பத்தாம் வகுப்பு - தமிழ்
1. இலக்கணக்குறிப்புகள்
1. பண்புத்தொகை :
(i) நிறம், வடிவம், சுவை, அளவு, குணம், எண்ணிக்கை ஆகியவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் 'மை' விகுதியும், ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
(ii) எ.கா. : செங்காந்தள் = செம்மை + காந்தள் (நிறம்)
வட்டத்தொட்டி = வட்டம் + தொட்டி (வடிவம்)
இன்மொழி = இனிமை + மொழி (சுவை)
நெடுந்தேர் = நெடுமை + தேர் (அளவு)
நன்செய் = நன்மை + செய் (குணம்)
மூவேந்தர் = மூன்று + வேந்தர் (எண்ணிக்கை)
பாடப்பகுதிகளில் இடம்பெற்றுள்ள பண்புத்தொகைகள் :
மூதூர்
நன்மொழி
செந்தீ
செந்தமிழ்
செந்தாமரை முத்தமிழ்
முச்சங்கம்
நெடுந்திரை
நெடும்படை நெடுவரை
இளங்கூழ்
அரும்பெறல்
2 . வினைத்தொகை:
(i) காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் அமைந்து நிற்பது வினைத்தொகை ஆகும். காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை எனப்படுகிறது. இது மூன்று காலங்களையும் உணர்த்தி வரும்.
(ii) எ.கா. :
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
வீசுதென்றல் வீசிய தென்றல் வீசுகின்ற தென்றல் வீசும் தென்றல்
கொல்களிறு கொன்ற களிறு கொல்கின்ற களிறு கொல்லும் களிறு
பாடப்பகுதிகளில் இடம்பெற்றுள்ள வினைத்தொகைகள் :
உறுதுயர்
வளர்வானம்
பயில் தொழில்
காய்மணி
உய்முறை
செய்முறை
வருபுனல்
பெயரெச்சம் :
(i) முற்றுப் பெறாத வினையானது ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சம் எனப்படும். 'அ' என்ற விகுதியைக் கொண்டு இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உணர்த்தும்.
படித்த பையன்
- இறந்தகாலம் (த் + அ)
படிக்கின்ற பையன்
- நிகழ்காலம் (+ அ)
'உம்' என்ற விகுதியைக் கொண்டு எதிர்காலத்தை உணர்த்தும்
படிக்கும் பையன்
- எதிர்காலம் (க்+ உம்)
(i
1 Comments
10thtamilbook
ReplyDelete