தமிழ் - சங்கப் புலவர்கள் - பகுதி - 4
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி:
* பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய குணங்கள் அனைத்தையும் தம் இளமைக் காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள் இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர். கடற்செலவு (கடற்பயணம்) ஒன்றில் இறந்தமையால் இவர், 'கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி'' என அழைக்கப்பட்டார். இவர் பாடிய பாடல்களில் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.
பேயனார்:
இவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.
- பிசிராந்தையார்
+ 'பிசிர்' என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊராகும். ஆந்தையார் என்பது இப்புலவரின் பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னன் அறிவுடைநம்பி. பிசிராந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் ஆவார். சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர் நீத்தவர். புலவரும் மன்னனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பு கொண்டிருந்தனர். சோழமன்னன் வடக்கிருக்கும் போதுதான் இருவரும் முதன்முறையாகச் சந்தித்தனர்.
காவற்பெண்டு
+ சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழமன்னன் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும், கவி பாடும் ஆற்றலும் மிக்கவர். இவர் பாடிய ஒரேயொரு பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
+ சங்ககால புலவர் ஆவார். இவர் கடியலூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவர் பத்துப்பாட்டில், பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
குடவாயிற் கீரத்தனார்
+ இவர் சங்ககர்லப் புலவர்களில் ஒருவர் இவரது 18 பாடல்கள் சங்கத்தொகை ல்களில் இடம்பெற்றுள்ளன. இவர் தன்பாடல் ஒன்றில் ‘தேர்வண் சோழர் குடந்தைவாயில்' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இவர் குடவாயிலில் வாழ்ந்தவர் எனத் தெரிகிறது.
மருதன் இளநாகனார்
சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையின் மருதத்திணையில் 35 பாடல்களையும் பாடியவர் மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்பட்டார்.
பரமாசாத்தியார்
சங்ககாலத்தைச் சேர்ந்த அக இலக்கிய கவிஞர்கள் ஒக்கூர் மாசாத்தியார் குறிப்பிடத்தக்க பெண்பாற்புலவர் ஆவார். இவர் பாண்டிய நாட்டின் திருக்கோஷ்டியூரின் அருகிலுள்ள ஒக்கூர் என்ற ஊரில் பிறந்தவர். இவர் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
0 Comments