பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற
உதவும் வினாக்களும் விடைகளும் .
2 மதிப்பெண் வினாக்களும் விடைகளும்
புவியியல் - பகுதி - 1
அலகு 1
1 இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
1. பாகிஸ்தான்
2. ஆப்கானிஸ்தான்
3. நேபாளம்
4. சீனா
5. பூடான்
6. பங்களாதேஷ்
7. இலங்கை
2. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
* 82° 20' கிழக்கு தீர்க்க ரேகையின் தல நேரம் இந்திய திட்ட நேரம்.
* இது கிரீன்வீச் சராசரி நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக இருக்கிறது.
3. தக்காண பீடபூமி - குறிப்பு வரைக.
* தீபகற்ப பீடபூமியின் மிகப் பெரிய இயற்கை அமைப்பு,
* முக்கோண வடிவம் கொண்டது.
* சுமார் 7 லட்சம் ச.கி.மீ பரப்பளவு கொண்டது.
* கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 100 மீ வரை உயரம் கொண்டது.
4. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
* இந்தியாவில் மேற்கு பகுதி அரபிக்கடலில் அமைந்துள்ளது.
* முருகைப் பாறைகளால் ஆனது.
* தலைநகரம் கவரத்தி,
* 32 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.
அலகு 2
1 காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.
* அட்சங்கள்
- உயரம்
• கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
* நிலத்தோற்றம்
* ஜெட் காற்றோட்டங்கள்
2 “ வெப்ப குறைவு விகிதம் ” என்றால் என்ன?
• புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீ உயரத்திற்கும் 6.5 °C என்ற அளவில் வெப்பநிலை குறையும். இது “ வெப்ப குறைவு விகிதம் " எனப்படும்.
3. “ ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
* வளி மண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகளே “ ஜெட் காற்றோட்டங்கள் " எனப்படும்.
4. பருவக்காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.
• மான்கள் என்ற சொல் “ மௌசிம் ” என்ற அரபு சொல்லில் இருந்து வந்தது.
* இதன் பொருள் பருவகாலம் என்பது ஆகும்.
5. இந்தியாவின் நான்கு பருவக்காலங்களைக் குறிப்பிடுக.
1. குளிர்காலம்
2. கோடைக்காலம்
3. தென்மேற்கு பருவக்காற்றுக் காலம்
4. வடகிழக்கு பருவக்காற்று காலம்
6. “ பருவ மழை வெடிப்பு ” என்றால் என்ன?
* தென் மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலை 46 *Cஆக உயருகின்றது,
* இப்பருவக்காற்று இடி மின்ளலுடன் கன மழையை அளிக்கிறது,
* இதுவே “ பருவ மழை வெடிப்பு ” எனப்படும்.
7. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.
1. மேற்கு கடற்கரை பகுதிகள்
2. அஸ்ஸாம்
3. திரிபுரா
4. மேகாலயாவின் தென்பகுதி (மௌசின்ராம் - சிரபுஞ்சி )
5. நாகாலாந்து
6. அருணாச்சல பிரதேசம்
அலகு 3
1 * மண்” வரையறு.
* புவியின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய துகள்களே மண் ஆகும்.
* கனிமங்களின் கூட்டுப்பொருள்கள்,
* மக்கிய தாவரங்கள்,
* விலங்கினப் பொருட்கள்,
* காற்று மற்றும் நீர் ஆகியவை மண்ணில் உள்ளது.
2 இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடு
1. வண்டல் மண்
2. செம்மண்
3. கரிசல் மண்
4 . சரளை மண்
5 . காடு மற்றும் மலைமண்
6. களிமண் மற்றும் சதுப்பு நில மண்
7. வறண்ட பாலை மண்
8. உப்பு கார மண்
3. கரிசல் மண்ணில் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
* டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்கள் கொண்டது.
* இலை மட்கு குறைவு.
4. “வேளாண்மை” வரையறு.
* வேளாண்மை என்பது குறிப்பிட்ட பயிர்களை உற்பத்தி செய்வது ஆகும்.
* கால்நடை வளர்த்தல் - மக்களுக்கான உணவு - கால்நடை தீவனம்
5. இந்திய வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
1. தன்னிறைவ வேளாண்மை
2. இடப்பெயர்வு வேளாண்மை
3. வறண்ட நில வேளாண்மை
4. கலப்பு வேளாண்மை
5. படிக்கட்டு முறை வேளாண்மை
6. தீவிர வேளாண்மை
2 Comments
https://tamilmoozi.blogspot.com/2022/05/sslc-public-exam-2022-social-important.html
ReplyDeleteபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு 2022 மாதிரி வினாத்தாள்
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2022/05/2022_25.html