திருவள்ளுவமாலை


திருவள்ளுவமாலை

என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்

தின்றலர்ந்து தேன்பிலி ற்றும் நீர்மையதாய்க் - குன்றாத

செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்

மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்.

- இறையனார்

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்

ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவன்

வள்ளுவருந் தங்குறள் வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவவெல் லாமளந்தார் ஓர்ந்து.

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் ய

மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்

தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால்

வையத்து வாழ்வார் மனத்து.

தேனிக்குடி கீரனார்

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் ஒண்குறளால்

ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்கு

ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்

வாழிஉலகு என்னாற்று மற்று.

- நக்கீரர்

அறம்பொருள் இன்பம் வீடு) என்னும் அந் நான்கின்

திறந்தெரிந்து செப்பிட தேவை - மறந்தேயும்

வள்ளுவன் என்பான்ஓர் பேதை அவன்வாய்ச்சொல்

கொள்ளார் அறிவுடை யார்.

- மாமூலனார்

பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு

தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய

சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்

வல்லாரார் வள்ளுவரல் லால்.

- அரிசிற்கிழார்

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்

பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்

வாய்க்கேட்க நூல்உளவோ மன்னு தமிழ்ப்புலவ

ராய்க் கேட்க வீற்றிருக்கலாம்.

- நத்தத்தனர்

ஓதற் கெனிதாய் உணர்தற் கரிதாகி

வேதப் பொருளாய் மிகவினங்கித் - தீதற்றோர்

உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

எல்லாப் பொருளும் இதன்பால் உனவிதன்பால்

இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்

பரந்தபா வாலென் பயன்வள்ளுவனார்

சுரந்தபா வையத் துணை.

- மதுரைத் தமிழ் நாகனார்

மணற்கிளைக்க நீர்வறும் மைந்தர்கள் வாய்வைத்து

உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்கிலா

வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு

ஆய்தொறும் அறும் அறிவு

- உருத்திரசன்ம கண்ணனார்



Post a Comment

0 Comments