10 தமிழ் - ஆயத்தத் தேர்வு - மதுரை மாவட்டம் - பாடம் முழுமையும் - வினா & விடை / 10th TAMIL - PREPARATORY EXAM - APRIL - 2022 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ்              Greentamil.in

ஆயத்த தேர்வு 2021 - 2022 ( 11 - 04 - 2022 )

மதுரை மாவட்டம்

நேரம் : 3.00 மணி             மதிப்பெண் : 100

பகுதி -1                   (மதிப்பெண்கள் : 15)

i . அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினை சேர்த்து எழுதவும்     15x1 = 15

1.வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை

அ ) குலை வகை

ஆ. மணி வகை

இ. கொழுந்து வகை

ஈ ) இலை வகை

விடை : ஆ ) மணி வகை 


2. ' உனதருளே பார்ப்பன் அடியேனே' -யாரிடம் யார் கூறியது?

அ ) குலசேகராழ்வாரிடம் இறைவன் 

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ ) மருத்துவரிடம் நோயாளி

ஈ ) நோயாளியிடம் மருத்துவர்

விடை : ஆ ) 
இறைவனிடம் குலசேகராழ்வார்

3 ) ' இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது ------- வினா,

'அதோ அங்கே நிற்கும்" என்று மற்றொருவர் கூறியது ..........விடை )

அ ) ஐய வினா, வினா எதிர் வினாதல் 

ஆ )  அறிவினா, மறைவிடை

இ ) அறியாவினா, சுட்டுவிடை

ஈ ) கொளல் வினா, இனமொழி விடை

விடை : இ ) அறியாவினா , சுட்டுவிடை 

4 ) குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள் ...........

அ ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் 

ஆ குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிங்கள் 

ஈ ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை : இ ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிங்கள்


5. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி. கருதியது .......

அ திருக்குறள்

ஆ. புறநானூறு

இ ) கம்பராமாயணம்

ஈ சிலப்பதிகாரம்

விடை : ஈ ) சிலப்பதிகாரம் 

6 ) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ ) உதியன் ; சேரலாதன்

ஆ. அதியன்; பெருஞ்சாத்தன்

இ ) பேகன் ; கிள்ளிவளவன்

ஈ ) நெடுஞ்செழியன் : திருமுடிக்காரி

விடை : ஆ ) 
அதியன்; பெருஞ்சாத்தன்

7 ) பூக்களைக் குவித்துப் பூவே புரிவோடு
காக்க ------ , ------- 
வேண்டினார்

அ ) கருணையன் எலிசபெத்துக்காக

ஆ  எலிசபெத் தமக்காக

இ கருணையன் பூக்களுக்காக

ஈ ) எலிசபெத் பூமிக்காக

விடை : அ ) கருணையன் எலிசபெத்துக்காக

8. சிலப்பதிகாரத்திலும் , மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ ) அகவற்பா

ஆ )  வெண்பா

இ ) வஞ்சிப்பா

ஈ  கலிப்பா

விடை : அ ) அ ) அகவற்பா

9 ) எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ ) கூவிளம் தேமா மர்

ஆ கூவிளம் புளிமா நாள்

இ தேமா புளிமா காசு

ஈ ) புளிமா தேமா பிறப்பு

விடை : அ ) அ ) கூவிளம் தேமா மர்

10  ஜெயகாந்தனைக் கா. செல்லப்பன் எப்படிக் குறிப்பிடுகிறார்?

அ ) சிறுகதை மன்னன்

ஆ  படிக்காத மேதை

இ வார்த்தைச் சித்தர்

ஈ ) புதினத்தின் தந்தை

விடை : ஆ )  படிக்காத மேதை

11. 'உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறிகிறோம்' - பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ ) உருவகம் எதுகை

ஆ  மோனை, எதுகை

இ  முரண். இயைபு

ஈ ) உவமை, எதுகை

விடை : ஆ ) மோனை, எதுகை

பாடலை படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக

 ' தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா

வளம் தயை மயங்கிய நனந்தலை மறுகும்;

12 )   இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ ) மெய்க்கீர்த்தி

ஆ ) தேம்பாவனி

இ சிலப்பதிகாரம்

ஈ கம்பராமாயணம்

விடை : இ ) சிலப்பதிகாரம்

13. இப்பாடலின் ஆசிரியர்

அ கம்பர்

ஆ  வீரமாமுனிவர்

இ ) இரண்டாம் இராசராச சோழன்

ஈ இளங்கோவடிகள்

விடை : ஈ ) இளங்கோவடிகள்

14 ) தூசும் துகிரும் - இலக்கணக் குறிப்பு தருக

அ ) உம்மைத் தொகை

ஆ  எண்ணும்மை

இ ) பண்புத்தொகை

ஈ ) முற்றும்மை

விடை : ஆ ) எண்ணும்மை

15  'கூலம்' சொல் உணர்த்தும் பொருள்

அ )  நறுமணப் பொடி

ஆ ) எட்டு வகைத் தானியம்

ஆ  துணி

ஈ ) பவளம்

விடை : இ ) எட்டுவகைத் தானியம் 

பகுதி - II  (மதிப்பெண்கள் : 18)

                            பிரிவு -1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க    4x2=8

21 வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்

16 ) விடைகளுக்கு ஏற்ற வினாக்களை அமைக்க.

