9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , குடும்ப விளக்கு - வினா & விடை / 9th TAMIL - EYAL 5 , KUDUMPA VILAKKU - QUESTION & NSWER - ONLINE TEST

 

9 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 5 , குடும்ப விளக்கு

வினா உருவாக்கம் 

பைந்தமிழ் மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97961 41410

**************    *************   ******

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம்  இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எனண்ணிற்கு அனுப்பி இணைப்பைப் பெறலாம்.

******************   *************   **********

1) குடும்ப விளக்கு ' என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ ) சுரதா

ஈ) முடியரசன்

விடை : ஆ ) பாரதிதாசன்

2 ) குடும்ப விளக்கு ------- பகுதிகளாகப்   பகுக்கப்பட்டுள்ளது.

அ ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

விடை : ஈ ) ஐந்து

3 ) பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ----- நூலுக்கு சாகித்திய அகாதமி விருது
வழங்கப் பட்டது.

அ ) பிசிராந்தையார்

ஆ) குடும்ப விளக்கு

இ) புரட்சிக்கவி

ஈ) இருண்டவீடு

விடை : அ ) பிசிராந்தையார்

4 ) கீழ்க்காணும் நூல்களில்
பாரதிதாசன் எழுதாத நூல் எது?

அ ) அழகின் சிரிப்பு

ஆ) தமிழியக்கம்

இ) பாண்டியன் பரிசு

ஈ) பாஞ்சாலி சபதம்

விடை : ஈ ) பாஞ்சாலி சபதம்


5) புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவை ----- இலக்கியங்கள்.

அ) பக்தி

ஆ) மறுமலர்ச்சி

இ) நவீன

ஈ) சங்க

விடை : ஆ ) மறுமலர்ச்சி

6 ) கல்வி இல்லாத பெண்களை ----- நிலம் என்கிறார் பாரதிதாசன்.

அ) களர்

ஆ) தரிசு

இ) குறிஞ்சி

ஈ) பாலை நிலம்

விடை : அ )  களர்


7 ) வையம் என்பதன் பொருள் ------

அ) நாடு

ஆ) உலகம்

இ) மாநிலம்

ஈ) வானுலகம்

விடை : ஆ ) உலகம்

8) சமைப்பவர் உணவோடு ------- யும் படைக்கின்றார்.

அ) சாதனையையும்

ஆ) இன்பத்தையும்

இ) துன்பத்தையும்

ஈ) கொள்கையையும்

விடை : ஆ ) இன்பத்தையும்

9 ) உணவினை ஆக்கல் மக்கட்கு ------
ஆக்கல் அன்றோ?

அ) உணர்வு

ஆ) உயிர்

இ )  உள்ளம்

ஈ) உடைமை

விடை : ஆ )  உயிர்

10 ) பெண்களுக்கு எப்போதும் -- --- வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.

அ ) கல்வி

ஆ) வீரம்

இ) தன்மானம்

இ) செல்வம்

விடை : அ ) கல்வி

11 ) கற்ற பெண்ணின் குடும்பம் ------ ஆக மிளிரும்.

அ ) பூஞ்சோலையாக

ஆ) அகல் விளக்காக

இ) பள்ளியாக

ஈ) பல்கலைக்கழகமாக

விடை : ஈ ) பல்கலைக்கழகமாக

12) குடும்ப விளக்கு இரண்டாம்
பகுதியில் ----- தலைப்பிலுள்ள
தலைவியின் பேச்சு பாடப்பகுதியாக
அமைந்துள்ளது.

அ) கல்வி

ஆ) வேலை

இ) விருந்தோம்பல்

ஈ) வீரம்

விடை : இ ) விருந்தோம்பல்

13 ) தணல் என்பதன் பொருள் ------

அ) தண்ணீர்

ஆ) நெருப்பு

இ) கல்வி

ஈ) தாகம்

விடை : ஆ ) நெருப்பு

14 ) சமைக்கும் கலன் என்னும் பொருள் தரும் சொல் எது ?

அ) தாலி

ஆ) தாளி

இ) தாழி

ஈ) அ , ஆ இரண்டும்

விடை : இ )  தாழி

15 ) பெண்கல்வி வேண்டும் யாண்டும் - இவ்வடியில்' யாண்டும்' என்ற சொல்லின்
பொருள் -----

அ) எப்பொழுதும்

ஆ) பகற்பொழுதும்

இ) இரவுப் பொழுதும்

ஈ) சில நேரங்களிலும்

விடை : அ ) எப்பொழுதும்

16 ) கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம் அந்நிலத்தில் - இவ்வடிகளில் அமைந்துள்ள தொடை நயம்

அ) மோனை

ஆ) எதுகை

இ) இயைபு

ஈ) அனைத்தும்

விடை : அ ) மோனை

17 ) இலக்கணக் குறிப்புத் தருக - மாக்கடல்

அ) உவமைத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ) உரிச்சொல் தொடர்

 ஈ) பண்புத்தொகை

விடை : இ ) உரிச்சொல் தொடர்

18 ) ஆக்கல் - இலக்கணக்குறிப்பு ------

அ) தொழிற்பெயர்

ஆ) உம்மைத்தொகை

இ )  பெயரெச்சம்

ஈ) உவமைத்தொகை

விடை : இ ) தொழிற்பெயர்


19 ) வில்வாள் - இலக்கணக் குறிப்பு -----

அ) உவமைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) உரிச்சொல் தொடர்

ஈ) உம்மைத்தொகை

விடை : ஈ )  உம்மைத்தொகை
.
20 ) மலர்க்கை - இலக்கணக்
குறிப்பு

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ ) உவமைத்தொகை

ஈ ) உம்மைத்தொகை

விடை : இ ) உவமைத்தொகை

****************   *************  *********
Post a Comment

0 Comments