10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 7 , விரிவானம் - மங்கையராய்ப் பிறப்பதற்கே - இயங்கலைத்தேர்வு - வினா & விடை / 10th TAMIL - EYAL 7 - ONLINE TEST - QUESTION & ANSWER

 


10 ஆம் வகுப்பு - தமிழ்

இயல் 7 - விரிவானம் 

மங்கையராய்ப் பிறப்பதற்கே ...


வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   *********   *************


1 ) இசைப்பேரரசி என நேருவால்   பாராட்டப் பட்டவர் யார் ?

அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

ஆ) ஜானகி

இ) லதா மங்கேஷ்கர்

ஈ) சுசிலா

விடை : அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

2) எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் எது?

அ) பராசக்தி

ஆ) இராஜகுமாரி

இ) மீரா

ஈ) சாவித்திரி

விடை : இ) மீரா

3) ' வேருக்கு நீர்' எனும் புதினத்தை எழுதியவர் யார் ?

அ) சோ.தர்மன்

ஆ) பூமணி

இ) லட்சுமி

ஈ) இராஜம் கிருஷ்ணன்

விடை : ஈ) இராஜம் கிருஷ்ணன்


4 ) சாகித்திய அகாதமி விருது பெற்ற இராஜம் கிருஷ்ணன்
 நூல் -------

அ) குறிஞ்சி தேன்

ஆ) கரிப்பு மண்

இ) வேருக்கு நீர்

ஈ ) அலைவாய்க்கரையில்

விடை :  இ) வேருக்கு நீர்

5 ) சுப்புலட்சுமியைத் தொட்டுத் தடவிப் பாராட்டியவர் யார் ?

அ) காந்தியடிகள்

ஆ) சரோஜினி நாயுடு

இ) ஹெலன் கெல்லர்

ஈ) அன்னை தெரசா

விடை : இ) ஹெலன் கெல்லர்

6 ) சுப்புலட்சுமி' தாமரையணி' விருது பெற்ற ஆண்டு ------

அ) 1974

ஆ) 1963

இ) 1954

ஈ) 1975

விடை : இ) 1954

7 ) திருப்பதியில் சுப்புலட்சுமி
குரலில் வெங்கடேச சுப்ரபாதம்
ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு ------

அ) 1963

ஆ) 1966

இ )  1974

ஈ) 1978

விடை : ஆ) 1966

8 ) தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் திகழக்காரணமானவர் -----

அ) வளர்மதி

ஆ) பாலசரஸ்வதி

இ) சுப்புலட்சுமி

ஈ) சுந்தரம்பாள்

விடை : ஆ) பாலசரஸ்வதி

9 ) சாகித்திய அகாதமி விருதுபெற்ற முதல் பெண் எழுத்தாளர் ------

அ) கிருஷ்ணம்மாள்

ஆ) சிவசங்கரி

இ) இராஜம் கிருஷ்ணன்

ஈ) சுஜாதா

விடை : இ) இராஜம் கிருஷ்ணன்


10 ) நீலகிரி , படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக்கூறும் புதினம் -----

அ) கரிப்பு மணிகள்

ஆ) குறிஞ்சித்தேன்

இ) பொன்விலங்கு

ஈ) அஞ்ஞாடி

விடை : ஆ) குறிஞ்சித்தேன்


11 ) உழுபவருக்கே நில உரிமை இயக்கம் தொடங்கியவர் -------

அ) கிருஷ்ணம்மாள்

ஆ) இராஜம் கிருஷ்ணன்

இ) சின்னப்பிள்ளை

ஈ) பாலசரஸ்வதி

விடை : அ) கிருஷ்ணம்மாள்


12 ) காந்தி அமைதி விருதை
கிருஷ்ணம்மாளுக்கு வழங்கிய நாடு -----

அ ) இந்தியா

ஆ) சுவிட்சர்லாந்து

இ) சுவீடன்

ஈ) பாரீஸ்

விடை : ஆ) சுவிட்சர்லாந்து

13 ) இராஜம் கிருஷ்ணன் இயற்றிய ----- வரலாற்றுப் புதினம் அனைவராலும்
பாராட்டப்பட்டது.

அ) குறிஞ்சித்தேன்

ஆ) கரிப்பு மணிகள்

இ) சேற்றில் மனிதர்கள்

ஈ) பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி

விடை : ஈ) பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி

14 ) சின்னப்பிள்ளைக்கு விருது
வழங்கிய  பாரதப் பிரதமர் யார் ?

அ) வாஜ்பாய்

ஆ) குஜ்ரால்

இ) மன்மோகன்சிங்

ஈ) நரசிம்மராவ்

விடை : அ) வாஜ்பாய்

15 ) களஞ்சியம் குழுவை ஆரம்பித்தவர் யார் ?

அ) கிருஷ்ணம்மாள்

ஆ) இராஜம் கிருஷ்ணன்

இ) சின்னப்பிள்ளை

ஈ) பாலசரஸ்வதி

விடை : இ) சின்னப்பிள்ளை


16 ) மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார் ?

அ) சின்னப்பிள்ளை

ஆ) முத்துப்பிள்ளை

இ) கிருஷ்ணம்மாள்

ஈ) ராஜம் கிருஷ்ணம்மாள்

விடை :  கிருஷ்ணம்மாள்


17 ) பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுதவேண்டும் என்ற படிமத்தை உடைத்தவர் -----

அ) தாமரை

ஆ) லட்சுமி

இ) திலகவதி

ஈ) இராஜம் கிருஷ்ணன்

விடை : ஈ) இராஜம் கிருஷ்ணன்

18 ) பாலசரஸ்வதி ஏழுவயதில்   முதன்முதலில் பரதநாட்டிய
அரங்கேற்றம் செய்த ஊர் -----

அ ) மதுரை

ஆ) சென்னை

இ) காஞ்சிபுரம்

ஈ ) எட்டயபுரம்

விடை : இ) காஞ்சிபுரம்

19 ) கூட்டுக்குஞ்சுகள் என்ற புதினத்தின் ஆசிரியர் யார் ?

அ) பார்த்தசாரதி

ஆ) வெண்ணிலா

இ) ஆண்டாள் பிரியதர்ஷினி

ஈ) இராஜம் கிருஷ்ணன்

விடை : ஈ) இராஜம் கிருஷ்ணன்


20 ) நோபல் பரிசுக்கு இணையான ------- விருதைப் பெற்றவர் சுப்புலட்சுமி.

அ) தாமரைத்திரு

ஆ) தாமரை அணி

இ) பாரதரத்னா

ஈ) மகசேசே

விடை : ஈ) மகசேசே


***************  *************   ************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

1 Comments