10 ஆம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் திருப்புதல் தேர்வு - வினாத்தாள் வகை - B /வினா & விடை / 10th TAMIL - SECOND REVISION TEST - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

வினாத்தாள் வகை -  

இரண்டாம் திருப்புதல் தேர்வு - 2022

மதிப்பெண்கள் : 100

பதிவு எண்

காலம் : 3.00 மணி

பகுதி - 1

குறிப்பு : 1) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 2) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15X1 = 15

1 ) ' உனதருளே பார்ப்பன் அடியேனே' - யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி 

ஈ) நோயாளியிடம் மருத்துவர்

விடை : ஆ ) இறைவனிடம் குலசேகராழ்வார்

2. வித்துவக்கோடு - என்னும் ஊர் உள்ள மாநிலம்

அ) ஆந்திரா

ஆ) கேரளா

இ) தமிழ்நாடு

ஈ) கர்நாடகா

விடை : ஆ ) கேரளா

3. “வாடா கண்ணா” - என்று தன் மகளை தாய் அழைப்பது:

அ)பால் வழுவமைதி 

ஆ) திணை வழுவமைதி

 இ) இட வழுவமைதி

 ஈ) மரபு வழுவமைதி

விடை : அ ) பால் வழுவமைதி

4. "மாளாத" - என்றசொல்லின் பொருள் :

அ) ஓயாத

ஆ) முறியாத

இ) தீராத

ஈ) ஆகாத

விடை : இ ) தீராத

5. தன்மை. முன்னிலை, படர்க்கை என்பன ............ ஐ குறிப்பனவாகும்.

அ) மூன்று காலங்கள் 

ஆ) மூன்று பால்கள்

இ) மூன்று நிலைகள் 

ஈ) மூன்று இடங்கள்

விடை : ஈ ) மூன்று இடங்கள்

6. "ஒரு பேனா எழுதக் கிடைக்குமா”? என்று நீங்கள் கேட்கும்போது இந்தப் பென்சிலை எடுத்துக்கொள் என உங்கள் நண்பன் கூறுவது

அ) வினா எதிர் வினாதல் விடை

 ஆ) உற்றது உரைத்தல் விடை 

இ) இனமொழி விடை 

ஈ) உறுவது கூறல் விடை

விடை : இ ) இனமொழி விடை

7. அருந்துணை என்பதைப் பிரித்தால்

அ) அருமை + துணை 

ஆ) அரு+ துணை

இ) அருமை + இணை

ஈ) அரு + இணை

விடை : அ ) அருமை + துணை

8. “பொருள்கோள்” என்பது சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்து அல்லது ------- பொருள் கொள்வதாகும்

அ) உருவாக்கி

ஆ) எழுதி

இ) மாற்றி

ஈ) திருத்தி

விடை : இ )  மாற்றி

9 ) கோசலநாட்டில் கொடை இல்லாத கரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் 

 ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சிபுரிவதால்

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

விடை : ஈ ) அங்கு வறுமை இல்லாததால்

10. மருத நிலப்பகுதிக்கு அழகு சேர்ப்பன :

அ ) புல்வெளிகள்

ஆ) விலங்கினங்கள் 

(இ) நீர் நிலைகள்

ஈ) மரம் செடிகள்

விடை : இ ) நீர் நிலைகள்

11. இளவேனில் காலம் என்பது

(அ) சித்திரை, வைகாசி 

ஆ) ஆனி. ஆடி

இ) ஆவணி, புரட்டாசி 

ஈ) ஐப்பசி, கார்த்திகை

விடை : அ ) சித்திரை , வைகாசி

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு

 அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று

12. 'மருளை அகற்றி' என்பதில் மருள் என்ற சொல்லின்பொருள் :

அ) மயக்கம்

ஆ) மகிழ்ச்சி

இ) மனத்திட்பம்

ஈ) இருள்

விடை : அ ) மயக்கம்

13 இப்பாடலில் மதி என்ற சொல் குறிப்பது

அ) பண்பு

ஆ) பணிவு

இ) அறிவு

ஈ) மகிழ்வு

விடை : இ ) அறிவு 

14. “கல்வியென்றே”- என்றசொல்லை பிரிக்கக் கிடைப்பது

அ) கல்வி + என்றே 

ஆ) கல்வி + யென்றே 

இ) கல்வி + அன்றே 

ஈ) கல்வி + யன்றே

விடை : அ ) கல்வி + என்றே

15. இப்பாடலில் பெருமைப் படுத்தப்படுவது :

அ) தமிழ்

ஆ) அறிவியல்

இ) கல்வி

ஈ) இலக்கியம்

விடை : இ ) கல்வி


பகுதி - II  பிரிவு -1

குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.                              4X2=8

16 ) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ) தமிழர் பண்டைய நாட்களிலிருந்து அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக்காணும் இயல்புடையவர்கள்.

