பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

 தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள்.

+ அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் (4 அடிகளுக்கு) மிகாமல் உரைப்பது.

+ பதினெண்கீழ்க்கணக்கு என்னும் வழக்கைக் கொண்டு வந்தவர்கள்  மயிலைநாதர் மற்றும் பேராசிரியர்.

‘அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி

அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வத்

திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்' - பன்னிருபாட்டியல்.

மேற்கண்ட பாடலடிகள் கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் பற்றி கூறுகிறது.

கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய பாடல் :

“நாலடி நாண்மணி நா நாற்பது ஐந்திணை முப்

பால் கடுகம் கோவை. பழமொழி மாமூலம்

இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே

கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு

நீதி நூல்கள் -11 : திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி.

அகத்திணை நூல்கள் -6 : ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.

புறத்திணை 1 + 1 : களவழி நாற்பது, இன்னிலை*Post a Comment

0 Comments