10 ஆம் வகுப்பு - தமிழ் -
இயல் 7,
கவிதைப்பேழை - மெய்க்கீர்த்தி -
இயங்கலைத்தேர்வு
வினா உருவாக்கம் -
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் ,
மதுரை - 97861 41410
*********** *************** ***********
1 ) தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பியவர்கள் யார் ?
அ ) அரசர்கள்
ஆ) புலவர்கள்
இ) மக்கள்
ஈ) வள்ளல்கள்
விடை : அ ) அரசர்கள்
2 ) கோப்பரகேசரி , திருபுவனச்
சக்கரவர்த்தி என்ற பட்டங்கள் கொண்ட அரசன் யார் ?
அ ) முதலாம் இராசேந்திரன்
ஆ) மகேந்திரவர்மன்
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ) இரண்டாம் இராசராசசோழன்
விடை : ஈ) இரண்டாம் இராசராசசோழன்
3) இரண்டாம் இராசராச சோழனுக்கு உள்ள மெய்க்கீர்த்திகளின் எண்ணிக்கை
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை : ஆ) இரண்டு
4 ) மெய்க்கீர்த்தி யார் காலந்தொட்டு கல்லில் வடிக்கப்பட்டது?
அ) மகேந்திர பல்லவன்
ஆ) நரசிம்ம பல்லவன்
இ) முதலாம் இராசராசன்
ஈ) இரண்டாம் இராசராசன்
விடை : இ) முதலாம் இராசராசன்
5) மெய்க்கீர்த்திகளை எழுதுபவர்கள் -----
அ) புலவர்கள்
ஆ) அரசர்கள்
இ) வள்ளல்கள்
ஈ) வீரர்கள்
விடை : அ) புலவர்கள்
6) மெய்க்கீர்த்திகளை கல்லில்
பொறிப்பவர்கள் யார் ?
அ ) புலவர்கள்
ஆ) வீரர்கள்
இ) புரவலர்கள்
ஈ) கல்தச்சர்கள்
விடை : ஈ) கல்தச்சர்கள்
7 ) இந்திரன் முதலாகத் திசைபாலர்கள் மொத்தம் ------- பேர்கள்
அ)ஆறு
ஆ) எட்டு
இ) ஒன்பது
ஈ) பத்து
விடை : ஆ) எட்டு
8) சோழன் நாட்டில் பிணிக்கப் படுவன -----
அ) பூனை
ஆ) புலி
இ) மக்கள்
ஈ) யானை
விடை : ஈ) யானை
9 ) சோழன் நாட்டில் புலம்புவன ------
அ) மக்கள்
ஆ) சிலம்புகள்
இ) வளையல்கள்
ஈ) கவசங்கள்
விடை : ஆ) சிலம்புகள்
10 ) மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழும் இலக்கியம் ------
அ) பதிற்றுப்பத்து
ஆ) பரிபாடல்
இ) கலித்தொகை
ஈ) புறநானூறு
விடை : அ) பதிற்றுப்பத்து
11 ) இராசராசன் ---- நீதி தவறாது ஆட்சி செய்தான்.
அ) அரச
ஆ) மக்கள்
இ) தெய்வ
ஈ) மனு
விடை : ஈ) மனு
12 ) சோழன் ஆட்சியில் வடுப்படுவன ------
அ ) மாங்காய்கள்
ஆ) தேங்காய்கள்
இ) மக்கள்
ஈ) விலங்குகள்
விடை : அ ) மாங்காய்கள்
13 ) சோழன் ஆட்சியில் கொடியனவாய் இருப்பவை ------
அ ) காடுகள்
ஆ) வீடுகள்
இ) விலங்குகள்
ஈ) வீரர்கள்
விடை : அ ) காடுகள்
14 ) சோழன் ஆட்சியில் நெறிபிறழ்ந்து செல்பவை -------
அ) மான்கள்
ஆ) மீன்கள்
இ) ஆண்கள்
ஈ) பெண்கள்
விடை : ஆ) மீன்கள்
15 ) சோழன் ஆட்சியில் பறிக்கப்படுவன
அ) உரிமைகள்
ஆ) மலர்கள்
இ) உடமைகள்
ஈ) கடமைகள்
விடை : ஆ) மலர்கள்
16 ) தஞ்சை பெரிய கோவிலில் ------
நூற்றாண்டைச் சேர்ந்த இராசராச சோழன் கல்வெட்டு உள்ளது.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) பதினொன்றாம்
விடை : ஈ) பதினொன்றாம்
17 ) இராசராச சோழன் மெய்க்கீர்த்தியில் நமக்குப் பாடமாக அமைந்த வரிகள் -------
அ) 1 - 16
ஆ) 16 - 33
இ) 33 - 52
ஈ) 53 - 75
விடை : ஆ) 16 - 33
18 ) வருபுனல் - இலக்கணக் குறிப்பு எழுதுக.
அ) பண்புத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) பெயரெச்சம்
விடை : இ) வினைத்தொகை
19 ) மாமலர் - இலக்கணக் குறிப்பு எழுதுக.
அ) உரிச்சொல்தொடர்
ஆ) வினைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) அடுக்குத்தொடர்
விடை : அ) உரிச்சொல்தொடர்
20 ) சோழன் நாட்டில் அடைக்கப்படுவன
அ ) அனல்
ஆ) மக்கள்
இ) விலங்குகள்
ஈ) புனல்
விடை : ஈ) புனல்
************ ************** *************
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.
*************** **************** *******
0 Comments