அ ) சொல்வாராய்ச்சியில் பாலாரும் வியந்த பெருமகனார் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.

வினா : சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார் ?

ஆ ) பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள்   காட்டுகின்றன.

வினா : சங்க  இலக்கியங்கள் காட்டும் அறம் யாது ?

17. வசன கவிதை - குறிப்பு வரைக.

        யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு  உரைநடையும் கவிதையும் இணைவது வசன கவிதை ஆகும்.

18 . செய்கு தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

* அருளைப் பெருக்கக் கல்வி கற்போம் 

* அறிவைத் திருத்திடக் கல்வி கற்போம்

* அறியாமை அகற்றிட கல்வி கற்போம்.

19 . வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் மா.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

            வறுமையில் பசியால் வாடிய போதும் புத்தகங்கள் வாங்கிப் படித்தார்.

20. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு -
இத்தொடரை இரு தொடர்களாக்குக.

* நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் உண்டு.

* நான் எழுதுவதற்கு ஒரு காரணமும் உண்டு.

21 . ' செயல்' என முடியும் திருக்குறளை எழுதுக.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் 
தியற்கை அறிந்து செயல்.

                                   பிரிவு -2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க      5x2=10

22. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில்
எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

* கவிஞர் - பெயர்ப்பயனிலை

* சென்றார் - வினைப்பயனிலை

* யார் ? - வினாப்பயனிலை

23 . கலைச் சொல் தருக.

அ. Emblem  - சின்னம்

ஆ. Humanism - மனிதநேயம்

24. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ. விதி-வீதி

     விதி விளையாடியதால் அந்தக் குடும்பம் வீதிக்கு வந்தது.

ஆ. கொள்-கோள்

      பெற்றுக்கொள் என்று சொன்னதற்குக் கோள் பார்த்துக் கொடு என்று கூறினார்.

25. தீவக அணியின் வகைகள் யாவை?

* தீவக அணி மூன்று வகைப்படும்.

* முதல் நிலைத்தீவகம்

* இடைநிலைத் தீவகம்

* கடைநிலைத் தீவகம்

26. பொருத்தமான நிறுத்தற்குறியிடுக.

            சேரர்களின் பட்டப் பெயர்களின் கொல்லிவெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும்
பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர்
சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

விடை : 

               சேரர்களின் பட்டப் பெயர்களின் கொல்லிவெற்பன் , மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை.  கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் ,  பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர்
சூட்டிக்கொண்டனர் . இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

27. ஒலித்து -பகுபத உறுப்பிலக்கணம் தருக.

ஒலி + த் + த் + உ 

ஒலி - பகுதி

த்   - சந்தி 

த்  - இறந்தகால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி


28. தொழிற்பெயற்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை நிறைவு செய்க.

(குறிப்பு : நடித்தல், நடிப்பு)

அ ) பொது வாழ்வில் நடித்தல் கூடாது.

ஆ ) நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.


       பகுதி - III (மதிப்பெண்கள் : 18)

                               பிரிவு -1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க
2x3=6

29 ) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

               அம்மானை பாடல்கள், சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவு பெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த
கருத்துக்களை ஏடுகளில் குறித்து வைத்துக்கொள்வேன். யான் முறையாக
ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய கேள்வி
ஞானத்தைப் பெறுவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனது கேள்வி
ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச் செல்வம் பற்றி ம.பொ. சிவஞானம்
குறிப்பிட்டுள்ளார்.

அ )  ம.பொ.சி. அவர்கள் கேள்வி ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?

      திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளிடம் கேள்வி ஞானத்தை அதிகமாகப்  பெற்றதாகக் கூறுகிறார்.

ஆ ) ம.பொ.சி. அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?

    * அம்மானைப் பாடல்கள்

     * சித்தர் பாடல்கள்

       * சொற்பொழிவுகள்


இ ) ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி. அதனை எவ்வாறு ஈடு செய்தார்?

            கேள்வி ஞானத்தைப் பெறுவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினார்.

30. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' இது போல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

* நெல் நாற்றை நட்டான்
* வாழைக்கன்றை நட்டான்
* தென்னம்பிள்ளை நட்டான்
* கத்திரி நாற்றை நட்டான்
* மாங்கன்று நட்டான் 


31. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

* அறத்தில் வணிகம் கூடாது.

* கைமாறு கருதாத உதவியே அறம். இது இன்றைய காலத்தேவை.

* ஈகைக்குணம் குறைந்து விட்டது. அதிகரிக்க வேண்டும்.

* பொய்யாச் செந்நா - என்பது சங்க  இலக்கியம் . என்றும் பொய் சொல்லக்கூடாது.

* போர் அறம் -  தமிழர் போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். 

* தம்மை விட வலிமை குறைந்தவர்களோடு போர் செய்யக்கூடாது.

                            பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க  2x3=6

34 வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

32 மாளாத காதல் நோயாளன் போல்' என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும்
செய்திகளை விளக்குக.

     மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே . அது போன்று இறைவா !  நீ எனக்குத் துன்பத்தைத் தந்தாலும் உன் அருளை வேண்டுகிறேன் என்கிறார் குலசேகராழ்வார்.

33. ' காய்மணியாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்' உவமை உணர்த்தும் கருத்து யாது?

            இளம் பயிர் வளர்ந்து நெல் மணியாய் ஆவதற்கு முன் காய்ந்தது போல் , கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே தாயை  இழந்து வாடுகின்றான்.

34. ' அன்னை மொழியே' எனத் தெடங்கி 'பேரரசே' என்று முடிவது வரை உள்ள
மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே !

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் 

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !

                                    அல்லது

மாற்றம் எனது' எனத் தொடங்கி 'சாலை' என்று முடிவதுவரை உள்ள காலக்
கணிதப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

மாற்றம் எனது மானிடத் தத்துவம் ; 

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன் !

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை ! 

                             பிரிவு -3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.

35. 'கண்ணே கண்ணுறங்கு!
காலையிலே நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு !
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! - இத்தாலாட்டு பாடலில் அமைந்துள்ள தொடர்
வகைகளை எழுதுக.

விடை 

கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்

காலையிலே நீயெழும்பு - வேற்றுமைத் தொடர்.

மாமழை பெய்கையிலே - உரிச்சொல் தொடர்

மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்.

பாடினேன் தாலாட்டு - வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத்தொடர்.

36. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக் காட்டுக.

         இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணியாகும்.

எ.கா:

 'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட'

பாடல் பொருள் : 

                 கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பது போலக் கை காட்டியது.

அணி விளக்கம்:

        இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.


அணிப்பொருத்தம்:

              கோவலன், கண்ணகி மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால் இளங்கோவடிகள் கோவலன் மதுரை
மாநகருக்குள் வந்தால் பின்பு கொலை செய்யப்படுவான் எனக்கருதி 'வரவேண்டா' என அசைவதாகத் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.


37. 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்" - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

                          பகுதி -IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                                5x5=25

38. அ. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும்,
பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.


            அவைக்கு என் வணக்கம். மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும்
பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டுப் பேச வந்துள்ளேன்.

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து : 

1. சீர் இளமைத் திறன் கொண்டவள். 

2. பாரதக் கண்டம் தமிழ்த்தாயின் முகம்

3. தமிழகமே! அவளின் நெற்றிப் பொட்டு 

4. இவளது புகழ் எட்டுத் திசையிலும் பரவியுள்ளது.

இவ்வாறு சுந்தரனார் தமிழை தாயாகவே பாவித்துப் பாடியுள்ளார்.

பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து:

1. தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

2.மண்ணுலகப் பேரரசியே! 

3. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம்
மணிமேகலை போன்ற நுால்களைத் தன்னகத்தே கொண்டவளே! எனத் தமிழை வாழ்த்துகிறார்.

இவ்வாறு இருவரும் தமிழைத் தாயாக வாழ்த்தி வணங்குகின்றனர். நாமும் வாழ்த்துவோம்.


                            அல்லது

ஆ. கருணையன் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற
உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

                பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக !
அன்னையின் உடலை மண் இட்டு மூடி மலர்களையும் கண்ணீரையும் பொழிந்தான் . 

* என் மனம் பறிக்கப்பட்ட மலர்போல் உள்ளது.

* அம்பினால் உண்டான புண்ணின் வலி போல் மனம் வலிக்கின்றது.

* என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு என்தாய் சென்றுவிட்டார்.

இளம்பயிர் காய்ந்ததே!

   இளம்பயிர் முதிர்ந்து நெல்மணி ஆகும் முன் காய்ந்தது போல் தாயை இழந்து
வாடுகிறேன்.

