PG - TRB , தமிழ் - பகுதி 7 , சங்க இலக்கியம் - எட்டுத்தொகை - 8 , பதிற்றுப்பத்து / PG TRB - TAMIL - PART 7 - SANGA ILAKKIYAM 8 - PATHITRUPPATHTHU

 

PG TRB - தமிழ் 



8 , பதிற்றுப்பத்து

*  இது சேர மன்னர் பதின்மர் பற்றிய நூல், பத்துப் புலவர்கள் பாடியது.

* ஒரு மன்னருக்குப் பத்துப் பாடல்கள் என்னும் முறையில் நூறு பாடல்கள் கொண்டது.

* முதற் பத்தும் இறுதிப் பத்தும் மறைந்தன. ஒவ்வொரு பத்தின்   இறுதியிலும் ஒரு பதிகம் உள்ளது.

*அதில் பாடியவர் பெயர், செய்யுட்களின் பெயர், புலவர்கள் பெற்ற பரிசில், அவ்வரசரின் ஆட்சிக்கால அளவு முதலிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

* இப்பதிகம் பிற்கால மெய்க்கீர்த்தியின் அமைப்பினை உடையது.ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் அப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு, பெயர் ஆகியன தரப்பட்டுள்ளன.

* இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க்   கண்ணனார் பாடியது..

* மூன்றாம் பத்து, பல்யானைச் செல்கெழு குட்டுவனைக் குறித்துப்பாலைக் கௌதமனார் படைத்தது.

* நான்காம் பத்து, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பற்றிக்   காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.

* ஐந்தாம் பத்து, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மீது பரணர் பாடியது.

* ஆறாம் பத்து, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றி காக்கைப்   பாடினியார் இசைத்தது.

* ஏழாம் பத்து செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குறித்துக் கபிலர் பாடியது.

* எட்டாம் பத்து, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, மீது அரிசில் கிழார் யாத்தது.

*  ஒன்பதாம் பத்து, இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பெருங்குன்றூர் கிழார் இயற்றியது.

* இது சேர மன்னர்களின் வெற்றிச் சிறப்பு, நாடு காத்தற் சிறப்பு, கொடைச் சிறப்பு முதலியவற்றைத் தெரிவிக்கிறது.


***************   *************   *************

கல்விப் பணியில் ,

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் . மதுரை - 97861 41410 

YOU TUBE - GREEN TAMIL

**************    ***********   **************




Post a Comment

0 Comments