8 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தேர்வு - மாதிரி வினாத்தாள் - விடைகளுடன் / 8th TAMIL - MODEL QUESTION PAPER & ANSWER

 

எட்டாம் வகுப்பு-தமிழ்

புத்தாக்கப் பயிற்சித்தேர்வு-பிப்ரவரி 22

காலம்:1:30 மணி,     மதிப்பெண்கள்:50

வினாக்களும் விடைகளும்

வினா உருவாக்கம்

திரு.மணி மீனாட்சி சுந்தரம் , 

தமிழாசிரியர் , சருகுவலையப்பட்டி , 

மேலூர் , மதுரை.

விடைத்தயாரிப்பு 

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

   *****************   ************   **********                    

   பகுதி-1

தேர்ந்தெடுத்து எழுதுக.(8x1=8)

1.செம்மொழி என்னும் சொல்லில் உள்ள உயிர்மெய்க் குறில் எழுத்துகளின் எண்ணிக்கை

அ.1 ஆ.3, இ.2 ஈ.4

விடை : ஆ ) 3

2.மற்றொன்று என்னும் சொல்லில் உள்ள மெய்கள் எவ்வினத்தைச் சேர்ந்தனவ?

அ.வல்லினம். 

ஆ. இடையினம்

இ.வல்லினம், மெல்லினம் 

ஈ.மெல்லினம்

விடை : இ ) வல்லினம் , மெல்லினம்

3.மாறன் குடுகுடு என ஓடிவந்து வெற்றி வெற்றி என முழங்கினான்-இத்தொடரில் உள்ள இரட்டைக் கிளவி 

அ.வெற்றிவெற்றி

ஆகுடுகுடு

இ.மாறன்

ஈ.ஓடிவந்து

விடை : ஆ ) குடுகுடு

4.கதவு,யானை,காகம்,மலர்விழி இவற்றில் உயர்திணை அல்லாதவை

அ.கதவு

 ஆ.யானை,காகம்

இ.மலர்விழி

ஈ.கதவு,யானை,காகம்

விடை : ஈ ) கதவு , யானை , காகம்

5.சிறுவர்கள், அவர்கள், வாக்காளர்கள்-இவை பின்வரும் எந்த வகையில் சேரும்?

அ.பலவின்பால்

ஆ.பலர்பால்

இ.ஆண்பால்

ஈ.ஒன்றன்பால்

விடை : ஆ ) பலர்பால்

6.செயல் நிகழும் காலத்திற்குப் பொருத்தமான சொல் எது?

அ.வருவான்

ஆ.பாடுவான்

இ.படிக்கிறான்

ஈ.நின்றான்

விடை : இ ) படிக்கிறான்

7.இருள் என்னும் சொல்வின் எதிர்ச்சொல்

அ.பகல்                ஆ. இருட்டு

இ.இரவு                 ஈ.ஒளி

விடை : ஈ ) ஒளி

8.மெய் எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு

அ.ஒரு மாத்திரை 

ஆ.அரை மாத்திரை 

இ.இரண்டு மாத்திரை 

ஈ.மூன்று மாத்திரை

விடை : ஆ ) அரை மாத்திரை

                    பகுதி - 2

எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடை தருக. (6x2=12)

9.பொருத்தமான வினாச் சொற்களை நிரப்புக.

(என்ன, ஏன்,யார், எவை)

அ.அவன் ----- வரவில்லை?

விடை : அவன் ஏன் வரவில்லை ?

ஆ. உனது ஊரின் பெயர் -----

விடை : உனது ஊரின் பெயர் என்ன ?

10.பின்வரும் தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைக் கண்டறிந்து எழுதுக.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

எழுவாய் - இளங்கோவடிகள்

பயனிலை - இயற்றினார்

செயப்படுபொருள் - சிலப்பதிகாரம்


11.குறிப்புகளைக் கொண்டு சொல்லைக் கண்டுபிடி.

அ.பொழுது சாயும் நேரம்

ஆ .பூக்கள் சேர்ந்தது ஆரம்

விடை : மாலை

அ . ஏணியில் ஏறப் பயன்படுவது

ஆ . அரிசி அளக்கப் பயன்படுவது

விடை : படி

12"உடலின் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்-இவ்வடிகளில் உள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

உடலின் , உறுதி , உடையவரே , உலகில் , உடையவராம் - உ - மோனை 

13.பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக.

அ.அபூர்வம், ஆயூனிபார்ம்

அ ) அபூர்வம் - புதுமை

ஆ ) யூனிபார்ம் - சீருடை

14.நிறுத்தற்குறியிட்டு எழுதுக

மா பலா வாழை ஆகிய மூன்றையும் முக்கனிகள் என்கிறோம்.

விடை : மா , பலா , வாழை என்பன முக்கனிகள்.

15.முறை மாறியுள்ள சொற்களை முறைப்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

முதல் விளையாட்டு கலையரசன் பரிசு போட்டியில் வென்றான்.

