TNPSC - GROUP IV
மாதிரித் தேர்வு - 2,
பொதுத்தமிழ் - இயங்கலைத்தேர்வு
'பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு,
தமிழாசிரியர், மதுரை -
Online Test தொடர்புக்கு - 97861 41410
**************** ************* **********
1) எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படும் நூல்
அ) அகநானூறு
ஆ) ஐங்குறுநூறு
இ) நற்றிணை
ஈ) பரிபாடல்
விடை : இ ) நற்றிணை
2) குறுந்தொகை என்னும் நூலைத் தொகுத்தவர்
அ ) பூரிக்கோ
ஆ) நல்லந்துவனார்
இ) கணிமேதாவியார்
ஈ) பரிபாடல்
விடை : அ ) பூரிக்கோ
3 ) குறிஞ்சித் திணையின் உரிப்பொருள்
அ) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
ஆ) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
இ) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
ஈ) ஊடலும் ஊடல் நிமித்தமும்
விடை : இ ) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.
4) மருதத்திணையின் உரிப்பொருள்
அ ) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
ஆ) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
இ) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
ஈ) ஊடலும் ஊடல் நிமித்தமும்
விடை : ஈ) ஊடலும் ஊடல் நிமித்தமும்
5 ) இராவண காவியம் பற்றிய அண்ணாவின் கூற்றில் எது சரி ?
அ) புரட்சிப்பொறி
ஆ) ஆராய்ச்சிக்கு அறிகுறி
இ ) காலத்தின் விளைவு
ஈ) அனைத்தும் சரி
விடை : ஈ ) அனைத்தும் சரி
6 ) பொருட்பாலின் இயல்கள்
அ) பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
ஆ) அரசியல், அங்கவியல், ஒழிபியல்
இ) களவியல், கற்பியல்
ஈ) பாயிரவியல், அரசியல், களவியல்
விடை : ஆ ) அரசியல் , அங்கவியல் , ஒழிபியல்
7 ) ' தமிழ் மாதின் இனிய உயிர்நிலை எனப்போற்றப்படும் நூல்
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) திருக்குறள்
ஈ) நாலடியார்
விடை : இ ) திருக்குறள்
8 ) நால்வகைப் படையுள் யானைப் போரைச் சிறப்பித்துக் கூறும் நூல் எது ?
அ) கார்நாற்பது
ஆ) களவழி நாற்பது
இ) திணைமாலை நூற்றைம்பது
(ஈ) திருக்குறள்
விடை : ஆ ) களவழி நாற்பது
9) முழுவதும் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட காப்பியம் எது ?
அ) மணிமேகலை
ஆ) சூளாமணி
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
விடை : இ ) சீவக சிந்தாமணி
10 ) ' மணநூல் ' என்று அழைக்கப்படும் நூல்
அ ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) குண்டலகேசி
விடை : இ ) சீவக சிந்தாமணி
11 ) சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த உரை எழுதியவர்
அ) அடியார்க்கு நல்லார்
ஆ) மயிலை நாதர்
இ) கந்தப்ப தேசிகர்
(ஈ) கி.வ.ஜெகநாதன்
விடை : அ ) அடியார்க்கு நல்லார்
12 ) தவறான கூற்று எது ? ( குறுந்தொகை )
அ) குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
ஆ) கடவுள் வாழ்த்துடன் 407 பாடல்களைக் கொண்டது
இ) 4 - 8 அடிகள் உள்ளது
ஈ) தமிழர்களின் அகவாழ்வு பற்றியது
விடை : ஆ ) கடவுள் வாழ்த்துடன் 407 பாடல்களைக் கொண்டது.
13) முதல் காப்பியம் ,முத்தமிழ்க் காப்பியம் என்றழைக்கப்படும் நூல்
அ) பெருங்கதை
ஆ) சிலப்பதிகாரம்
இ) பெரிய புராணம்
ஈ) மணிமேகலை
விடை : ஆ ) சிலப்பதிகாரம்
14) கீழ்க்கண்டவற்றில் எது முதல் குறவஞ்சி நூல்
அ ) தமிழ் குறவஞ்சி
ஆ) வண்ணக் குறவஞ்சி
இ) திருக்குற்றாலக் குறவஞ்சி
ஈ ) பெத்தலகேம் குறவஞ்சி
விடை : இ ) திருக்குற்றாலக்குறவஞ்சி
15 ) கலிங்கத்துப்பரணியில் உள்ள தாழிசைகள்
அ) 400
ஆ) 599
இ) 600
ஈ ) 407
விடை : ஆ ) 599
16) கூற்றுகளை ஆராய்க. ( தூது )
அ) வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்ற வேறு பெயர்களால் அழைக்கப்படுவது தூது
ஆ) அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்து பொருள்களைத் தூதாக விடுப்பர்
இ) கலி வெண்பாவால் பாடப்படுவது
ஈ) 96 வகை சிற்றிலக்கியங்களுள்ஒன்று
விடை
அ) அனைத்தும் சரி
ஆ) அ, ஆ, இ சரி
ஆ, இ, ஈ சரி
(ஈ) ஆ, ஈ, அ சரி
விடை : அ ) அனைத்தும் சரி
17 ) இறைவனால் " அம்மையே " என அழைக்கப்பட்டவர்
அ ) இசைஞானியார்
ஆ) மங்கையர்க்கரசியார்
இ ) பொன்முடியார்
ஈ) காரைக்கால் அம்மையார்
விடை : ஈ ) காரைக்கால் அம்மையார்
18 ) ஆன்ற தமிழ் மறை என அழைக்கப்படும் நூல்
அ) திருக்குறள்
ஆ) பெரிய புராணம்
இ) திருமந்திரம்
ஈ ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்
விடை : நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
19 ) முல்லை நிலத்தின் உரிப்பொருள்
அ) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
ஆ) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
இ) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
ஈ) ஊடலும் ஊடல் நிமித்தமும்
விடை : அ ) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
20 ) நெய்தல் நிலத்தின் உரிப்பொருள்
அ) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
ஆ) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
இ) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
ஈ) ஊடலும் ஊடல் நிமித்தமும்
விடை : ஆ) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
***************** ************** ***********
நன்றி - தினமலர் ( மதுரை பதிப்பு )
****************** *************** *********
TNPSC 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் அனைத்தும் GREEN TAMIL
என்ற You Tube பக்கத்தில் காட்சிப் பதிவுடன் காணலாம்.
0 Comments