பத்தாம் வகுப்பு - தமிழ்
பொதுத்தேர்வில் வெற்றி
கவிதைப்பேழை - குறுவினாக்களும் விடைகளும்
முன்னுரிமைப் பாடங்கள்
இயல் - 1
1. " மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!". இவ்வடிகளில் ஐம்பெரும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
1. சீவக சிந்தாமணி
2. வளையாபதி
3. குண்டலகேசி
இயல் - 2
2. வசன கவிதை - குறிப்பு வரைக.
யாப்புக்கட்டுக்கு அப்பாற்பட்டு உரைநடையும் கவிதையும் இணைவது வசன கவிதை ஆகும்.
3 . பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக. *
தம்பி அழாதே! விளையாடு! நாம் விளையோடுவோமா! திண்பண்டம் தருகிறேன். சாப்பிடு. அம்மா, அப்பா இப்போது வந்து விடுவர்
இயல் - 3
4. 'நச்சப் படாதவன் செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக
நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாமல் ஒருவராலும் விரும்பப்படாதவர்
5. கொடுப்பதூஉம் துய்ப்பதுஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல். - இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம் - இன்னிசை அளபெடை
துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை
6.பொருளுக்கேற்ற அடியை பொருத்துக.
* உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக்காக்கப்படும் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
* ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது - உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று
விடை
* உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப் படும்.
* ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது - நடு ஊாருள் நச்சு மரம் பழுத்தற்று
* ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.
7. எய்துவர் எய்தாப் பழி-இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
எய்/துவர் - நேர் நிரை - கூவிளம்
எய்/ தாப் - நேர் நேர் - தேமா
பழி - நிரை - மலர்
இயல் - 4
8. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக?
1. மருந்தால் மட்டும் நோய் நீங்கி விடாது.
2. அன்போடு நோயாளிக்கு மருத்துவம் செய்வதும் பயன் தரும்.
9. 'நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன் என்று யார் யாரிடம் கூறினார்?
குலசேகர ஆழ்வார், இறைவனிடம் கூறினார்.
இயல் - 5
10. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
* அருளைப் பெருக்கிட கல்வி கற்போம் !
* அறிவைத் திருத்திட கல்வி கற்போம் !
* அறியாமை அகற்றிட கல்வி கற்போம் !
இயல் -6
11. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்'
காலதூதர் கையிலே ' உறங்குவாய் உறங்குவாய்' கும்ப கர்ணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
* பொய்யான வாழ்வெல்லாம் அழியத் தொடங்கி விட்டது. எழுந்திராய்! எழுந்திராய்! என எழுப்பினர்.
* எமனுடைய தூதர் கைகளிலே உறங்கச் சொல்கிறார்கள்.
0 Comments