விடை : விளையாட்டுப் போட்டியில் கலையரசன் முதல் பரிசு வென்றான்.

16.ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் நான்கினை எழுதுக.

விடை : பூ , வா , தா , தீ 

                     பகுதி -3

விடை தருக. (4x3=12)

17.கீழ்க்காணும் பத்தியைப் படித்து விடையளிக்கவும்.

நோய் வந்தபின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள். சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழ வைக்கும்.விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணினித்திரையிலும் கைபேசியிலும்  விளையாடுவதைத் தவிர்த்து   நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

அ.நம்மை நலமாக வாழ வைக்கும் மூன்று காரணிகள் எவை?

* சரியான உணவு

* சரியான உடற்பயிற்சி

* சரியான தூக்கம் 

ஆ) நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைமுறை யாது?

     நோய் வந்தபின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இ.எப்படிப்பட்ட விளையாட்டு நலம் தரும்?

     ஓடியாடி விளையாடும் விளையாட்டு நலம் தரும்.

18.விடுகதைக்கு ஏற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(எலுமிச்சை, கொக்கு, காளான்)

அ.மழைக்காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்?

விடை : காளான் 

ஆ.எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊசலாடுது அது என்ன?

விடை : எலுமிச்சை

இ.நான் ஒற்றைக்காலில் நிற்கிறேன்; ஓடையிலே மீன் பிடிக்கிறேன் நான் யார்?

விடை : கொக்கு

19.தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

அ.மூவேந்தர் - சேர , சோழ , பாண்டியர்

ஆ.ஐந்திணை - குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை

இ.நாற்றிசை - கிழக்கு , மேற்கு , வடக்கு , தெற்கு 

20.கீழ்க்காணும் பக்தியைப் படித்து மனவரைபடம் உருவாக்குக.

     திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது;
133 அதிகாரங்களைக் கொண்டது;ஓர் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 1330 பாடல்களைக் கொண்டது.இதன் ஆசிரியர் திருவள்ளுவர்.


                          பகுதி - 4

விடை தருக.( 2 x 5=10)

21.கீழ்க்காணும் அறிவிப்பைச் செய்தியாக மாற்றுக.

அறிவிப்பு

கபடி இறுதிப்போட்டி

பங்கு பெற்றோர் : முல்லை அணி, குறிஞ்சி அணி

இடம் : நேரு விளையாட்டு அரங்கம்

நாள்: 2.5.2021

நேரம் : காலை 9 மணி

வெற்றி : குறிஞ்சி அணி

பரிசு : ஐந்தாயிரம் ரூபாய்

விளையாட்டுச் செய்தி 


2.5.2021 ஞாயிறன்று நேரு விளையாட்டு அரங்கில் காலை 9 மணிக்குக் கபடிப் போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில், கோவையைச் சேர்ந்த முல்லை அணியும், மேட்டுப்பாளையத்தைச் சார்ந்த குறிஞ்சி அணியும் மோதின. இதில்
மேட்டுப்பாளையம் குறிஞ்சி அணி வெற்றி பெற்று. ஐந்தாயிரம் ரூபாய் பரிசாகப் பெற்றது.

22.கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.



அ.கையுறைகள் அடங்கிய பெட்டி இரண்டின் விலை எவ்வளவு?

விடை : ரூ.100

ஆ.சித்த மருத்துவ நூல் எதற்கு இலவசமாகத் தரப்படுகிறது?

விடை : மூலிகைப்பொடிகள் 

இ.சிறு தானியங்களின் பெயர்களை எழுதுக.

விடை : சோளம் , கம்பு , வரகு , சாமை , தினை , குதிரைவாலி , ராகி 

ஈ.எப்பொருளுக்கு இரண்டு வாங்கினால் ஒன்று இலவசமாகத் தரப்படுகிறது?

விடை : கிருமிநாசினி

உ.விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள முழக்கத் தொடர்களை எழுதுக.

விடை : இயற்கையை நேசி !

                 இதமாய் சுவாசி !

                          பகுதி - 5

ஏதேனும் ஒன்றுக்கு விரிவான விடை தருக.(1x8=8)

23.கீழ்க்காணும் செய்தியைத் தோழன்/தோழிக்குக் கடிதமாக எழுதுக.

உலகின் மிகப் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்று. இது பாண்டிய
மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த ஊர் எனும் சிறப்பும் இதற்கு உண்டு சங்ககால இலக்கியங்களும், காப்பியங்களும், புராணங்களும்
இவ்வூரின் பெருமையைப்  பேசுகின்றன. இவ்வூரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் கலைச் சிறப்புக்குச் சான்றாகத் திகழ்கிறது.

(அல்லது)

24.பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

எனது ஊர் - பெயர்க்காரணம்-ஊரின் அமைப்பு - முக்கிய இடங்கள் தொழில்கள்-திருவிழாக்கள்

Post a Comment

0 Comments