10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - பொருளியல் - சரியான விடையைத் தேர்ந்தெடு - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - ECONAMICS - ONE MARK

 


பத்தா வகுப்பு - சமூக அறிவியல்

பொருளியல் - குறைக்கப்பட்ட பாடங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

அலகு 1

1. GNP யின் சமம்


அ) பண வீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP

ஆ) பண வீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP

இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

விடை : இ ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்


2. நாட்டு வருமானம் அளவிடுவது

அ) பணத்தின் மொத்த மதிப்பு

ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு

இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு

 ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

விடை : ஈ ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

3. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது

அ) வேளாண்மை

ஆ) தானியங்கிகள் 

இ) வர்த்தகம்

ஈ ) வங்கி

4 ) ------ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.


அ) செலவு முறை 

ஆ) மதிப்பு கூட்டு முறை 

இ) வருமான முறை

ஈ) நாட்டு வருமானம்

விடை : ஆ ) மதிப்பு கூட்டு முறை 

5. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

அ) வேளாண் துறை 

ஆ) தொழில்துறை 

இ) பணிகள் துறை 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : 


6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 ல் ----- லட்சம் கோடி எனமதிப்பிடப்பட்டுள்ளது.

அ ) 91.06

ஆ ) 92.26

இ )  80.07

ஈ ) 98.29

விடை : ஆ )  92.26


7. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ------ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

அ) 1 வது

ஆ) 3வது

இ) 4 வது

ஈ) 2 வது

விடை : ஈ )  2 வது


8. கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை

அ )  நீர்ப்பாசன கொள்கை

ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

இ) நில சீர்திருத்தக்கொள்கை

ஈ ) கூலிக்கொள்கை


9. இந்தியப் பொருளாதாரம் என்பது

அ) வளர்ந்து வரும் பொருளாதாரம் 

ஆ) தோன்றும் பொருளாதாரம்

இ) இணை பொருளாதாரம்

ஈ) அனைத்தும் சரி

விடை : அ ) வளர்ந்து வரும் பொருளாதாரம் 

அலகு 2


1. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

அ) அமைச்சரவை

ஆ) தலைமை இயக்குநர்

இ) துணை தலைமை இயக்குநர்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : ஆ ) தலைமை இயக்குநர்


2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை

அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

ஆ) டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

இ) போர்ச்சுகீசியர், டே ஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள்

ஈ) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு

விடை : அ ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

3. காட்- இன் முதல் கற்று நடைபெற்ற இடம்

அ) டோக்கியோ

ஆ) உருகுவே இ) டார்குவே 

ஈ) ஜெனீவா

விடை : ஈ ) ஜெனீவா

4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?

அ ) 1984

ஆ ) 1976

இ ) 1950

ஈ ) 1994

விடை : ஈ )  1994


5. 1632 இல் ஆங்கிலேயர்களுக்கு “ கோல்டன் ஃபயர்மான் ” வழங்கியவர் யார்?


அ) ஜஹாங்கீர்

ஆ) கோல்கொண்டா சுல்தான் 

இ) அக்பர்

 ஈ) ஔரங்கசீப்

விடை : ஆ )  கோல்கொண்டா சுல்தான் 


6. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP ) அறிவித்த ஆண்டு


அ) சூன் 1991

ஆ) சூலை 1991

இ) சூலை-ஆகஸ்ட் 1991

 ஈ) ஆகஸ்ட் 1991

விடை : இ ) சூலை-ஆகஸ்ட் 1991


7. இந்திய அரசாங்கம் 1991 இல் ------ ஐ அறிமுகப்படுத்தியது.


அ) உலகமயமாக்கல்

ஆ) உலக வர்த்தக அமைப்பு

இ) புதிய பொருளாதாரக் கொள்கை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : இ )  புதிய பொருளாதாரக் கொள்கை


***************  *************   ************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

0 Comments