வழிதெரியாமல் தவிக்கிறேன்:
என் மனம் பறிக்கப்பட்ட மலர்போல் உள்ளது. சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு வழிதெரியாமல் தவிக்கிறேன்.

என் தாய் என்னைவிட்டுப் போய்விட்டாளே! நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன். அம்பினால் உண்டான புண்ணின் வலி போல் மனம் வலிக்கின்றது. என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு என்தாய் சென்றுவிட்டார்.


39 அ. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர் :

மு.தமிழரசன் , 
01 ,  பாரதிபுரம் ,
கருப்பாயூரணி ,
மதுரை - 625 020.

பெறுநர் :

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்
உணவுப் பாதுகாப்பு ஆணையம் , 
சென்னை.

ஐயா , 

பொருள் : உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது தொடர்பாக .

        மதுரை மங்கை உணவு விடுதியில் உணவு உண்டேன்.உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது. உணவு உண்ட இரசீது இணைத்துள்ளேன்.உணவு விடுதி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

                          நன்றி.

                        தங்கள்  உண்மையுள்ள , 

                                    தமிழரசன்.

உறைமேல் முகவரி :

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்
உணவுப் பாதுகாப்பு ஆணையம் , 
சென்னை.


                             அல்லது

ஆ. பள்ளி வாளகத்தில் நடைபெற்ற 'மரம் நடுவிழாவிற்கு வந்திருந்த சிறப்பு
விருந்தினருக்கும் பெற்றோருக்கும் பள்ளியின் 'பசுமை பாதுகாப்புப்படை சார்பாக நன்றியுரை எழுதுக.

40 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக


41 ) 9. பாண்டியன் நகரில் வசிக்கும் மதுரையைச் சேர்ந்த ஆதன், வையை
ஆகியோரின் மகன் யாழன் என்பவர் இளங்கோ நகர், அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேல்நிலை வகுப்பில் தமிழ்வழியில் அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதாக கருதி விண்ணப்பப்படிவத்தை நிரப்புக.

42. அ. பள்ளியில் நான். வீட்டில் நான் என்னும் தலைப்புகளில் நீங்கள் பள்ளியிலும், வீட்டில் நடந்து கொள்ளும் முறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக.

                      (அல்லது)

ஆ. மொழிபெயர்க்க.

The golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning. Melodies in flowers. The flowers fragrance fills the breeze. The
breeze gently blows everywhere and makes everything pleasant.

                பொன்னான சூரியன் தினமும் காலையில் எழுந்து அதன் ஒளிக்கதிர்களை வீசி, இருளை
மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையை தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று
அனைத்து இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.


                        பகுதி - V

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.

43. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கதிற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

              அல்லது

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனைமாணந்த மணவானா பொதுவில்
ஆடுகின்ற அரேசேஎன் அலங்கல் அணிந் தருளே
                                             --வள்ளலார்

இப்பாடலில் உள்ள பாநயங்களைப் பாராட்டி எழுதுக.

44. 'அன்னமய்யா' என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க
 
                         அல்லது

அழகிரிசாமியின் 'ஒருவன் இருக்கிறான்' சிறுகதையில் மணிதத்தை
வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

45. அ. நீங்கள் சென்று வந்த அரசுப் பொருட்காட்சியில் அறிவிப்பு, அமைப்பு. சிறு அங்காடிகள், நிகழ்த்தப்பட்ட கலைகள், பேச்சுரங்கம், அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் போன்றவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு கட்டுரை
ஒன்றை எழுதுக


                        அல்லது

ஆ. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்றுபடைக்க.

குறிப்புகள்

முன்னுரை - இலக்கியம் காட்டும் அறம்- அறத்தான் வருவதே இன்பம் -
அறவாழ்வே பண்பாட்டின் உச்சம்- அறம் என்பதே மனிதம் - முடிவுரை.

மேல்நிலை வகுப்பு - சேர்க்கை விண்ணப்பம்

சேர்க்கை எண்:
தேதி                          வகுப்பும் / பிரிவும்

1. மாணவ மாணவியின் பெயர்

பிறந்த தேதி

தேசிய இனம்

4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர்

5. வீட்டு முகவரி

6 .  இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு

7 .  பயின்ற மொழி

8 .இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி

9 பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்.
தேர்வின் பெயர் பதிவு எண் -ஆண்டு பாடம்
|தமிழ்
ஆங்கிலம்
மதிப்பெண்கள்
கணக்கு
| அறிவியல்
| சமூக அறிவியல்
மொத்தம்
10. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?
11. தாய்மொழி
12 சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்

மாணவ / மாணவியின் கையெழுத்து


***************  *************   ************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

0 Comments