மகா சிவராத்திரி - சிவராத்திரி தோன்றிய வரலாறு - சிவராத்திரியில் என்ன செய்ய வேண்டும் ? / MAHASIVARATHITHIRI - SIVALINGAM VAZHIPAADU

 

மகா சிவராத்திரி - 01 • 3 • 2022

தென்னாடுடைய சிவன்

எந்நாட்டவர்க்கும் இறைவன்

சிவனார் திருப்புகழ் என்பது பேசப் பேச பெருகி வளர்வது.

கைலாய மலையில் இருக்கும் சிவபெருமான் அனைத்து உலகிற்கும் இன்பத்தை அருள்கிறார். அறியாமை அகற்றி ,விருப்பு , வெறுப்பு , கோபம் , பாவம் , மறுபிறப்பு என்னும் துயரங்களற்ற வாழ்வுதரும் வழிபாடு இந்த சிவவழிபாடு. சிவனைப் போற்றினால் பாவங்கள் கரைந்து, புண்ணியம் சேரும்.மாயப்பிறப்பை அழிப்பது அரன் வழிபாடு.அதுவே நல்வாழ்வு தரும்  சிவவழிபாடு. சிவராத்திரி நாளில் உதித்த ஞாயிறு மறைந்து அடுத்த நாள் காலை ஆதவன் புலரும் தருணம் வரை சிவனை சிந்தையேற்றி தியானித்து பூஜிப்பவர்களை அனைத்து   வளங்களையும் வழங்கி இறுதி மோட்சத்தையும் அருளவேண்டி அன்னை சிவசக்தி , சிவபெருமானிடம் கேட்டுக்கொள்ள ஈசனும் அவ்வாறே அருள் ஈந்து மகிழ்ந்த வரலாறே சிவராத்திரி ஆகும்.

சிவலிங்கம் :

லிங்-- லயம், கம் -- தோற்றம், உலகு தோன்றி ஒடுங்கும் இடம் தோற்றம் ஆகும்.பிரகாசம் -- படைத்தல் முதலான ஐந்து தொழில்களால் உலகை பிரகாசிக்கச் செய்வது ஆகும். 

சிவலிங்கம் பல புராணக்கதை களைக் கொண்டுள்ளது. இக்கதைகக்கும், மகா சிவராத்திரிக்கும் தொடர்பு உள்ளதாக நம்பிக்கை.அத்தகைய சிறப்புமிக்க நன்னாளில் சிவன் தன்னை " லிங்க " வடிவில் வெளிப்படுத்தினார். அந்த தொடங்கிய இந்த நாளை புனிதமானதாகக் கருதி வழங்கப்படுகிறது.இத்தகைய மகத்தான இரவே மகாசிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. இவற்றை வழிப்படும் விதமாக சிவ பக்தர்கள் பகல் பொழுதில் விரதம் ஏற்று இரவு முழுவதும் கண் விழித்து  இறைவனை வணங்கி மகிழ்வர்.அவ்வாறு வணங்கும் மானிடன் அனைத்துச் வளங்களையும் கைவரப் பெறுகிறான். அன்று இரவு முழுவதும் இறைவனுக்கு பால், திருமஞ்சனம் , இளநீர் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்  படுகிறது. மற்றும் நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பிக்கப் படுகிறது. சிவராத்திரி பற்றிய புராணங்கள் வழி நம்பப்பட்ட போதும் , அறிவியல் நோக்கோடும் ஆராயும் போது பல அரிய பொக்கிஷ செயல்களை காணமுடிகிறது.

இறைவழிபாடு என்பது இயற்கை வழிபாடு என்பது நமது முன்னோர்கள் கண்ட நம்பிக்கைக்குரிய வழிபாடாகிறது. சிவராத்திரி என்பது ஒரு விழா மட்டும் அல்ல, அது நம்மை கட்டுப்படுத்தவும், பின்பற்றவும் கிடைத்த வரம். இவையே விரதமானது.பிரபஞ்சத்தில் இருந்து வரும் சக்தியைப் பயன்படுத்தி வாழும் முறையை அறிந்த சித்தர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த உன்னதமான அரிய நாளே மகா சிவராத்திரி எனப் போற்றப் பட்டது.மேலும் ஈத்தர் எனப்படும் சக்தி பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் ஒரு முறை மாசி மாதத்தில் வரும் மகா சிவராத் திரியில் ஈஸ்டர் சக்தி அளவுக்கு அதிகமாகக் காணப்படும் எனவே இந்த இரவு மகா சிவ ராத்திரி என அழைக்கப் படுகிறது. பூமியை நோக்கி வரும் ஈத்தர் சக்தியானது இரண்டு விதமான தன்மைகளில் காணப்படுகிறது. அவை ஸ்பிரிங் மற்றும் ப்பால் எனப்படும்.ஸ்பிரிங்கிற்கு சக்தி அதிகம். ப்பாலுக்கு குறைவு.மகா சிவராத்திரியில் வரும் ஸ்பிரிங் சக்திவாய்ந்தாகக் காணப்படும்.இதில் ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றுகிறது.எனவே நேரடியான முழு சக்தி மகா சிவராத்திரியில் மட்டுமே கிடைப்பதாக அறியப்படுகிறது.மேலும் மகா சிவராத்திரி அன்று சூரியன் , பூமி , நிலா ஆகிய மூன் றும் ஒரே நேர் கோட்டில் காணப்படுகின்றன. எனவே இந்திய நாட்டில் நடு இரவான 12.15 - முதல் 12. 45 -- வரையிலான நேரத்தில் உச்சக் கட்ட ஈத்தர் சக்தி கிடைக்குமென அறியப்படுகிறது.எனவே இந்தத் தருணம்  சிறப்பு வாய்ந்தவை யாக விளங்குகிறது. இந்த நேரமானது நாட்டிற்கு நாடு மாறுபடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

