10 ஆம் வகுப்பு - தமிழ் - கற்கண்டு இலக்கணம் - சிறுவினா & விடைகள் / 10th TAMIL - KARKANDU - SIRUVINA - QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு - தமிழ்

கற்கண்டு - இலக்கணம்

சிறுவினாக்கள் - வினா & விடை

கற்கண்டு (இலக்கணம்) சிறுவினா

1. அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது -

வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றுக.

வினைமுற்று     தொழிற்பெயர்

அறிந்தது                 அறிதல்

அறியாதது.           அறியாமை

புரிந்தது                   புரிதல்

புரியாதது             புரியாமை

தெரிந்தது             தெரிதல்

தெரியாதது       தெரியாமை

பிறந்தது                பிறத்தல்

பிறவாதது            பிறவாமை

2. தேன், நூல், பை, மலர், வா இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்து தொடர்மொழிகளாக்குக.

தனிமொழி                       தொடர்மொழி

தேன்                   தேன்மொழி, தேன்தமிழ்

நூல்                நூல்சேலை, நூல் எழுதுக

பை                           பை தா, பைந்தமிழ்

4. வினையடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

காண்   - காட்சி, காணுதல், காணல், காணாமை

சிரி - சிரிப்பு, சிரித்தல், சிரியாமை

தடு -  தடுப்பு, தடுத்தல்,

5 கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோரல் - இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

கட்டு - முதனிலைத்தொழிற்பெயர்

சொட்டு, கோரல்- விகுதி பெறாத தொழிற்பெயர்

கேடு - முதனிலை திரிந்த தொழிற்பெயர்

வழிபாடு - முதனிலை திரிந்த தொழிற்பெயர்

6 தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பத்தியில் உள்ள தொகைநிலைத்தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.

பூங்கொடி  - அன்மொழித்தொகை (பூங்கொடியை அணிந்த பெண்)

ஆடுமாடுகள்-   உம்மைத்தொகை (ஆடுகளும் மாடுகளும்)


தண்ணீர்த்தொட்டி - 2-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (தண்ணீரை உடைய தொட்டி)

குடிநீர் - வினைத்தொகை (குடித்தநீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்)

மணி பார்த்தாள் - 2ம் வேற்றுமைத் தொகை (மணியைப் பார்த்தாள்)

7.தொடர்வகைகள் (புத்தகப்பக்கம் 66 சிறுவினா 1)

கண்ணுறங்கு - விளித்தொடா.

காலையில் நீ எழும்பு - வேற்றுமைத் தொடர்.

மாமழை பெய்கையிலே - உரிச்சொல் தொடர்.

மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்.

பாடினேன் தாலாட்டு வினைமுற்றுத்தொடர்

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத்தொடர்.

8.வழுவமைதி (புத்தகப்பக்கம் 94 சிறுவினா எண்:4)

திணைவழுவமைதி.

இலச்சுமி கூப்பிடுகிறாள்

என்னடா விளையாட வேண்டுமா?

நீயும் இவனும் விளையாடுங்கள்

மரபு வழுவமைதி

வாழைத்தோப்பு

குட்டியுடன் நின்றிருந்த மாடு

துள்ளிய குட்டி,

காலவழுவமைதி

இதோ சென்றுவிட்டேன்


9 முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையினைச் சுட்டி விளக்குக.

முயற்சி செல்வத்தை உண்டாக்கும். முயற்சி இல்லாமை வறுமையை உண்டாக்கும்.

இக்குறட்பாவில் ஆற்றுநீர் போலத் தொடக்கம் முதல் முடிவு வரை பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது. எனவே இஃது ஆற்றுநீர்ப் பொருள்கோளாகும்.

10. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வினா ஆறு வகைப்படும். அவை

 1.அறிவினா 2.அறியாவினா 

3.ஐயவினா 4.கொளல்வினா

5.கொடைவினா 6. ஏவல்வினா

11.விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை எட்டு வகைப்படும். 

அவை 1.சுட்டு விடை 2.மறைவிடை

 3.நேர்விடை 4.ஏவல்விடை 

5.வினா எதிர்வினாதல் விடை 

6.உற்றது உரைத்தல் விடை 

7.உறுவது கூறல் விடை

 8.இனமொழி விடை

12. பெரும்பொழுது, சிறுபொழுது எத்தனை வகைப்படும் அவையாவை?

பெரும்பொழுது 6 வகைப்படும். 

அவை 1.கார்காலம்

 2.குளிர்காலம் 

3.முன்பனிக்காலம்

4.பின்பனிக்காலம் 

5.இளவேனில் காலம்

 6.முதுவேனில் காலம்

சிறுபொழுது 6 வகைப்படும். அவை

 1.காலை 2.நண்பகல் 

3.ஏற்பாடு 4.மாலை 

5.யாமம் 6 .வைகறை

13 அவந்தி நாட்டு மன்னன் மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கின்றான். அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

வெட்சி: அவந்தி நாட்டார் வெட்சிப்பூச் சூடி மருதநாட்டு ஆநிரை கவர்தல்

கரந்தை: மருத நாட்டார் கரந்தைப்பூச் சூடித் தங்கள் ஆநிரை மீட்டல்

வஞ்சி: அவந்தி நாட்டார் வஞ்சிப்பூச் சூடிப் போருக்குச் செல்லுதல்

தும்பை:இருநாட்டினரும் தும்பைப்பூச் குடிப் போரிடல்

வாகை: வெற்றிப் பெற்ற மன்னன்

வாகைப்பூச் சூடி மகிழல்

Post a Comment

0 Comments