வினா : 

பண்டைய நாட்களிலிருந்து அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக்காணும் இயல்புடையவர்கள் யார் ?

ஆ) “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பாரதி பெருமைப்படுகிறார்.

வினா : " கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று பெருமைப்படுபவர் யார் ?

17 ) செய்குதம்பி பாவலரின் கல்விபற்றிய கருத்துக்களில் இருந்து இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

அருளைப் பெருக்கிட கல்வி கற்போம் !

அறிவைத் திருத்திட கல்வி கற்போம் !

மயக்கம் அகன்றிட கல்வி கற்போம் !

அறிவிற் சிறந்திட கல்வி கற்போம் !



18 ) கம்பனைப் பற்றிய புகழ்மொழிகள் இரண்டினை எழுதுக. 

* கல்வியிற் சிறந்தவன் கம்பன்.

* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

19 ) உறங்குகின்ற கும்பகன்ன எழுந்திராய் எழுந்திராய்'
காலதூதர்கையிலே உறங்குவாய் உறங்குவாய்'
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்க சொல்கிறார்கள்?

* கும்பகருணனே ! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம்  இன்றிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.

* வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.



20. - கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

அ) உழவர்கள் மலையில் உழுதனர்.

விடை : குறவர் மலையில் மலைநெல் வித்தினர்.

 ஆ ) முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாரே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

விடை : தாழம் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.


21 ) 'உலகு' என நிறைவுறும் திருக்குறளை எழுதுக.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

பிரிவு - 2

குறிப்பு : எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                    5X2= 10
22. கலைச்சொற்கள் தருக. 

அ) Terminology - கலைச்சொல்

ஆ) Intellectual - அறிவாளர்

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்காண மாற்று வினா :
தனிப்பெயர்களை எழுதுக. 

அ) மாடுகள் - மாடு 

 ஆ) செங்கற்கள் - செங்கல்

23. தன்மைப் பெயர்களை அட்டவணைப்படுத்துக.

நான் , யான் , நாம் , யாம் 

24. "எய்ட் தேர்ட்டி பஸ் ஐ மிஸ் பண்ணிட்டேன்டா. ஃபிரண்டை பைக்ல ஸ்கூல்ல டிராப் பண்ண சொல்லி இருக்கேன். ஸ்கூலுக்கு நைன் தேர்ட்டிக்கு ரீச் ஆயிடுவேன்னு சார்கிட்ட சொல்லிடு”.

- அயல்மொழிச் சொற்களை நீக்கி சரியான தமிழ் சொற்களை இட்டு பத்தியை சரி செய்க.

விடை :

எட்டரை மணிக்கு வந்த பேருந்தை தவற விட்டுவிட்டேன். நண்பனை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் இறக்கிவிடச் சொல்லி இருக்கேன். பள்ளிக்கு ஒன்பதரைக்கு வந்து விடுவேன் என்று ஆசிரியரிடம் சொல்லிவிடு.

25. உறங்குவாய் - பகுபத உறுப்பிலக்கணம் தருக. 

உறங்கு  - பகுதி 

வ் - எதிர்கால இடைநிலை

ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி


26. கொண்டு கூட்டு பொருள்கோள் - குறிப்பெழுதுக.

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்.

எ.கா.

ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு.

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு , குளத்துள குவளை - என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

27 ) பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

பகலவன்பட்டொளி இராமனின்நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட இடையே இல்லையெனும்
படியான நுண்ணிய இடையாள் சீதையொடும் இளையவன் இலக்குவனொடும் போனான் அவன் நிறம் மையோ பச்சைநிற மரகதமோ மறிக்கின்ற நீலக்கடலோ கார்மேகமோ ஐயோ ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.

