10 ஆம் வகுப்பு - தமிழ் - பா நயம் பாராட்டல் - வினா எண் 43 / 10th TAMIL - PANAYAM PARATTAL - QUESTION NO 43

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

பொதுத்தேர்வில் வெற்றி 

வினா எண் - 43

பா நயம் பாராட்டல்

மலர்ந்தும் மலராத பாதிமலர்போல

          வளரும் விழி வண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

            விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

              நடந்த இளந்தென்றலே -  வளர்

பொதிகை மலர் தோன்றி மதுரை நகர் கண்டு

                பொலிந்த தமிழ் மன்றமே!

                        கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

திரண்ட கருத்து:

       கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றாக 'இளந்தென்றல்' காற்றைத்  தனது பாடலில் குறிப்பிடுகிறார். தென்றல் காற்று மிகவும் இனிமையானது

மோனைநயம் :

முதலெழுத்துக்கள் ஒன்றி வருவது மோனைநயம் ஆகும்.

மலர்ந்தும் - மலராத

நதியில் - நடந்த

எதுகைநயம் :

இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

மலராத - மலர்ந்தும்

விடிந்தும் - விடியாத

முரண்தொடை :

எதிர்எதிரான சொற்கள் வருவதால் முரண் தொடை அமைந்துள்ளது.

மலர்ந்தும்  - மலராத

விடிந்தும்  - விடியாத

இயைபுநயம் :

கவிஞர் இப்பாடலில் இயைபுநயம் தோன்றப் பாடியுள்ளார்.

வண்ணமே - அன்னமே - மன்றமே

அணிநயம் :

இப்பாடல் உவமை அணியில் இடம்பெற்றுள்ளது.

பொருள் நயம் :

கவிஞர் இப்பாடலைப் பொருள்நயம் தோன்றப் பாடியுள்ளார்.


Post a Comment

0 Comments