுமாய் 

வையம் செழிக்க வைக்கின்றாய் !

 வழி தேடிய வணிகனுக்கு 

வாழ்வளித்தாய் திசை காட்டி !

காற்றாலை தரும் ஒரு வளி - அது

தமிழ் நாட்டை முதன்மையாக்கிய ஆரல்வாய்மொழி!

வட தென் கிழக்கு பருவ காற்றுகள் சிந்தும் மழைத்துளி ....

அது காற்று தந்த பெரும்நிதி.!!

உலகம் காக்கும் 

காற்றே நீ என்றென்றும் வாழியவே!

Post a Comment

0 Comments