10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு - 2 மதிப்பெண் முதன்மை வினாக்களும் விடைகளும் - பகுதி -2 / 10th SOCIAL SCIENCE - HISTORY - IMPORTANT 2 MARK - QUESTION & ANSWER - PART - 2

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற

 உதவும் வினாக்களும் விடைகளும் .

2 மதிப்பெண் வினாக்களும் விடைகளும்

              வரலாறு - பகுதி - 2

அலகு 6 முதல் 10  வரை

                      அலகு 6

1 பாளையக்காரர்களின் கடமைகள் யாவை? 

* வரி விதிப்பது

* நிலப்பகுதிகள் நிர்வகிப்பது

* வழக்குகள் விசாரிப்பது

* சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது

* மற்றும் காவல் காக்கும் கடமை.

2 கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.

* கிழக்கு பாளையங்கள் - சாத்தூர், நாகலாபரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி

* மேற்கு பாளையங்கள் - ஊத்து மலை - தலைவன் கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம் பட்டி , சேத்தூர்.

3. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது? 

* கூடுதல் படைகளை நவாப் மாபூஸ்கானுக்கு அனுப்பினார்.

* பூலித்தேவர் திருவிதாங்கூர் பெரும் படை உதவியால் களக்காடு போரில் வெற்றி பெற்றார்.

* மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

4. கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?

* பரம்பரையாக பாளையக்காரர்கள் வசூல் செய்து வந்தனர்.

* இதை கம்பெனி நிர்வாகம் நீக்கியது.

* வரி வசூலிக்க ஆட்சியாளர்களை நியமனம் செய்தது.

* படைகள் மூலம் வரிவசூல் செய்தது.

5. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தில் (1801) கூறுகளைத் தருக.

* மருது சகோதர்கள் நாட்டின் விடுதலையை முன் நிறுத்தி செயல்பட்டார்கள்.

* 1801-ஜுன் மாதம் திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டனர்.

* இந்த அறிக்கை தமிழக பாளையக்காரர்களை ஒன்றாகச் சேர வைத்தது.

                             அலகு 7

1 ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

• மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்

* சமய இயக்க கிளர்ச்சிகள்

* சமூகக் கொள்கை

* பொது மக்களின் கிளர்ச்சி

2 வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.

1 சதாரா

2. சம்பல்பூர்

3. ஜான்சி 

4. நாக்பூர்

5. பஞ்சாபின் சில பகுதிகள்

3. வளங்கள் சுரண்டப்படுவது ( செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன? 

* இங்கிலாந்து தொழிற்சாலைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் தரும் நாடாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை வைத்தார்கள்.

* அவர்கள் உற்பத்தி பொருளை விற்கும் சந்தையாக இந்தியா மாறியது .

4. தன்னாட்சி ( ஹோம் ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.

* அரசியல் சாசனப்படி பிரிட்டிஷ் ஆட்சியில் தன்னாட்சி அடைவது.

* டொமினியன் அந்தஸ்து பெறுவது.

* வன்முறையற்ற வழிகளில் இலக்குகளை அடைவது.

5. லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.

• தன்னாட்சி கொள்கையை காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஏற்றுக்கொண்டது.

* முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி வழங்குதல்.

                          அலகு 8

1 ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விவரிக்கவும். 

* 1919 ஏப்ரல் 13 பைசாகி திருநாள் அன்று ஜாலியன் வாலாபாக்கில் பொது மக்கள் கூடியிருந்தனர்.

* ஜெனரல் ரெஜினால்டு டயர் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

* பலர் படுகொலை - பலர் படுகாயம் அடைந்தனர்.

2 கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.

* முதல் உலகப்போருக்கு பின் துருக்கிய கலீபா கடுமையாக நடத்தப்பட்டார்.

* அவருக்கு ஆதரவாக இந்திய முஸ்லிம்கள் கிலாபத் இயக்கம் ஆரம்பித்தனர் .

3. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப் பெற்றார்?

* உத்திரபிரதேசம் சௌரி சௌரா என்ற இடத்தில் வன்முறை சம்பவம் வெடித்தது.