பகலவன்பட்டொளி இராமனின்நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட , இடையே இல்லையெனும்
படியான நுண்ணிய இடையாள் சீதையொடும் இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ ?
பச்சைநிற மரகதமோ ? மறிக்கின்ற நீலக்கடலோ ?  கார்மேகமோ ? ஐயோ ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.

28. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக. 

மரம், சந்தனம், கொடி, முல்லை, காடு, மணம்.

* சந்தன மரம்

* கொடி முல்லை

* முல்லை மணம்

* சந்தனக் காடு

பகுதி - 1 பிரிவு -1

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2X3=6

29. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

    ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றைக் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்டசேனையைக்
கண்டு ,  புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல் ஒப்பற்ற
சொல் அல்லவா? தோழமையை எண்ணாமல் இவர்களை கடந்து போகாவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப் பழி சொல்லமாட்டார்களா?

அ) கங்கை ஆற்றினை ஏன் கடந்து செல்ல முடியாது? 

       ஆழமும் , பெரிய அலைகளையும் உடையது கங்கை ஆறு. அதனால் கங்கை ஆற்றைக் கடந்து செல்ல முடியாது.

 ஆ) உலகத்தார் எவ்வாறு பழிப்பர் என வேடன் கூறுகிறார்?

            அற்பன் என்று தன்னை உலகத்தார் பழிப்பர் என வேடன் கூறுகிறார்.

இ) வீரர்கள் புறமுதுகு காட்டுவதற்கான காரணமாக சுட்டப் பெறுவது என்ன?

       வீரர்கள் புறமுதுகு காட்டுவதற்கான காரணமாகச் சுட்டப்படுவது 
யானைகள் கொண்ட சேனையாகும்.

30. அறிவினா, அறியாவினா, ஐயவினா - ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தருக.

அறிவினா - மாணவரிடம் ' இந்தக் கவிதையின் பொருள் யாது ? ' என்று ஆசிரியர் கேட்டல்.

அறியா வினா - ஆசிரியரிடம் , ' இந்தக் கவிதையின் பொருள் யாது ? ' என்று மாணவர் கேட்டல்.

ஐயவினா - ' இச்செயலைச் செய்தது மங்கையா ? மணிமேகலையா ? ' என வினவுதல்.

31 ) 'தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க' - இடம் சுட்டிப் பொருள் எழுதுக.

இடம் : கம்பராமாயணம் , பாலகாண்டம் , நாட்டுப் படலத்தில் இவ்வடி இடம் பெற்றுள்ளது.

பொருள் : 

குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட , விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்றுவதாக இயற்கைக் காட்சியைப் பெரிய கலைநிகழ்வு நடப்பதாக கம்பன் காட்டுகிறது.


பிரிவு - 2

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

வினா எண் 34 - க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். 2X3=6

32. செயற்கை அறிந்த கடைத்தும் - உலகத்
தியற்கை அறிந்து செயல்

அ) அடி எதுகை சொற்களை எடுத்தெழுதுக.

செற்கை - இற்கை  - ய 

ஆ) திருவள்ளுவர் ஒரு செயலை எவ்வாறு செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்?

                  ஒரு செயலைச் செய்வதற்கு முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் , உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

இ) ' இயற்கை' என்ற சொல்லைக் கொண்டு தொடர் ஒன்றை உருவாக்குக.

       இன்றைய அறிவியல் உலகில் நாம் இயற்கையோடு இணைந்து வாழவேண்டும்.

33. மருத்துவர். மருத்துவம், மருத்துவமனை ஆகியவற்றின் அக்கால. இக்கால நிலைகள் பற்றி மூன்று தொடர்கள் எழுதுக.

34. அடிபிறழாமல் எழுதுக.

அ) "வெய்யோன் ஒளி தன் மேனியில்” எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்.

தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
வண்டுகளினிதுபாட மருதம் வீற்றிருக்கும்மாதோ.* (35)



 (அல்லது)

ஆ) “வாளால் அறுத்துச்” எனத் தொடங்கும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி பாடல்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

*****************   ***********  *************

************    **************  *************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

2 Comments