பத்தாம் வகுப்பு
அணிகள்
1 கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணியாகும்.
எ.கா. 'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட'
பாடல் பொருள் : கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பது போலக் கை காட்டியது.
அணி விளக்கம்:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
(எ.கா)'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
பாடலின் பொருள்:
கோட்டை மதில்மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கைகாட்டியது என்பது பொருள்
அணிப்பொருத்தம்:
கோவலன், கண்ணகி மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால் இளங்கோவடிகள் கோவலன் மதுரை மாநகருக்குள் வந்தால் பின்பு கொலை செய்யப்படுவான் எனக்கருதி 'வரவேண்டா' எனஅசைவதாகத் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.
1 Comments
DEEPIKA
ReplyDelete