10 ஆம் வகுப்பு - அறிவியல் - சரியான விடைகளைத்தேர்ந்தெடு - வினா & விடை / 10th SCIENCE - ONEWORD QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு - அறிவியல் 

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற 

உதவும் ஒரு மதிப்பெண் வினாக்களும் விடைகளும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பாடம் எண் -1. இயக்கவிதிகள் 

1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது

அ. பொருளின் எடை 

ஆ. கோளின் ஈர்ப்பு முடுக்கம்

இ. பொருளின் நிறை 

ஈ. அ மற்றும் ஆ.

விடை: அ.பொருளின் நிறை

2. கீழ்க்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது

அ. ஓய்வுநிலையிலுள்ள பொருளில் 

ஆ. இயக்கநிலையிலுள்ள பொருளில்

இ. அ மற்றும் ஆ

ஈ. சம நிறையுள்ள பொருட்களில் மட்டும்

விடை: அ மற்றும் ஆ

3. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

அ. கணத்தாக்கு விசை

ஆ. முடுக்கம்

இ. விசை

ஈ. விசைமாற்ற வீதம் 

விடை: இ. விசை

4. ஒரு கிலோகிராம் எடை என்பது ------ற்கு சமமாகும்.

அ. 9.8 டைன்

ஆ. 9.8 x 10ன் அடுக்கு 4 N

இ. 98 x 10ன் அடுக்கு 4  டைன் 

ஈ.. 980 டைன்

விடை:இ. 98 x 10ன் அடுக்கு 4 டைன்

5 . ராக்கெட் ஏவுதலில் ------ விதிகள் பயன்படுத்தப்படுகிறது

அ. நியூட்டனின் மூன்றாம் விதி

ஆ. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

இ. நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு 

ஈ ) அ மற்றும் இ

விடை: ஈ. அ மற்றும் இ


பாடம் எண் - 2 . ஒளியியல் .

1. A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில் இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

அ. A

ஆ. B

இ. C

ஈ.D 

விடை அ .A

2. பொருளின் அளவிற்கு சமமான , தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

அ. f

ஆ. ஈறிலாத்தொலைவு

இ . 2f

ஈ. f க்கும் 2f க்கும் இடையில்

விடை: இ. 2f

3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது.மின்விளக்கு ஒளியூட்டப்படும்போது, குவி லென்சானது

அ. விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

 ஆ. குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

இ. இணைக்கற்றைகளை உருவாக்கும்

 ஈ. நிறக்கற்றைகளை உருவாக்கும்

விடை:இ. இணைக் கற்றைகளை உருவாக்கும்

4. ஒரு குவி லென்சானது மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால் பொருள் வைக்கப்பட்டிருக்கும் இடம்.

அ. முதன்மைக்குவியம்

ஆ. ஈறிலாத்தொலைவு

இ. 2f

ஈ. f க்கும் 2f க்கும் இடையில்

விடை: ஆ ஈறிலாத் தொலைவு

5. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில் பொருளின் பிம்பமானது ------தோற்றுவிக்கப்படுகிறது.

அ. விழித்திரைக்குப் பின்புறம்

ஆ. விழித்திரையின் மீது

இ. விழித் திரைக்குமுன்பாக

ஈ. குருட்டுத் தானத்தில்

விடை: இ. விழித் திரைக்கு முன்பாக

6. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

அ. குவிலென்சு

ஆ. குழி லென்சு

இ. குவி ஆடி

ஈ. இரு குவிய லென்சு

விடை: ஈ. இரு குவிய லென்சு


Post a Comment

0 Comments