PG TRB TAMIL
7. பரிபாடல்
* திணை - அகமும் புறமும்
பாவகை - பரிபாட்டு
பாடல்கள் - 70 (கிடைத்தவை 22)
பாடிய புலவர்கள் 13 பேர்,
* அடிவரையறை - 25 - 400
பெயர்க்காரணம்:
* வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் பல வகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மையால் பரிபாட்டு ஆனது.
* வேறு பெயர்கள்: பரிபாட்டு, ஓங்கு பரிபாடல், இசைப்பாட்டு, பொருட்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல் நூல்,
* தொல்காப்பிய விதிப்படி அமைந்த தொகை நூலாகும். தெய்வங்கள்
அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகுப்பு நூலாகும்.
* பாண்டிய நாட்டை பற்றி மட்டுமே கூறுகிறது. பாண்டிய நாட்டை மட்டும்
கூறும் தொகை நூல்கள் பரிபாடல், கலித்தொகை. 'கின்று' என்னும்
காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில்தான் அமைந்துள்ளது.
உலகத் தோற்றம் குறித்தும் கூறுகிறது.
* பரிபாடலில் அமைந்துள்ள எண்ணுப் பெயர்களாவன,
0 - பாழ்
1/2 - பாகு
9 - தொண்டு
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட்கு ஒன்று - மருவினிய
பாவயை இரு பத்தாறு மாமதுரைநான் கென்ப
செய்யபரி பாடல் திறம்.
பகுப்புமுறை
தெய்வம் பாடல் கிடைத்தவை
திருமால் 8 6
செவ்வேள் 31 8
காடுகாள் (காளி) 1 0
வையை 26 8
மதுரை 4 0
மொத்தம் 70 22
* இந்நூலை 1918-இல் முதன் முதலாகப் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாத ஐயர் ஆவார்.
*************** ************* *************
கல்விப் பணியில் ,
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் . மதுரை - 97861 41410
YOU TUBE - GREEN TAMIL
************** *********** **************
0 Comments