8 ஆம் வகுப்பு - தமிழ் - மதுரை மாவட்டம் - முழு ஆண்டுத்தேர்வு - வினா & விடை - ஏப்ரல் 2022 / 8th TAMIL - MADURAI DISRTICT - ANNUAL EXAM - APRIL 2022

 


8 ஆம் வகுப்பு - தமிழ் 

முழு ஆண்டுத் தேர்வு - 2022 

மதுரை மாவட்டம் - ஏப்ரல் 29 - 2022

வினாக்களும் விடைகளும்

**************   **************   *************

பதிவு எண்.

காலம் : 2.30 மணி

மதிப்பெண்கள் : 100

பகுதி - 1                                            10 X 1 = 10

I சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 ) மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல்

அ) வைப்பு

ஆ) கடல்

இ பறவை

ஈ) ஆழி

விடை : அ ) வைப்பு

2. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்

அ) பாரதிதாசன் 

ஆ) தந்தை பெரியார் 

இ)  வ.உ.சிதம்பரனார் 

ஈ) பெருஞ்சித்தனார்

விடை : ஆ ) தந்தை பெரியார்

3 ) வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்

அ ) தலை 

ஆ) மார்பு

இ மூக்கு

ஈ) கழுத்து

விடை : ஆ ) மார்பு 

4. ஒன்றே ------- என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

அ ) குலம்

ஆ) குளம்

இ ) குணம்

ஈ) குடம்

விடை : அ ) குலம்

5 ) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

அ) இராதா கிருஷ்ணன்

ஆ) அம்பேத்கார் 

இ நௌரோஜி

ஈ ஜவஹர்லால் நேரு

விடை : ஆ ) அம்பேத்கர்

6 ) சேரர்களின் தலைநகரம் 

அ ) காஞ்சி 

ஆ ) வஞ்சி

இ ) தொண்டி

ஈ) முசிறி

விடை : ஆ ) வஞ்சி

7 ) உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று

அ) தலைவலி

ஆ) காய்ச்சல் 

இ புற்றுநோய்

ஈ )  இரத்தக்கொதிப்பு

விடை :  ஈ ) இரத்தக்கொதிப்பு

8 ) அம்பேத்கரின் சமூகப்பணியை பாராட்டி இந்திய அரசு ....... விருது வழங்கியது.

அ) பத்ம ஸ்ரீ

ஆ ) பாரத ரத்னா

இ ) பத்ம விபூசன்

ஈ) பத்ம பூசன்

விடை :  ஆ ) பாரத ரத்னா

9 ) பிறிது மொழியில் அணியில் -----மட்டும் இடம்பெறும்.

அ ) உவமை 

ஆ ) வேற்றுமை

இ) தொடை

ஈ) சந்தம்

விடை :  அ ) உவமை

10 ) முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ------ எனப்படும்.

அ) முற்று

ஆ) எச்சம்

இ )  முற்றெச்சம்

ஈ) வினையெச்சம்

விடை :  ஆ ) எச்சம்

II ) கோடிட்ட இடத்தை நிரப்புக.      3 X 1 = 3

11 ) மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ------ 

விடை :  சேலம்

12 ) வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ----- இன்பம் ஆகும்.

விடை : காவிய

13 ) பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் -------- சென்றார்.

விடை : இலண்டன்

III பொருத்துக.                        4 x 1 = 4

14. வெண்பா - செப்பலோசை

15. இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

16. நட்பு - சிரித்து மகிழ மட்டுமன்று

17. கலிப்பா -  துள்ளல் ஓசை

                            பகுதி-II

IV ) எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளி.                           10 × 2 = 20

18 ) வினா சொற்களை பயன்படுத்தி எழுதுக.

அ) உன் பள்ளியின் பெயர் ------- ? 

விடை : உன் பள்ளியின் பெயர் என்ன ?

ஆ) உன் ஊர் ------- ?

விடை : உன் ஊர் எது ?

19 ) மரபுச் சொற்களை எழுதுக. 

அ) மயில் - (கூவும், அகவும்) 

விடை : மயில் அகவும்

ஆ) பால் - (குடி, பருகி)

விடை : பால் பருகி

20. சரியான இணைச்சொற்ளை எடுத்தெழுதுக. (ஆடி அசைந்து, மேடுபள்ளம்)

அ) ஆற்று வெள்ளம் ------ பாராமல் ஓடியது.

விடை : மேடு பள்ளம்

ஆ) திருவிழாவில் யானை ------ வந்தது.

விடை : ஆடி அசைந்து

21 ) தொகை சொற்களை விரித்தெழுதுக.

நாற்றிசை - கிழக்கு , மேற்கு , வடக்கு , தெற்கு 

ஆ) மூவேந்தர் - சேர , சோழ , பாண்டியர்.

22. தமிழ் எண் உரு எழுது : 

அ) 20 - உ0

ஆ) 63 - சாங

23. எதுகை மோனைச் சொற்களை எடுத்தெழுது.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.

எதுகை : 

குன்றின் 

குன்றுவ     - ன் - எதுகை

மோனை : 

குன்றுவ 

குன்றின்  : கு - மோனை

24. சொற்றொடரில் அமைத்து எழுதுக. 

