பத்தாம் வகுப்பு - தமிழ்
உரைநடை உலகம் -
குறுவினாக்கள் - வினா & விடை
முன்னுரிமைப் பாடங்கள்
பகுதி 2 பிரிவு 1 மற்றும் பிரிவு 2 (வினாஎண் 16 முதல் 21 வரை)
இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( வினா எண்:21 கட்டாய வினா)
இயல் 1.
1. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
1) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன - சரி
2) ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன - சரி
3) ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன - பிழையான தொடர். ஏனெனில் தாற்றில்தான் சீப்புகள் இருக்கும்.
இயல் - 2
2. ' நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' இது போன்று உலகக் காற்று விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
உயிர்களின் சுவாசம் காற்று
காற்றின் சுவாசம் மரம்
மரத்தின் சுவாசம் மனிதர்
மரங்களுக்கு சுவாசம் கொடுப்போம் மரங்களை வளர்ப்போம்
இயல் - 7
3. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
வறுமையில் பசியால் வாடிய போதும் புத்தகங்கள் வாங்கிப் படித்தார்.
இயல் - 8
4 குறிப்பு வரைக - அவையம்
அவையம் - மன்றம்.
அவையம், அரசனின் ஆட்சிக்குத் துணை புரிந்தது.
உறையூரிலும் மதுரையிலும் அவையம் இருந்தது.
இயல் - 9
5. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. இத்தொடரை இரு தொடர்களாக ஆக்குக.
1. நான் எழுதுவதற்கு ஒரு துாண்டுதலும் உண்டு.
2. நான் எழுதுவதற்கு ஒரு காரணமும் உண்டு.
0 Comments