* ஆங்கில காவல் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

* இதனால் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்றார்.

4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

* சர். ஜான் சைமன் குழுவில் ஒரு இந்திய உறுப்பினர்கள் கூட இல்லை.

* இதனால் இந்தியர்கள் ஆத்திரமும், அவமானமும் அடைந்தனர்.

* எனவே சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது,

5. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?

* 1929 - டிசம்பர் மாதம் லாகூரில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.

* சுதந்திரம் வேண்டி இலக்கு, வன்முறையற்ற முறையில் முழுமையான சுதந்திரம் அடைவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

* இதுவே முழுமையான சுயராஜ்ஜியம் எனப்பட்டது.

6. பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.

* பகத்சிங் 1929 - மத்திய சட்டப்பேரவையில் புகைக்குண்டுகளை எறிந்தார்.

* எதிர்ப்புத் துண்டு பிரசுரங்களையும் வீசி எறிந்தார்.

* இன்குலாப் ஜிந்தாபாத் - பாட்டாளி வர்க்கம் வாழ்க என முழங்கினார்.

* இதனால் பகத்சிங்கிற்கு ஆங்கில அரசு மரண தண்டனை அளித்தது.

7. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

* காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்கும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது.

* ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் வேண்டி பேச்சு வார்த்தை நடத்தினர்.

                             அலகு 9

1 மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பை பட்டியலிடுக.

* அரசியலமைப்பு வழியில் போராடுதல்,

* குறிப்பாணை மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தல்.

* காலனிய சுரண்டலை மக்களிடம் தெரிவித்தல்.

2 திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.

* ஆங்கில அரசு வ.உசி. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா அவர்கள் மீதும் தேசத்துரோக வழக்குப் போட்டு அவர்களை கைது செய்தது.

* இதனால் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது.

* தீ வைப்பு துப்பாக்கி சூடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.


3. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?

* நியூ இந்தியா - காமன் வீல் செய்தித்தாள்கள் மூலம் தம் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

* மாணவர்களைத் தம் இயக்கத்தில் சேர்த்தவர்.

* இந்தியாவிற்குத் தன்னாட்சி கிடைக்க பாடுபட்டார்.


                          அலகு 10

1. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.

* தமிழர்களின் பண்பாடு - பாரம்பரியம் அறிய முடிந்தது.

* தமிழர்களின் சமூக அடையாளங்கள் அறிய முடிந்தது.

* தமிழ் மொழி நூல்கள் அச்சில் ஏறியது.

* பழமை நுால்கள் வெளிவந்து அனைவரும் படித்தனர்.

2 . தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பினை நன்குப் புலப்படுத்துக.

* மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் கண்டுபிடித்தார்.

* ஆரிய குடும்ப மொழி கோட்பாட்டை விரிவுபடுத்தினார்.

* தமிழின் தொன்மையை நிலை நாட்டினார்.

3. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.

* சி. வை தாமோதரனார்

* திரு.வி.க

* உ.வே. சாமிநாதர்

* பாரதிதாசன்

* F. W. எல்லிஸ்

* பரிதிமாற் கலைஞர்

* ராபாட் கால்டுவெல்

* பி. சுந்தரனார்

* மறைமலை அடிகள்

4. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்து சமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

* சாதி வேறுபாடு இல்லாமல் கோவில்களில் நிர்வாக குழு உறுப்பினராக முடியும்.

* கோவில் சொத்துக்களை நிர்வாகம் செய்ய அனைத்து தரப்பு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.

5. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

* தமிழில் திரவிடன்

* ஆங்கிலத்தில் - ஜஸ்டிஸ்

*தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா

6. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.

* ஆணாதிக்கச் சமூகத்தை வெறுத்தார்.

* குழந்தைத் திருமணம், தேவதாசி முறையை வெறுத்தார்.

* பெண்ணடிமையை வெறுத்தார்.

* பெண்களுக்கும் தமது முன்னோர்களின் சொத்தில் பங்கு உண்டு எனக் கூறியவர்.

* இவர் எழுதிய “ பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.



*************   ***********   ************

Post a Comment

0 Comments