சிவ ராத்திரியன்று தூங்காமல் விழித்திருந்து , முதுகை நேராக வைத்து தியானம் செய்வது மிக நன்மையைத் தரவல்லது. அதாவது யோக அடிப்படையில் நோக்கின் உச்சந் தலையில் உள்ள சகஸ்கர சக்கரத்தின் வழியாக மூளை யில் பல விதமான  நல்ல ஆர்மோன்களை சுரக்கச் செய்கிறது.இந்த நேரத்தை பயன்படுத்தி நன்மைகளைப் பெறக்கூடியதாக உள்ளது.இவை உடலுக்கும், மனதிற்கும் இதம் அளித்து பல விதமான சக்திகளைத் தருகிறது. நமது மனமே நமக்கு உண்டாகும் இன்பத் துன்பங்களுக்கு காரணமாக அமைகிறது.மனம் என்பது சந்திரனின் இயக்கத்தைப் பொருத்து செயல் படுகிறது. சந்திரன் வளர்பிறையும் , தேய்பிறையும்  என 15 -- நாட்களைக் கொண்டு விளங்குகின்றன. தேய்பிறையின் 14 - வது நாள் , அமாவாசைக்கு முந்தைய நாளான 14- ம் நாளில் சந்திரன் மறைந்து விடும்.அது போலவே மனித மனதில் ஆசைகள் தோன்றி பின் தேவையற்றதோ என எண்ணி சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்.  இவ்வாறாக நிலையற்ற தாகக் காணப்படும்  மனதை நிலைநிறுத்தவே தியானம் அவசியமாகிறது . கட்டுப்பட்ட மனதில் தோன்றிய ஆசைகள்யாவும் சிறு , சிறு வடுகளாகவே இருக்கத்தான்   செய்கிறது. அத்தகைய துயர் தரும் கெட்ட ஆசைகளை ஒழிக்கவே நமது முன்னோர்கள் சிவன் பதம் பணிந்து வழிபட்டனர்.

சிவராத்திரியில் கிடைக்கும் சக்தியை ஒரே நேர்கோடாக செலுத்தி , உடல் முழுவதும் பரப்பி நற்பலனை அடையவே சிவராத்திரி கொண்டாடப் பட்டது.ஆகவே இத்தத்துவத்தை உணர்த்து வழிபட " லிங்க " வடிவை அமைத்து ஆராதித்தனர்.  லிங்கம் என்பது முதலும் முடிவும் அற்றது.அதுபோலவே சிவனும் முதலும் முடிவும் அற்ற அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனாக திகழ்கிறார். 

ஒவ்வொரு அமாவாசை , பெளர்ணமி மற்றும் அந்த நாட்களுக்கு முன்னும் , பின்னும் வரும் தினங்களில் புவியில் சந்திரனின் காந்த சக்தியில் உண்டாகும் மாற்றத்தால் அனைத்து உயிர்களுக்கும் அந்த நேரத்தில் உதிக்கும்  எண்ணங்களால் பல துன்பம் உண்டாகிறது.இவை நம்மை ஒவ்வொரு மாதமும் கடந்து கொண்டேதான் உள்ளது .அவற்றை அடையாளம் கண்டு உணர்கிறோமா?  அறியாமையில் அலைகழிகிறோம். 

சந்திரன் மனதை ஆட்சி செய்யும் கடவுள்.எனவே மனித எண்ணங்களை ஆள்கிறான்.இதன் காரணமாக மன அழுத்தம் , சோர்வு , துக்கம் ,சீரண கோளாறு , வெப்பம் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே அமாவாசை நெருங்கும் நாட்களில் மனநோயாளிகள் படும் துன்பங்கள் வேதனைக் குரியது. இவற்றை மறந்து துன்பத்தில் உழல்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் அமாவாசை , பெளர்ணமி நாட்களிலும் , அவை சார்ந்த நாட்களிலும் விரதமும் , தியானமும் , தவமும் ,பண்டிகையும் , திருவிழாவும் , நெறியோடு வகைப்படுத்தி வாழ்வை மகிழ்வுள்ளதாக வசப்படுத்தினர்.அவை   இறைசக்தியோ!,அறிவியல் அபூர்வமோ! நலம் தரும் வாழ்விற்கு வழி காட்டும் சிவராத்திரியை போற்றி , சிவன் வழி தொடர்வோம்! ஆக்கப்பூர்வமான அபரிமிதமான சக்தியை பெற்று உடல் நலமும் , உள்ள நலமும் போற்றி நல்வாழ்வு பெறுவோம்!

Post a Comment

0 Comments