PG - TRB - தமிழ் - சங்க இலக்கியம் - 2 அகநானூறு - முதன்மைச் செய்திகள் /PG TRB TAMIL - SANGA ILAKKIYAM - AKANANOORU

 

தமிழ் - முதுகலை

PG TRB - தமிழ்

7 , சங்க இலக்கியம்சங்க இலக்கியம் - 2.அகநானூறு

பெயர்க்காரணம் :

* அகம் + நான்கு + நூறு = அகநானூறு அகப்பொருள் சம்பந்தமான நானூறு பாடல்களைக் கொண்ட நூலாதலின் அகநானூறு எனப் பெயர் பெற்றது. இந்நூல் அகம் எனவும் வழங்கப்பெறும்.

* இந்நூல் அகப்பொருள் நூல்களுள் பதின்மூன்று அடிமுதல் முப்பத்தோரு அடிகள்வரை அமைந்த ஆசிரியப் பாக்களைத் தொகுத்து   உருவாக்கப்பட்டதால் இது நெடுந்தொகை' எனவும் வழங்கப் பெறும்.

அகப்பொருள் :

* அறம், பொருள், இன்பம் என்பவற்றுள், ஒத்த அன்புடைய தலைவனும்   தலைவியும் தம் உள்ளத்துணர்வால் உணர்ந்து இன்புறக்கூடியதும்   புறத்தார்க்கு இத்தகைத்து என எடுத்துக் கூற இயலாததுமாகிய இன்பத்தைப் பற்றிக் கூறுவதே அகம் என்றும் அகப்பொருள் என்றும் கூறப்படும்.


நூல் அமைப்பு :

* அகநானூறு என்னும் இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

* பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய அகப்பொருள் பாடல்களைத் தொகுத்து அமைத்த நூல் இது.

* இதனைத் தொகுத்தவர் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திர சன்மர் என்பவராவர்.

* தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியாவான்.

* பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் இதற்குக் கடவுள்வாழ்த்துப்
பாடியுள்ளார்.

* இந்நூலில் முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிரை எனவும்,
அடுத்த 180 பாடல்கள் மணிமிடை பவளம் எனவும், அடுத்த 100 பாடல்கள் நித்திலக் கோவை எனவும் வழங்கப்பட்டு இந்நூல் முப்பெரும் பிரிவுகளாய் அமைந்துள்ளது.

* இந்நூலை 1, 3 ஒற்றைப்படை எண் கொண்ட பாடல்கள் யாவும்,
பாலைத்திணைப் பாடல்களாகவும் 2, 8 என்னும் எண் கொண்ட பாடல்கள் யாவும் குறிஞ்சித்திணைப் பாடல்களாகவும் 4, 14
என்னும் எண் கொண்ட பாடல்கள் யாவும் முல்லைத்திணைப் பாடல்களாகவும் 6, 16 என்னும் எண் கொண்ட பாடல்கள் யாவும்
மருதத்திணைப் பாடல்களாகவும், 10, 20 என்னும் எண் கொண்ட பாடல்கள் யாவும் நெய்தல்திணைப் பாடல்களாகவும் தொகுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

*இதன்மூலம் பாட்டின் எண்ணைக் கொண்டே அப்பாடல் எத்திணைக்கு
உரியது என எளிதில் அறியலாம்.
சொல்ல வந்த கருத்தை 'உள்ளுறை' வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு. அகநானூற்றில் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

* பாலைத் திணைப்பாடல்கள் -  200
குறிஞ்சித் திணைப்பாடல்கள் -  80
முல்லைத் திணைப்பாடல்கள்  - 40
மருதத் திணைப்பாடல்கள்   -      40
நெய்தல் திணைப்பாடல்கள் -     40

நூலின் பெருமை :

* இந்நூல் பண்டைக்கால இன்பியல் வாழ்க்கையைச் சுவைபடச்
சித்திரிப்பதுடன் பண்டைத் தமிழரின் உயர்ந்த பண்பாடு, நாகரிகம்,
பழக்கவழக்கங்கள், ஐந்நில அமைப்பு, அங்கு வாழும் மக்களின்
இயல்புகள், தொழில், உணவு, பொழுதுபோக்கு முதலியவற்றை
இயற்கை நலம் அமைய எடுத்துரைக்கிறது.

* இடையிடையே இயற்கை வருணனைகள், உவமை, உருவகம்,
உள்ளுறை, இறைச்சி, முதலிய அணி நலங்கள் அமையக் கற்பவர்
மனம் களி தளும்பக் கவினுறப் புனைந்து காட்டுகிறது.

* அகப்பொருள் பாடல்களில் சுட்டி ஒருவர் பெயர் கூறுதல் கூடாது.
தலைவன், தலைவி, தோழி, செவிலி என்று கிளவிக்குரியர் கூற்றாகவே
யாவும் கூறப்பட வேண்டும் என்பது மரபு.

* ஆதலால், பழந்தமிழ் வேந்தர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள்
ஆகியவர் தம் வரலாற்று நிகழ்ச்சிகள் நேரே கூறப்பன்னும் உவமைகள் வாயிலாகக் கூறப்படுகின்றன ஆதலால், 
* இந்நூல் வரலாற்றாய்ச்சிக்கும் பேருதவி புரிவதாகும் எட்டுத்தொகை நூல்களில்
எந்தச் சிதைவும் குறைவுமின்றி நிறைவுடன் கிடைத்துள்ளவை
அகநானூறும் கலித்தொகையும் ஆகும்

* இந்நூலை முதன் முதலாகப் பதிப்பித்தவர் ரா. இராகவையங்கார்
ஆவார்.

***************   *************   *************

கல்விப் பணியில் ,

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் . மதுரை - 97861 41410 

YOU TUBE - GREEN TAMIL

**************    ***********   **************

Post a Comment

0 Comments