PG - TRB - தமிழ் - சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு

 


PG - TRB - தமிழ்

சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு 



7. நெடுநல்வாடை

* இது நக்கீரர் பாடிய 188 அடிகளைக் கொண்ட பாட்டு.

* இப்பாட்டில் அகத்திணைக்கு உரிய செய்திகளே இடம் பெற்றுள்ளன.

* எனினும் வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம் என்று வரும் தொடர்   பாண்டியனின் அடையாள மாலையைக் குறிக்கிறது என்று சொல்லி இதனைப் புறப்பாட்டு ஆக்கிவிட்டார் நச்சினார்க்கினியர்.

* அதனால் இது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப் பாடிய பாட்டாயிற்று. ஆனால், இதனை அகப்பாட்டாகவே கருதுவோரும் உண்டு.

* தலைமகனைப் பிரிந்து வருந்தும் தலைமகளுக்கு வாடைக்காற்று,ஒரு பொழுது ஓர் ஊழி போலத் தோன்றும். அதனால் நெடிதாகி வாடையாக அமைந்தது.

* ஆனால் பாசறையில் தங்கியிருக்கும் வேந்தனுக்கு வினைமுடிக்கப் பாங்காக நல்ல வாடையாகவும் இருந்தது.

* ஆனால், இதற்கு நெடுநல்வாடை என்னும் இனிய பெயர் அமைந்தது.

* குளிரின் கொடுமையால் வருந்தும் மக்கள், ஆநிரைகள், பறவை,விலங்குகள் நிலை, அரண்மனை அமைப்பு, அரசியின் வருத்தம், செவிலியரும் பிறரும் கூறும் ஆறுதல் மொழி, மன்னன் புண்பட்ட மறவர் களை நள்ளிரவில் சென்று ஆற்றுவித்தல் முதலியன விளக்கமாகக் கூறப்படுகின்றன.

* சொல்லுக்குக் கீரன் என்னும் புகழ்மொழியை மெய்ப்பிக்கும் அரிய
படைப்பு நெடுநல்வாடை எனலாம்.

8. குறிஞ்சிப்பாட்டு

* குறிஞ்சித்திணை பற்றிக் கூறுவதால் இதற்குக் குறிஞ்சிப்பாட்டு
என்னும் பெயர் அமைந்தது.

* இது ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

* இதனை உரையாசிரியர்கள் பெருகுறிஞ்சி என்றும் வழங்கியுள்ளனர்.

* இது 261 அடிகளைக் கொண்டது.
இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் துறையில் அமைந்தது.
தலைமகள் தினைப்புனம் காத்த வகையும் புனலாடியதும் பூக்கொய்தலும்
ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

* இதில் செங்காந்தள் தொடங்கி மலை எருக்கம் பூ வரை 99 பூக்களின்
பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தலைமகள் இருக்கும் தினைப்புனத்திற்குத் தலைவன் வருதல்,
தலைமகன் மகளிரிடம் பேச முயலுதல், அங்கு யானை வருதல்,
அதனைத் தலைமகன் துரத்துதல், தலைமகளை நீரிலிருந்து எடுத்துக்
காப்பாற்றுதல், தலைமகன் தலைமகளைக் கூடுதல், மாலையில்
தலைமகன் பெயர்தல், தலைமகளின் கலக்கம், இரவில் தலைமகள்
வரும் வழியின் அருமை முதலிய செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

* இவற்றையெல்லாம் தாயின் துயரத்தைப் போக்கவும் தலைமகளின்
கற்புநெறியைக் காக்கவும் தோழி சொல்லி அறத்தொடு நிற்கிறாள்.
ஆபரணங்கள் கெட்டால் திருத்திச் செய்து கொள்ளலாம். ஆனால்
ஒழுக்கங்கெட்டால் மீண்டும் திருத்துவது இயலாது என்னும் நல்ல
கருத்து இனிது தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments