மே 1 , சர்வதேச உழைப்பாளர் தினம் - மேதினக் கவிதை / MAYTHINAK KAVITHAI - GREEN TAMIL.IN

 


                  உழைப்பாளர் தினம்                                                   

                         01• 05 • 2022


மெய் வருத்திய மே தினம் !

மேன்மை கண்ட மேதினம்!

மெய்மைப் புகட்டிய மேதினம்!

உழைப்புக்கேற்ற ஊதியம் மட்டுமின்றி 

உழைக்கும் நேரமும் முதன்மையன்றோ !

அது மனித உரிமையின் முறையன்றோ!

மாக்களோடு மனிதனுமே அலைந்து திரிந்து 

களைத்து அதுவிடுத்து துளிர்த்து வளர...

மாற்றம் காண நெறிகண்ட ...

மூலதனமே உழைப்பாமே!

தேனீ எறும்புகளை கண்ணுற்று தேடி

 அமைத்த பாதையிது ! 

தேனாய் வாழ்க்கை வாழ்வதற்கு 

நீரைத் தேடும் வேரைப் போல்

முயற்சி தனை துணை 

கொண்டு 

முதன்மைக் காவியம் பல கண்டான்!

முனைப்பும் உழைப்பும் கைக்கொண்டான் !

மண்ணையும் விண்ணையும் வசம்கொண்டான் !

உழைப்பும் முயற்சியும் மூலதனம்!

உழைப்பவன் வாழ்வில் இல்லை கனம் !

உழைப்பில்லா உடலே சவமாகும் !

உழைத்தால் உலகம் சமமாகும் !

தனிமனித உழைப்பை சுரண்டாது!

தன்னலமெல்லாம் தகர்த்தெறிந்து 

முதலாளித்துவத்தை தாம் வென்ற 

வீர தோழர் தாழ் பணிந்து......!

கடின உழைப்பை மூலதனமாக இட்டு...!

வாழ்வின்  உயரத்தை எட்டு.!

வாசம் வீசும் மலராக ...

வாழ்க்கை உந்தன் வசமாகும்!

Post a Comment

0 Comments