தமிழ் - சங்கப் புலவர்கள் - பகுதி - 2
நல்லந்துவனார்
* இவர் நெய்தல் கலியில் 33 பாடல்களைப் பாடியுள்ளார். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர். சங்ககாலப் புலவர் என்பதைத் தவிர வேறு தகவல்கள் இல்லை.
* நரிவெரூஉத் தலையார்
* இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும் திருவள்ளுவமாலையிலும் உள்ளன. புறநானூற்றில் இவர் எழுதிய பாடல் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலாத பொறை என்ற மன்னரைப் பற்றியதாகும்.
கபிலர்
* கபிலர் பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூரிலே அந்தணர் மரபிலே பிறந்தவர். கடைச்சங்கப் புலவர்கள் பரணர், இடைக்காடர், ஔவையார் ஆகியோரிடம் நட்பு பூண்டவர். கடையெழு வள்ளகளுள் ஒருவனாகிய பாரியை உயிர்த்தோழனாகக் கொண்டவர். பாரியின் அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தவர். குறிஞ்சித் திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
* இவரது பாட்டு வன்மைக்குப் பழைய இலக்கண உரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் 'கபிலரது பாட்டு' என்னும் தொடரே சான்றாகும்.
புகழுரை புகழ்ந்தவர்
வாய்மொழிக் கபிலன் நக்கீரர்.
நல்லிசைக் கபிலன் பெருங்குன்றூர்க்கிழார்
வெறுத்த கேள்விவிளங்கு புகழ்க் கபிலன் பொருந்தில் இளங்கீரனார்
புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யா மாறோகத்து நப்பசலையார்)
நாவிற் கபிலன்
0 Comments