மாணிக்கவாசகரின் திருவாசகம்

 

மாணிக்கவாசரின் திருவாசகம்

4 , போற்றித் திரு அகவல்

பகுதி - 5


உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி



கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி!

,

குவைப்பதி மலிந்த கோவே, போற்றி!

மலைநாடு உடைய மன்னே, போற்றி!

கலை ஆர் அரிகேசரியாய், போற்றி!

திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி!

பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி!

அருவமும் உருவமும் ஆனாய், போற்றி!

மருவிய கருணை மலையே, போற்றி!

துரியமும் இறந்த சுடரே, போற்றி!

தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி!

தோளா முத்தச் சுடரே, போற்றி!

ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி!

ஆரா அமுதே, அருளே, போற்றி!

பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!

தாளி அறுகின் தாராய், போற்றி!

நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!

சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!

சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி!

மந்திர மாமலை மேயாய், போற்றி!

எம் தமை உய்யக் கொள்வாய் போற்றி!

புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி!

அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி!

கருங் குருவிக்கு அன்று அருளினை போற்றி!

இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!

படி உறப்பயின்ற பாவக, போற்றி!

அடியொடு நடு, ஈறு ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம் நானிலம், புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அறநிறைந்த ஒருவ, போற்றி!
செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்!
குழைத்த சொல் மாலை கொண்டருள் போற்றி!
புரம் பல எரித்த புராண, போற்றி!
பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!
போற்றி! போற்றி! புராண காரண
போற்றி! போற்றி! சய, சய போற்றி!
திருச்சிற்றம்பலம்



Post a Comment

0 Comments