நிகழ்வுகள் - குறும்படத்திக்கு பாடல்
உறவை விட்டுப் பிரியும் போது
உள்ளம் ஏனோ தடு மாறுதே !
உடலை விட்டுப் போகும் உயிராய்
இல்லம் விட்டு மனம் நோகுதே !
அன்பைத் தேடி அலையும் வாழ்வில்
சொந்தம் விட்டுத் தூரம் போக
கண்கள் ரெண்டும் வறண்டு போகும் !
வாழும் நாளும் பாலை ஆகும் !
வலிகள் தூக்கி நடக்கின்றேனே !
வசந்தம் மறந்து கடக்கின்றேனே !
காதல் மொழிகள் சொல்லி வந்தாள்
கவலை ஏனோ இன்று தந்தாள்
கரம் பிடித்து வந்த பெண்தான்
கைவிரித்துச் சென்று விட்டாள்
என்னுள் பாதி இருந்தவள் தான்
என்னை இப்போ கொன்று விட்டாள்
மாற்றம் வருமே என்று நினைத்தேன்
ஏமாற்றம் வரவே கண்கள் நனைத்தேன்
உறவும் என்னைப் புரிய வில்லை
இனி செல்லும் பாதை தெரியவில்லை ( காதல் மொழி )
பாடல்
மு.மகேந்திர பாபு
பேசி - 97861 41410
0 Comments