தியாகத்திருநாள் - ரமலான் நல்வாழ்த்துகள் - சிறப்புக்கவிதை / PUNITHA RAMALAN KAVITHAI - GREEN TAMIL.IN

 

ரம்ஜான் பண்டிகை

            03 • 05 • 2022

ரமலான் எனும் திருநாள்...!

நன்மைகள் பலவும் தரும் நாள் !

திருக்குரான் எனும் திருமறைக் கண்ட பெருநாள் !

தன் தேவை மறந்து இறை சேவை அறிந்த ஒருநாள்!

தகிக்கும் கற்கள் கொதிக்கும் நிலையை 

சுட்டெரிக்கும் கதிரவன் கனல் போல்..!

மனிதர்தம் பாவமெல்லாம் சுட்டுப் பொசுக்கி 

இறைபதம் பணியும் நன்னாள்!

பகலவன் ஒளியாய்ப் பட்டொளி வீசும் 

அருள்வளம் நிறைந்த திருநாள் !

இறைவரும் மனிதரும் நோன்பிற்காக 

நோக்கிய காலம் ரமலான் !

தானம் அறிந்து ! கூடித் தொழுது...

ஒற்றுமை உணர்த்தும் நோன்பு இது 

பசியும் , தகிப்பும் கட்டுப்பாடும் கணக்காய் 

கண்ணியமாய்க் கடைப்பிடித்து ...!

இறையடிப்பணிந்து தூய்மையாக்கி நன்மை ஏந்தி

காக்கும் இனத்தின் பண்பாடு ...!

இது அனைவரையும் ஈர்க்கும் அன்போடு!

திருமறைக் கூறும் மெய்ஞானம் !

அதன் வழி தொழுதால்.....

வாழ்வு சிறக்கும் எந்நாளும் !!


 இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும்

இனிய ரமலான் நல்வாழ்த்துகள் .!!

Post a Comment

0 Comments