மே 1 , உழைப்பாளர் தினம் - சிறப்புக் கட்டுரை / MAY 1 DAY - GREENTAMIL.IN

 


உழைப்பாளர் தினம்

      01 • 05 • 2022

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் 

துன்பம் துடைத்தூன்றுந் தூண்.

                                       ( -- குறள் - 615 -- )

       தன் துன்பத்தை விரும்பாமல் எடுத்த செயலை முடிப்பதையே   விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.-- என்னும் வள்ளுவரின் வார்த்தையாக வாழ்ந்தவர்கள் சிலர்... அவர்களின் கதை பேசும் வரலாறு மகத்தானவை. துன்பத்தை சுமந்து சுற்றம் காக்கும் தூய மனம் படைதுதோரே இப்புவியை எந்நாளும் காக்க வல்லவர்கள் .உழைத்து களைக்கும் தொழிலாளிக்கு வேண்டியது கூலியும் , வாழ்க்கைச் செலவும் மட்டுமன்று.அந்தத் தொழில் சார்ந்த பயனை சம உரிமையுடன் நுகரவேண்டும் என்பதாகும். எட்டு மணி நேர வேலையைக் கேட்டு வாங்க   தொடுக்கப்பட்ட ஒரு மாபெரும் போராட்டமே மே தினம்.

            வையம் முழுதும் வதைக்கப் பட்ட மக்களின் உரிமைக்குரல் முழக்கமே இம் மே தினப் போராட்டம்.1886 -- ம் ஆம் ஆண்டு மே மாதம் - 1 - ஆம் நாள் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 - மணி நேரம் வேலைக் கேட்டு நடத்திய மகத்தான போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக  " கார்மிக் ஹார்வெஸ்டர் " என்ற கம்பெனியின் முன்பு திரண் டிருந்த 500 -- தொழிலாளர்களிடையில் தோழர் " ஆகஸ்டு ஸ்பைஸ் " என்பவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில், அக்கூட்டத்தின் மீது காவல் துறையினரின் தாக்குதல் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர்.அந்த கோரத்தாண்டவத்தி ல் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். மேலும் பலர் தாக்கப்பட்டு காயமுற்றனர். இத்தகைய அடக்கு முறையை கண்டிக்கும்  விதமாக, அன்று இரவே சிகாகோ நகரின் மையப்பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.இவ்வேளையில் தோழர்கள்  ஆகஸ்டு ஸ்பைஸ் , ஆல்பர்ட் பார்ஸனஸ், சாமு வேலு பீல்டன் ஆகியோ ர் கலந்து கொண்டனர். சாமுவேல் பீல்டன் பேசிக் கொண்டிருந்த போதே ஜான் போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில் 180 - க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கூட்டத்தினரை கலைந்து செல்ல கட்டளையிட்டனர்.அதனைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. எங்கிருந்தோ கூட்டத்தில் பாய்ந்தகையெறி குண்டு காவலர்களைப் பதம் பார்த்தது.அதில் ஒருவர் உயிரிழந்தார்.70 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

        காவல்துறையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை நோக்கி சுட்டதில் தொழிலாளர் பலர் உயிரிழர்தனர். ஆகையால் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.1886 - ம் ஆண்டுமே - 1 - ம் நாள் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாக  நீதிமன்ற விசாரணை செய்யப்பட்டு 1887 - ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-- ம் நாள் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப்  என்ற தோழருக்கு 15 நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மற்றவருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது.இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து உலகமே வெகுண்டெழுந்தது. இதனைத் தொடர்ந்து தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ் , ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் 1887 - ம் ஆண்டு நவம்பர் 11 - ம் நாள் தூக்கிலிடப்பட்டனர். மேலும் லூயிஸ் லிங்க் என்பவர் சிறையிலேயே தன்னை சிதைத்துக் கொண்டார். ஆகவே..... மற்றவர்களின் உடைமைகளைப் பறிப்பது சோசலிசம் இல்லை.சோசலிசம் என்பது ஒருவரது உடமைகளை திட்டமிட்டுப் பறிக்கும் சுரண்டல் காரர்களிடம் இருந்து , அதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமைப் பெற்ற அமைப்பே சோசலிசம் என தோழர் சாமுவேல் பீல்டன் நீதிமன்றத்தில் , உரையாற்றி தங்கள் கொள்கையை விளக்கினார்.எனவே சுரண்டப் படும் தொழிலாளர்களை திரட்டி !சோசலிச உணர்வை ஊட்டி ! முதலாளித்துவ அமைப்புகளை வேரறுத்து நடுங்கச் செய்தார். அதாவது முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தொழிலாளர்களை அடக்கவே, காவலர்களே குண்டு வீசி சதி செய்து தங்கள் அமைப்பு மீது குற்றம் சாட்டி மரண தண்டனையை தருவதற்கு திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிந்த போதும் மே தின தியாகிகள் அஞ்சாமல் பல காரியம் செய்தனர்.

    தமக்கு நீதி கிடைக்குமா? என அறியாத நிலையிலேயே அந்தக் கொலைக்களத்தையே தமது கருத்தை விளக்கும் அரங்கமாக மாற்றி பசுந்தோல் போர்த்திய முதலாளிகளின் உண்மை நிலை யை உலகிற்கு வெளிக்காட்ட, அன்று அவர்கள் நெஞ்சம் நிமிர்ந்து , நீதிமன்றம் தனில் தஞ்சம் அடைந்து  சோசலிச மேன்மையை மனிதகுலம் கூர்ந்து கவனிக்கும்   வண்ணம் அனல் பறக்க எடுத்துரைத்த விதம்  உலகையே திகைக்கச் செய்த செய்தியை , ஒவ்வொரு ஆண்டும் போற்றி அவர்களின் வீரத்திற்கு வணக்கம் செலுத்தும் வரலாறாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. உண்மையும் , நேர்மையும் நிறைந்த கூட்டமாகப் போராடியப் போதும் நீதிக்கு தண்டனையாக முதலாளித்துவம் வென்றது.வாய்மையாளருக்கோ மரண தண்டனை.அம் மரண தண்டனையையே, முதலாளித்துவத்தை வேரறுக்கும் மகத்தான சக்தியாக வீறுகொண்டு எழுந்து , உழைப்பாளர்கள் கொண்டாடும் உவகைக் கொள்ளும் உழைப்பாளர் தினமென உருவைக் கொண்டு  இன்றும் இயங்கும் பூமியை இயக்கிக் கொண்டுள்ளது என்பது மிகையல்ல. தோழர்களின் தியாக மரணத்திற்கு வணக்கம் செய்வோம் !தொழிலாளர் தினத்தைப் போற்றுவோம் !

Post a Comment

0 Comments