10 ஆம் வகுப்பு - தமிழ் - பொதுத்தேர்வில் வெற்றி - கவிதைப்பேழை - சிறுவினா & விடைகளுடன் / 10th TAMIL - KAVITHAIPEZHAI - SIRUVINA - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

பொதுத்தேர்வில் வெற்றி

பகுதி 3 கவிதைப்பேழை சிறுவினா

(வினா எண்:32 முதல் 34 வரை)

முன்னுரிமைப் பாடங்கள்

1தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? 

 1. அன்னைத் தமிழ் பழமைக்குப் பழமையாய்த் தோன்றியவள்.

2. குமரிக்கண்டத்தில் அரசாண்ட மண்ணுலகப் பேரரசி

3. பாண்டிய மன்னனின் மகள்

4.திருக்குறளின் மாண்புகழ்.

5. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆனவள்

6.நிலைத்தத் தன்மையும் வேற்றுமொழியார் புகழுரையும் கொண்டவள்.

2.உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான்,.முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் ... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப்பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால் ... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

 நானே நீர் -  உலகில் முக்கால் பாகம் நான் -  நான் இன்றி உலகம் இல்லை -  மேகமாய் நான்  - மழையாய் நான் - அருவியாய் நான் - கடலாய் நான்

3. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு: 

இலைகளில் சொட்டும் நீர். உடலில் ஓடும் மெல்லிய குளிர் -  தேங்கிய குட்டையில் 'சளப் தளப்' என்று குதிக்கும் குழந்தைகள் - ஓடும் நீரில் காகிதக் கப்பல்

1.வானத்தை பிளந்து கொண்டு மழை கொட்டியது. 

2.மழை மெதுவாக நின்றது

3.இலைகளில் இருந்து மழைத்துளி சொட்டுச்சொட்டாக வடிந்தது.

4. தேங்கிய குட்டைகளில் 'சளப் தளப் என்று குழந்தைகள் குதித்து விளையாடினர்.

5. பைக்குள் இருந்த நோட்டுப் புத்தகங்கள் கப்பலாகின.

6.மகிழ்ச்சியுடன் குழந்தைகள் குதித்து விளையாடினர்.


4. மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக அல்லது வித்துவக்கோட்டம்மானிடம் குலசேகரர் வேண்டுவன யாவை?

   மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் கட்டாலும் அது நன்மைக்கே. அது போன்று இறைவா! நீ துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளை வேண்டுகிறேன் என்கிறார் குலசேகரர்.

5  ) வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்குப் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.

1. காலம் அறிந்து செயல் செய்தல் 

2. மனவலிமை 

3. மக்களைக் காத்தல் 

4. நூல்களைக் கற்றல்

5. விடாமுயற்சி இவை வள்ளுவர் சிறந்த அமைச்சருக்குக் கூறும் இலக்கணங்கள் ஆகும் இவை நமக்குப் பொருந்தும்.

6  ) எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகின்றார்?

*உயிர் பிழைக்கும் வழி அறியேன், உடலின் தன்மை அறியேன்

* உணவு தேடிக் கொணரும் வழிவகை அறியேன்

* காட்டில் செல்லும் வழிகளையும் அறியேன் என்று கருணையன் கூறுகின்றார்.



Post a Comment

0 Comments