தேர்வுக்காலம் - சிறுவர் பாடல்
அன்புத் தம்பி தங்கைகளே !
அருகில் வந்தது தேர்வுநாள் !
ஆண்டு ஒன்று நிறைந்திட
உன்னறிவை அறிவது தேர்வுத்தாள் !
கற்ற கல்வி யாவையும்
கவனமாய் மனத்தில் கொண்டே
கேட்கும் வினாக்கு விடைதனை
நன்றாய் நீயும் எழுதிடுவாய் !
விளையாட்டைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
வீதியில் நடமாடுவதை விட்டுவிட்டு
வீட்டில் அமர்ந்தே இனிநீயும்
விருப்பத்தோடு பாடம் படித்திடுவாய் !
குருட்டு மனனம் தவிர்த்தே
மனத்தில் நன்கு பதிந்தபின்னே
மகிழ்வோடு பாடம் படித்தே
மதிப்பெண் பெற்றே வென்றிடுவாய் !
எதிர்காலம் இனிதே வளமாகும்
ஏற்றம் கண்டு வாழ்ந்திடுவாய்
மாற்றம் செய்வது மதிப்பெண்ணாம்
மகிழ்ந்தே நீயும் கற்றிடுவாய் !
மு.மகேந்திர பாபு ஆசிரியர் ,
அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி ,
இளமனூர் , சிலைமான் ( வழி )
மதுரை - 625 201
பேசி - 97861 41410
0 Comments