தமிழ் - சங்கப் புலவர்கள் - பகுதி - 3


தமிழ் - சங்கப் புலவர்கள் - பகுதி - 3

நக்கண்ணையார்

+ இவர் பெண்பாற் புலவர் ஆவார். 'பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை' எனவும் கூறப்படுவார். உறையூர் வீரை வேண்மான் வெளியள் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி ஆவான்.

+ அவன் தன் தந்தையொடு பகைத்துக்கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான். அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பானைப் போரில் வெற்றி கொள்கிறான்.

+ அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனை மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83, 84, 85 -ஆம் பாடல்கள் மூலம் அறிகிறோம்.

ஓதலாந்தையார்

* ஆந்தையார் என்பது இவர் இயற்பெயராகும். ஓதலூர் என்னும் ஊரினராதலின் ஓதலாந்தையார் என்று அழைக்கப்பட்டார். ஓதலூர் மேலைக் கடற்கரைப் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது. இவர் பாட்டுகளில் பெரும்பாலானவை பாலைத்திணைப் பாடல்களாகும். ஆந்தை என்பது ஆதன் தந்தை எனபதன் மரூஉ மொழியாகும்.

பரணர்

+ இவர் வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல்களால் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர். கபிலர் போல மிக்க புகழுடன் வாழ்ந்தவர். கபிலபரணர் என்னும் தொடரால் இது விளங்கும். இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடிக் கடல்பிறகோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர்.

குடபுலவியனார்

+ குடபுலவியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு மட்டும் புறநானூறு 18, 19 எண் கொண்ட பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இரண்டு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியவை.

+ குடபுலம் என்பது சேரநாட்டைக் குறிக்கும். பாணர்களின் இசைக்கருவிகளை `இயம்' என்பர். எனவே 'இயனார்' என்னும் சொல் இசைவாணரைக் குறிக்கும். இவற்றால் இந்தப் புலவர் சேரநாட்டு இசைக் கலைஞர் எனத் தெரிய வருகிறது.

+ குடபுலம் என்ற பகுதியிலிருந்து வந்த இயனார் என்பதால் குடபுலவியனார் என்று அழைக்கப்பட்டார்.

மாங்குடி மருதனார்

+ திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர் எட்டுத்தொகையில் 12 பாடல்களைப் பாடியவர். பத்துப்பாட்டில் அமைந்துள்ள 'மதுரைக்காஞ்சி' என்ற நூலை இயற்றியுள்ளார். திருவள்ளுவமாலையில் இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ

* இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர். கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் 'பாலை பாடிய பெருங்கடுங்கோ' என அழைக்கப்பட்டார்.

வெள்ளிவீதியார்:

+ இவர் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்நூல்களில் 13 பாடல்கள் இவரால்பாடப்பட்டவையாகும்.அகநானூறு 45, 362 - ஆவது பாடல்கள் ; குறுந்தொகை

27, 44, 58, 130, 146, 149, 169, 386- ஆவது பாடல்கள் ;

நற்றிணை 70, 335, 348 - ஆவது பாடல்கள்




Post a Comment

0 Comments