தமிழில் எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி ?

 

தமிழில் எழுத்துப் பிழைகளைத் 

தவிர்ப்பது எப்படி ?

எழுத்துப்பிழை தவிர்த்தல்

* ந, ண, ன | ற, ர | ல, ள, ழ இந்த எட்டு எழுத்துகளில் நகரம் மட்டும் சொல்லின் தொடக்கமாக வரும். றகர மெய் சொல்லின் இறுதியில் வராது.

* தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.

* வல்லின மெய்யோடு சொல் முடியாது.

* வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாரா. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. காட்ச்சி, முயற்ச்சி என்று எழுதுவது பிழையாகும்.

* க், ச், த், ப் ஆகியவற்றின் பின் அவற்றின் எழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வாரா. (எ.கா) காக்கை, பச்சை, பத்து, உப்பு ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும். (எ.கா) பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை.

* ட , ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.

* ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். (எ.கா)

அஃது, எஃகு,

* மெல்லின எழுத்துகளில் ண, ன சொல்லின் தொடக்கமாக வாரா.

* தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின   மெய்யோ அவற்றின் இன மெல்லின மெய்யோ வரும். பிற மெய்கள்   வருவதில்லை. (எ.கா) தக்கை, தங்கை, பச்சை, இஞ்சி, பண்டு, பட்டம், பத்து, பந்து, தப்பு, பாம்பு, கற்று, கன்று,

* ய், ர், ல், ழ், ள் என்னும் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று / 'கள்' விகுதி / வல்லினத்தின் தொடங்கும் சொற்கள் வரும் போது இயல்பாக நிற்கும். (எ.கா.) தேய்க, நாய்கள், தாய்சேய், ஊர்க, ஊர்கள், ஊர்சூழ், செல்க, கால்கள், செல்கணம், வாழ்க, வாழ்தல், தோள்கள்.

* ணகர ஒற்றினை அடுத்து றகரமும், னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை.

(எ.கா) மன்றம் (சரி) - மண்றம் (தவறு)

கண்டு (சரி)    - கன்டு (தவறு)

* ஞ், ந், வ் என்னும் எழுத்துகளில் முடியக்கூடிய சொற்கள் அரிதாக   உள்ளன. (எ.கா) உரிஞ், வெரிந், 'பொருந், தெவ்

* ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளபெடுத்தால் மட்டுமே வரும். (எ.கா) பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை

* தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வாரா.

* தனிக்குறிலை அடுத்து ரகர ஒற்று வரின் அதனைத் தமிழ் இயல்புக்கேற்ப திருத்தி எழுத வேண்டும்.

நிர்வாகம் (தவறு) - நிருவாகம் (சரி)

கர்மம் (சரி) - கருமம் (அ) கன்மம் (சரி)

* ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துகளும் வாரா,

* உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என மாறும்.

* உயிர்வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்று மாறும்.

* இயக்கு, ஓட்டு, அனுப்பு, பெறு முதலான வினைகள், பெயரிடை நிலையான 'ந்' என்பதைப் பெற்று (ந் + அர் = நர்) இயக்குநர், ஒட்டுநர், அனுப்புநர், பெறுநர் என அமையும்.

* உறுப்பு, குழு, ஊர் ஆகிய பெயர்ச்சொற்கள் இன்' சாரியைப் பெற்று உறுப்பினர், குழுவினர், ஊரினர் என அமையும்.Post a Comment

0 Comments