10 ஆம் வகுப்பு - தமிழ் - கற்கண்டு இலக்கணம் - முன்னுரிமைப்பாட வினா & விடை / 10th TAMIL - KARKANDU - ELAKKANAM - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

முன்னுரிமைப் பாடங்கள்

கற்கண்டு - இலக்கணம்

                           பிரிவு 2

(எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க)

வினா எண் 22 முதல் 28 முடிய

1. "வேங்கை" என்பதைத்தொடா மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக்காட்டுக.

- > வேம்+கை - வெந்த கை - தொடர்மொழி

> வேங்கை - மரம் - பொதுமொழி

2. "உடுப்பதூஉம் உண்பதூஉம் கானின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாதும் கீழ்: - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையீன் வகையைச்சுட்டி, அதன் இலக்கணம் தருக.

- இக்குறளில் அமைந்துள்ள அளபெடை இன்னிசை அளபெடை

இலக்கணம்: 

           செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக   அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

3. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகியதொகைச்சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க

- தண்ணீர் குடி - தண்ணீரைக்குடி - இரண்டாம் வேற்றுமைத்தொகை

காலை எழுந்தவுடன் தண்ணீரைக் குடித்தல் நல்ல பழக்கம்.

* தயிர்க்குடம்- தயிரை உடைய குடம் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

கமலா தயிர்க்குடத்தை எடுத்துச்சென்றாள்.

4. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தாடரானது. 'சிரித்துப் பேசினாா்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

சிரித்துப் பேசினார் என்பது மகிழ்வின் காரணமாக சிரித்துச் சிரித்துப் பேசினார் என அடுக்குத்தொடராகும்.

சிரித்துச் சிரித்து - அடுக்குத்தொடர்

5. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார? ஆகியதொடகளில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

* கவிஞர் -பெயர்ப்பயனிலை:

* சென்றார் - வினைப்பயனிலை

* யார்?  - வினாப்பயனிலை

6 )  வருகின்ற கோடைவிடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் - இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக   அமைவது எவ்வாறு?

இத்தொடரில் 'வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்வேன் என அமைதல் வேண்டும். மாறாகச் செல்வேன் என்னும் உறுதித்தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக அமைகிறது.

7. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்கமாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக்   கூறினார். இதில் உள்ள திணை வழுக்களைத்திருத்தி எழுதுக.

வழுதிருத்தம்: - சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும் . புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது.

8 )  இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ.... இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

* மின்விளக்கின்சொடுக்கி எந்தப்பக்கம் இருக்கிறது? - அறியாவினா

* சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே?- ஐயவினா

* மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? ஐயவினா

9. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவுமழைக்கால மாலையில் சூடாகஉண்ணச் சுவை மிகுந்திருக்கும். 

இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

* முதற்பொருள்  - காடு (நிலம்)

- கருப்பொருள் - வரகு (  உணவு ) 

10. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக

உழவர்கள் வயலில் உழுதனர்.

முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்

- குறவர்கள் மலையில் கிழங்கு அகழ்ந்தனர்

- தாழை மடல்களைப்  பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்

11. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

வெட்சி × கரந்தை 

வஞ்சி  × காஞ்சி 

நொச்சி × உழிஞை

12. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.

முதலடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

13. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது.

இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

வஞ்சிப்பாவிற்கு தூங்கல் ஓசையும் ,  கலிப்பாவிற்கு துள்ளல் ஓசையும் உரியன

14, தீவக அணியின் வகைகள்யாவை?

தீவக அணி 3 வகைப்படும்

1. முதல்நிலைத் தீவகம்

 2. இடைநிலைத்தீவகம் 

3. கடைநிலைத்தீவகம்

15 ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது --இக்குறளில் பயின்றுவந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

         இக்குறளில் பயின்று வந்துள்ள அணி நிரல் நிறை அணி .

விளக்கம்: சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள்கொள்வது நிரல் நிறை அணி ஆகும்.

பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பதிந்து

பதி + த்(ந்) +த் + உ

 பதி - பகுதி

த் - சந்தி, ந் ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

- வினையெச்ச விகுதி


அறியேன்

அறி + ய்+ ஆ +ஏன்

அறிபகுதி

ய்சந்தி

ஆ - எதிர்மறை இடை நிலைபுணர்ந்துகெட்டது

ஏன்தன்மை ஒருமை வினைமுற்று


மயங்கிய

மயங்கு + இ(ன்) +ய் + அ

மயங்கு - பகுதி

இ(ன்) இறந்தகால இடைநிலை 'ன்'
புணர்ந்துகெட்டது

ய் - உடம்படுமெய்

அ -  பெயரெச்ச விகுதி


ஒலித்து

ஒலி + த் + த் +  உ

ஒலி  பகுதி

த் - சந்தி

த் - இறந்தகால இடை நிலை

- வினையெச்ச விகுதி


***************   *************   ***********



Post a Comment

0 Comments