தமிழ் - முதுகலை
PG TRB - தமிழ்
7 , சங்க இலக்கியம்
" நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை "
*எட்டுத்தொகை , பத்துப்பாட்டு ஆகியவை சங்க நூல்களாகும்.
* இவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் .
எட்டுத்தொகையில் அகப்பொருள் நூல்கள்.
* நற்றிணை
* குறுநுதொகை
* ஐங்குறுநூறு
*கலித்தொகை
* அகநானூறு
புறப்பொருள் நூல்கள்
* புறநானூறு
* பதிற்றுப்பத்து
அகமும் புறமும் கலந்த நூல்
* பரிபாடல்
எட்டுத்தொகை
1. புறநானுாறு
நூற்குறிப்பு :
புறநானூறு - புறம் + நான்கு + நூறு.
*இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்கள் அடங்கிய தொகை நூலாகும்.
* புறப்பொருள் என்பது பண்டைய தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கொடைத்திறன், வீரம் போன்றவற்றை அறிய உதவும் நூலாகும்.
*எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறு சங்க நூல்களுள் இதில். சங்க இலக்கியம் ஈராயிரம் (2000) ஆண்டுகள் பழைமை உடையது.
* இந்நூலில் உள்ள பாடல்கள், பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டது.
* அரசன் முதல் சாதாரணக் குடிமகன் வரை பல்வேறு தொழில் புரிந்தவர்களும் புலமை மிக்கவராய்ப் பாடல்கள் இயற்றியுள்ளனர். புறநானூற்றில் அவர்களின் பாடல்கள் உள்ளன.
* புறநானூற்றிற்கு கடவுள்வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
* இந்நூல் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு ஆகும்.
* இந்நூலைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை.
* இந்த நூல் பண்டைக்காலத் தமிழர்களின் உயர்ந்த நாகரிகம், அரசியல், போர்த்திறம், சமுதாயப் பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் கருவூலம் ஆகும்.
* புறநானூற்றில் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் உள்ளன. இவற்றில் உழிஞைத் திணைப் பாடல்கள் இல்லை.
* ஜி.யூ. போப் என்ற மேல்நாட்டு அறிஞரால் இந்நூலின் சில பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
* ஏட்டுச்சுவடிகளில் இருந்து இந்நூலை முறையாக அச்சில் ஏற்றி பதிப்பித்த பெருமை உ.வே. சாமிநாத ஐயர் அவர்களைச் சேரும். பதிப்பித்த ஆண்டு 1894.
*************** ************* *************
கல்விப் பணியில் ,
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் . மதுரை - 97861 41410
YOU TUBE - GREEN TAMIL
************** *********** **************
0 Comments