10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு 2மதிப்பெண் வினாக்களும் விடைகளும் / 10th SOCIAL SCIENCE - HISTORY - 2 MARK - IMPORTANT QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற

 உதவும் வினாக்களும் விடைகளும் .

2 மதிப்பெண் வினாக்களும் விடைகளும்.

                        வரலாறு - பகுதி - 1

          அலகு 1 முதல் 5 வரை

அலகு 1

1. சீன ஜப்பானியப்போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

* ஜப்பான் சீனாவின் மீது 1894 ல் வலுக்கட்டாயமாக போர் செய்து அதில் வெற்றி பெற்றது.

- லியோடாங் தீபகற்பகத்தை ஆர்தர் துறைமுகத்துடன் இணைத்தது.

2 மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக. 

* இங்கிலாந்து - பிரான்ஸ் - ரஷ்யா

3. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை? 

* இங்கிலாந்து - கண்மூடித்தனமான நாட்டுப்பற்று

* பிரான்ஸ் - அதி தீவிரப்பற்று

* ஜெர்மனி - ஜெர்மானிய கலாச்சாரம் உயர்வு

4. பதுங்கு குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன? 

* போர்வீரர்களால் தோண்டப்படும் பதுங்கு குழிகள்.

* முதல் உலகப்போரின்போது அறிமுகம் ஆனது,

* வீரர்கள் தங்களை பாதுகாக்க தோண்டினார்கள்.

5. முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?

* துருக்கியை மீண்டும் சிறந்த நாடாக மாற்றினார்.

* நவீளமாக்சி எதிர்மறை எண்ணங்களை போக்கினார்.

* சுல்தானியத்திற்கும், கிலாபத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

6. சர்வதேச சங்கம் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக. 

* சங்கத்திற்கு பொதுவான ராணுவம் கிடையாது,

* இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி சங்கத்திற்கு கட்டுப்பட மறுத்தது.

* கூட்டுப்பாதுகாப்பு முறையை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

                               அலகு 2

1. இந்தோ - சீனாவில் நடைபெற்ற “ வெள்ளை பயங்கரம் ” குறித்து நீங்கள் அறிந்ததென்ன? 

* வியட்நாம் விடுதலை வீரர்கள் பிரெஞ்சு கவர்னரை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

* விவசாயிகள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் புரட்சி செய்தனர்.

* பிரெஞ்சு அரசு புரட்சியை அடக்கியது. ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக்கொன்றது.

2 ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும். 

* இங்கிலாந்து தனக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்த நஷ்டத்தை போக்க அதன் காலனி நாடுகளின் மீது சுமத்திய உச்சி மாநாடு,

* இதன்படி இங்கிலாந்து நாட்டு பொருள்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

3. பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது ?

* இந்திய வேளாண்மை வீழ்ச்சி அடைந்தது.

* உள்நாட்டு உற்பத்தி அதிகமாக பாதித்தது,

* விவசாயிகள் வரி அதிகம் செலுத்த வேண்டும்.

* உயிர்பிழைக்க அவர்களின் தங்கம், வெள்ளியை விற்றனர் .

                               அலகு  3

1. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களை குறிப்பிடுக.

* ஜெர்மனியின் படைபலம் குறைக்கப்பட்டது.

* அது நேசநாடுகளுக்கு போர் இழப்பீடு தரவேண்டும்.

* ஜெர்மனியின் பல பகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும்.

2 முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்? 

* ஜெர்மனி - ஹிட்லர்

* இத்தாலி - முசோலினி

ஸ்பெயின் - பிராங்கோ

3. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி? 

* அமெரிக்க ஹவாய் தீவில் முத்து துறைமுகம் உள்ளது,

* 1941ஆம் ஆண்டு அதன் மீது ஜப்பான் திடீர் தாக்குதல் நடத்தியது.

* இதில் பல அமெரிக்க போர்க்கப்பல்கள் சேதம் அடைந்தன.

* பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்,

                                      அலகு 4 இல்லை


                          அலகு 5

1 மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.

* எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே இருக்கிறார்.

* அவரே நிலையானவர் . எங்கும் நிறைந்திருப்பார்.

* நாம் அவரை வணங்கினால் வீடுபேறு அடையலாம்.

2. சமூக சீர்திருத்தங்களுக்கு மகாதேவரானடே பங்களிப்பைக் குறிப்பிடுக.

* விதவை மறுமணச் சங்கம்

* தக்காண கல்விக் கழகம் ஆரம்பித்தார்.

* சாதி மறுப்பு திருமணம்

* சமபந்தி

* பெண்கள் முன்னேற்றம்

3. ராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக. 

* செடி கொடிகளின் மீது தனது அன்பு இரக்கத்தை காட்டினார்.

* துன்பப்படும் உயிரினங்கள் மீது இரக்கம் கொண்டவர்.

* பசிக் கொடுமையை போக்க சத்திய தரும சாலை என்ற இலவச உணவகத்தை திறந்தார்.

* இவரது பாடல்கள் திரு அருட்பா எனப்படும்.

4. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை?

* குழந்தை திருமணம் ஒழிப்பு

• சதி எனும் உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு,

* விதவை மறுமணம் ஆதரிப்பு

* பெண்கள் முன்னேற்றம் ஆதரிப்பு

. குழந்தைகள் நல விடுதி, விதவைகள் காப்பகம்

5. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

• ஜோதிபா பூலே 1852 ஆம் ஆண்டு புனேவில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக முதல் பள்ளியை திறந்தார்.

* விதவைகள் காப்பகங்கள் உருவாக்கினார்


Post a Comment

0 Comments