10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 7 , கவிதைப்பேழை - சிலப்பதிகாரம் - வினா & விடை - இயங்கலைத்தேர்வு / 10th TAMIL - SILAPPATHIKAARAM - ONLINE TEST - QUESTION & ANSWER

 

10 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 7 , கவிதைப்பேழை -

சிலப்பதிகாரம் - இயங்கலைத்தேர்வு

வினாக்களும் விடைகளும்

வினா உருவாக்கம் 

' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , இளமனூர் , 

மதுரை - 97861 41410

******************   ********   ***************


1) முத்தமிழ்க் காப்பியம் , குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படும் காப்பியம் ------

அ) சிலப்பதிகாரம்

ஆ) சீவக சிந்தாமணி

இ ) மணிமேகலை

ஈ) வளையாபதி

விடை : அ) சிலப்பதிகாரம்

2) ' அடிகள் நீரே அருளுக ' என்று
இளங்கோவடிகளிடம் கூறிய
புலவர் யார் ?

அ) திருத்தக்கத்தேவர்

ஆ) ஔவையார்

இ) சீத்தலைச்சாத்தனார்

ஈ) கபிலர்

விடை : இ) சீத்தலைச்சாத்தனார்

3) இளங்கோவடிகள் ------ மரபைச் சேர்ந்தவர்.

அ) பல்லவ

ஆ) சேர

இ) சோழ

ஈ) பாண்டிய

விடை :   ஆ ) சேர 

4 ) சிலப்பதிகாரத்திலுள்ள
காண்டங்களின் எண்ணிக்கை -----

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஆறு

விடை : ஆ) மூன்று

5) இந்திர விழா ஊரெடுத்த காதை' ------ காண்டத்தில் உள்ளது.

அ) புகார்க்காண்டம்

ஆ) மதுரைக்காண்டம்

இ) வஞ்சிக்காண்டம்

ஈ) ஆரண்ய காண்டம்

விடை : அ) புகார்க்காண்டம்

6 ) சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை -----

அ ) 10

ஆ) 15

இ) 20

 ஈ) 30

விடை :  ஈ) 30

7) எட்டுவகைத் தானியங்கள் விற்கும் கடை ------

அ) கூலக்கடை

ஆ) நகைக்கடை

இ) துணிக்கடை

ஈ) இறைச்சிக்கடை

விடை : அ) கூலக்கடை

8) சிலப்பதிகாரத்தில் வரும்
தமிழ் நடை -----

அ) உரைப்பாட்டு மடை

ஆ) வசனநடை

இ) உரைநடை

ஈ) சந்த நடை

விடை : அ) உரைப்பாட்டு மடை

9) நெடுவேள் குன்றத்தின் இன்றைய பெயர் ------

அ) கொல்லிமலை

ஆ) பொதிகை மலை

இ )  சுருளி மலை

ஈ) குடகுமலை

விடை : இ )  சுருளி மலை

10 ) ' திருமால் குன்றம்' என்று
அழைக்கப்படும் மலை ------

அ) யானைமலை

ஆ) நாகமலை

இ) பசுமலை

ஈ) அழகர் மலை

விடை : ஈ) அழகர் மலை

11 ) ஐம்பெருங்காப்பியங்களுள்
முதற்காப்பியமாகத் திருத்தணிகையுலா குறிப்பிடும் நூல் -----

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீவகசிந்தாமணி

ஈ) குண்டலகேசி

விடை : இ) சீவகசிந்தாமணி

12 ) வெண்உப்பு விற்பவர் ------  என அழைக்கப்படுகிறார்.

அ) ஓசுநர்

ஆ) காருகர்

இ) பாசவர்

ஈ) உமணர்

விடை : ஈ) உமணர்

13 ) ' வலைச்சியர்' விற்பனை செய்யும் பொருள் -----

அ) கள்

ஆ) மீன்

இ) பிட்டு

ஈ) அப்பம்

விடை : அ) கள்

14 ) பரதவர் விற்பனை செய்யும்
பொருள் ------

அ) செப்புப்பாத்திரங்கள்

ஆ) எண்ணெய்

இ) பட்டு

ஈ) மீன்

விடை : ஈ) மீன்

15 ) ' துகிர்' என்பதன் பொருள் ------

அ) பட்டு

ஆ) பவளம்

இ ) முடி

ஈ) சந்தனம்

விடை : ஆ) பவளம்


16 ) கோவலனையும் , கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர் யார்?

அ) இளங்கோவடிகள்

ஆ) மறைமலையடிகள்

இ) கவுந்தியடிகள்

ஈ) அப்பூதியடிகள்

விடை : இ) கவுந்தியடிகள்

17 ) கணவனை இழந்த கண்ணகி சென்றடைந்த இடம் ------

அ) வேங்கைக்கானல்

ஆ) சுருளிமலை

இ) அழகர்மலை

ஈ) சிறுமலை

விடை : அ) வேங்கைக்கானல்

18 ) வெற்றிலை விற்போர் ----- என அழைக்கப்படுகிறார்.

அ) உமணர்

ஆ) ஓசுநர்

இ) பாசவர்

ஈ) காருகர்

விடை : இ) பாசவர்

19 ) இலக்கணக் குறிப்புத் தருக.
வண்ணமும் சுண்ணமும்

அ) அடுக்குத்தொடர்

ஆ) எண்ணும்மை

இ) உம்மைத்தொகை

ஈ) பண்புத்தொகை

விடை : ஆ) எண்ணும்மை

20 ) பயில்தொழில் -
இலக்கணக்குறிப்புத் தருக.

அ) பண்புத்தொகை

ஆ) உவமைத்தொகை

இ ) உம்மைத்தொகை

ஈ) வினைத்தொகை

விடை : ஈ) வினைத்தொகை

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

0 Comments