உலகத் தாய்மொழி தினம்
அன்னைத் தமிழும்
அழகு பொங்கு தமிழும்...
அன்னை மொழியே! ஆசைத் தமிழே!
அழகுத் தமிழே! அறிவுத் தமிழே!
செம்மொழியே !செந்தமிழால்
எம்வாழ்வில் இணைந்தாயே!
இனிமை கூட்டும் இன்ப மொழியே!
இளமை காக்கும் அருமை மொழியே!
துன்பம் போக்கும் துடிப்பு மொழியே!
நன்மை விளைக்கும் நற் செம்மொழியே!
அன்பைச் சொன்ன அமுத மொழியே!
அறிவை வளர்த்த அழகு மொழியே!
ஆற்றலைத் தந்த அருமை மொழியே!
ஆர்வத்தை ஊட்டும் பெருமை மொழியே!
தமிழ்ச் சொல் ஒன்றே போதுமே
தரணியில் என்றும் நம்மை உயர்த்துமே!
செம்மொழித் தமிழ் தினமும் பேசவே
சென்ற இடமெல்லாம் தமிழ் சிறந்திடுமே!
உணர்ச்சியின் உச்ச மொழியாம் தமிழே !
உள்ளத்தின் உயிராம் எங்கள் தமிழே !
மனிதத்தைக் காக்கும் மாண்பமை மொழியே!
மனிதர்களை இணைக்கும் நட்புப் பாலமே!
உலகிற் சிறந்த முதல் மொழியே!
உயிரெழுத்துக்களால் உயிரானாய்!
மெய்யெழுத்துக்களால் உடலானாய்!
அழியா நிலை பெற்றாய்! எம்முயிர் மூச்சானாய்!!
திருமதி உமா மகேஸ்வரி,
முதுகலைத்தமிழாசிரியை & தலைமையாசிரியை
அ.மே.நி.பள்ளி,
சத்திரரெட்டியபட்டி, விருதுநகர்.
0 Comments