அ) கல்வி 

உண்மையான செல்வம் நம் அனைவருக்கும் கல்வியே ஆகும்.

ஆ) அணிகலன்

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிகலன் அணிய விரும்புகிறார்கள்.

25 ) பின்வரும் வினாக்களைப் படித்து இருவினாக்களுக்கு விடை தருக.

அ) ஆடை நெய்வது எதனாலே? அறிவை பெறுவது எதனாலே?

விடை : நூல்

ஆ) கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய் சூடுவது எது?

விடை : மாலை

26. எதிர்ச்சொல்லை எழுதுக. 

அ) பிறப்பு X இறப்பு 

ஆ) இன்பம் X துன்பம்

27. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

அ) கடமையைச் செய்  - கட்டளைத் தொடர்

ஆ) நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருகிறாய்? - வினாத்தொடர்

28 ) பால் எத்தனை வகைப்படும்?

               பால் ஐந்து வகைப்படும்.

29 ) ஐந்திணைகள் யாவை?

* குறிஞ்சி

* முல்லை 

* மருதம்

* நெய்தல்

* பாலை

                        பகுதி - III

அடிபிறழாமல் எழுதுக.         4+2=6

30. அ) `ஒன்றே குலம்' எனத் தொடங்கி 'உய்ம்மினே' என முடியும் மனப்பாடப் பாடலை எழுதுக.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே


 ஆ) `படும்' என முடியும் திருக்குறளை எழுதுக.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.


                            பகுதி - IV

VI ) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி.

31 ) ஓவிய எழுத்து என்றால் என்ன?

           தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவத்தை ஓவிய எழுத்து என்பர்.             

32. சான்றோர்க்கு அழகாவது எது?

            நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

33. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?

       " என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ  , அதற்காகப் போராடுவேன் ; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் " என்று கூறினார்.

34.எம்.ஜி.ஆர்.நாடகத்தறையில் ஈடுபட காரணம் என்ன?

        வறுமை காரணமாக எம்.ஜி.ஆர் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் நாடகத்துறையில் ஈடுபட்டார்.

35. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

       கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் ஓடை ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.

36. எது பெருமையைத் தரும்?

                   காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.

37. அயோத்திதாசரிடம் இருந்து ஐந்து பண்புகள் யாவை?

* நல்ல சிந்தனை

* சிறப்பான செயல்

* உயர்வான பேச்சு

* உவப்பான எழுத்து

* பாராட்டத்தக்க உழைப்பு

VII ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.     3 × 3 = 9

38 ) வேற்றுமை அணி என்றால் என்ன?

         இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக்கூறி , பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி எனப்படும்.

39. தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

* தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! 

* ஆகாயத்தால் சூழப்பட்ட   எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! 

* ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! 

* எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! 

* எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி   மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக! 

* பொருந்தாத பழைய கருத்துகளால்   உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! 

40 ) வினை முற்று என்றால் என்ன?

       பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது  வினை முற்று எனப்படும்.

எ.கா :  மலர்விழி எழுதினாள்.

கண்ணன் பாடுகிறான்.

மாடு மேயும்.

41 ) இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவா அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

         1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29 ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர்   தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது. 

இக்குழுவில், கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது. 

                  அம்பேத்கர் தலைமையிலான   சட்ட வரைவுக்குழு, அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய   நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக்கூறுகளை, இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.

42. தமிழ்மொழியின் வுளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?

 * தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.

* மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.

* தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப்பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

VIII எவையேனும் ஒன்றுக்கு விடையளிக்க.                             1 X 8 = 8

43 ) எம்.ஜி.ஆர்.ஆரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?

44 ) பூனா ஒப்பந்தம்பற்றி எழுதுக.

       பூனா ஒப்பந்தம்

                      ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட   வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர்   வலியுறுத்தினார். 

       இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. 

                   ஆனால், இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக 1931 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து   கொண்டனர். 

        அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

45 ) பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?


IX ) எவையேனும் ஒன்றுக்கு விடையளி.'

1 X 8 = 8

46 ) அறிவுசார் ஔவையார் - என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.

47. மனிதயந்திரம் கதையை மீனாட்சி சுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.

48. காற்று கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

பகுதி - v


X ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. 1 x 10 = 10

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

முன்னுரை - நோய்வரக் காரணங்கள் - நோய்தீர்க்கும் வழிமுறைகள் - வருமுன்காத்தல் -உணவும் மருந்தும் உடற்பயிற்சியின் தேவை - முடிவுரை.


XI ) கீழ்காணும் அறிவிப்பைப் படித்து உன் தோழிக்கு கடிதம் எழுதுக.

விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற உங்கள் தோழிக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

பகுதி - VI     2 x 1 = 2

XII கலைச் சொற்களை எழுதுக.

i) confidence - நம்பிக்கை

ii) University  - பல்கலைக்கழகம்

******************   ***********   ************

விடைத்தயாரிப்பு

திருமதி. பௌசி நிஷா பேகம் ,

தமிழாசிரியை , மதுரை.

*****************   **************  ***********

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு .

தமிழாசிரியர் , மதுரை - 96861 41410

**************** ************   **************

Post a Comment

3 Comments