10 ஆம் வகுப்பு - தமிழ் - உரைநடை உலகம் - மூன்று மதிப்பெண் வினா & விடை / 10th TAMIL - URAINADAI ULAGAM - 3 MARKS - QUESTION & ANSWERS

 


பத்தாம் வகுப்பு - தமிழ் 

பொதுத்தேர்வில் வெற்றி !

பகுதி 3 பிரிவு 1, பிரிவு 2 (வினா எண்29 முதல் 34 வரை)

மூன்று மதிப்பெண் வினாக்கள்

வினா எண் 34 கட்டாய வினா மனப்பாடச் செய்யுள் பகுதி 

(உரைநடை உலகம்)

1.புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது இதுபோல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.

1. நெல் நாற்றை நட்டான்.

 2.வாழைக்கன்றை நட்டான்

3. தென்னம்பிள்ளை நட்டான். 

4 கத்திரி நாற்றை நட்டான்.

5. மாங்கன்று நட்டான்.

2. தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்: சிற்றகல் ஒளி

பொருள் : சென்னையைக் காக்க ம.பொ.சி. அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் என்று கூறினார்.

இடம்: சென்னை மாநகராட்சி சீறப்புக் கூட்டம் ஒன்றில் சென்னை பற்றிய தீர்மானத்தைமுன்மொழிந்து ம.பொ.சி. அவர்கள் கூறியது.

விளக்கம்: 

      ஆந்திரத்தின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்று கூறியபோது, சென்னையைக் காக்க ம.பொ.சி. அவர்கள் "தலையைக் கொடுத்தேனும்
தலைநகரை மீட்போம்" என்று கூறினார். தீர்மானம் 25.03.1953 இல் நிறைவேற்றப்பட்டது.

3. பத்தியைப்படித்து மையக்கருத்தை எழுதுக. (புத்தகம் பக்க எண்:179 - சிறுவினா 5)

விடை: 

மையக்கருத்து: 

             மெய்க்கீர்த்தி என்றால் என்ன என்பதையும் அது சாசனத்தில்
அமையும் முறைப்பற்றியும், முதலாம் இராசஇராசனின் மெய்க்கீர்த்திப் பற்றியும் அதன் அமைப்பு, சிறப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது.

4. சங்க இலக்கியம் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

1.அறத்தில் வணிகம் கூடாது
கைமாறு கருதாத உதவியே அறம். இது இன்றைய காலத்தேவை.

2. கொடை : ஈகைக் குணம் குறைந்துவிட்டது. இது அதிகரிக்க வேண்டும்.

3.பொய்யாச் செந்நா - என்பது சங்க இலக்கியம். என்றூர்: பொய் சொல்லக் கூடாது.

4.போர்அறம்: தமிழர் போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். தம்மைவிட வலிமை குறைந்தவர்களோடு போர் செய்யக் கூடாது.

5*சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

உரைக்குறிப்பு

சுற்றுச்சூழலின் சிறப்பு - சுற்றுச் சூழலின் அவசியம்: மாசுபடுதலுக்கான
காரணங்கள் - அரசின் திட்டங்கள் விழிப்புணர்விற்கு நமது பணிகள் தவிர்க்க வேண்டுவன- கடைப்பிடிக்க வேண்டுவன- நம்பிக்கை உறுதிமொழி.

6 .ஜெயகாந்தன் தன் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத்
தயங்குவதில்லை என்று அசோகமித்ரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் தர்க்கத்திற்கு அப்பால் கதைமாந்தர் வாயிலாக விளக்குக.

                    கதாசிரியருக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாட நினைக்கிறார். பிச்சைக்காரனுக்கு இரண்டனா போடுகிறார். பயணச் சீட்டுக்கான பணம் குறைகிறது பிச்சைக்காரனுக்குப்
போட்டதில் ஒரு அணா எடுக்கிறார். இது தர்மமா? என்று பிச்சைக்காரர் கேட்கிறார்.

1. செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. (வினா எண் 31)

   பூ உண்டு ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் ஆலமலர், பலாமலர்.

              மலர் உண்டு பெயரும் உண்டு ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் சுள்ளிமலர், பாங்காமலர்.

       அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.பயன்பாடு, நாற்றம், மக்களது
விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சீல எளியவை ஆகின்றன. அவையாவன நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப்பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி,
முருங்கை.

           இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும், பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும் மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
                                        கோவை இளஞ்சேரன்

வினாக்கள்:

1. மலர் உண்டு, பெயரும் உண்டு - இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.

விடை : மலரும் பெயரும் உண்டு.

2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

விடை 

         மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

விடை 1. வாழைப்பூ சமைலுக்கு உதவும். பெண்களின் கருப்பைக்கு நல்ல பலமளிக்கும்.

2. வேப்பம்பூ - துவையல், ரசம் செய்து உணவாக அருந்த குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும்.

4. அரியமலர் -  இலக்கணக்குறிப்பு

பெயரெச்சம்

5. பிழைகளை நீக்குக. 

மறத்தின் பரித்து மனத்தை

விடை : மரத்தின் பறித்து மணத்தை

*************         ***-*****      **---**----****

Post a Comment

0 Comments