9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , கல்வியில் சிறந்த பெண்கள் - இயங்கலைத்தேர்வு - வினா விடை / 9th TAMIL - ONLINE TEST - QUESTION & ANSWER

 

9 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 5 , கல்வியில் சிறந்த பெண்கள் 

இயங்கலைத் தேர்வு - வினா & விடை

வினா உருவாக்கம் : 

மு.மகேந்திர பாபு,

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

**************    *************   ***********
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம்  இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எனண்ணிற்கு அனுப்பி இணைப்பைப் பெறலாம்.

******************   *************   **********


1) ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் - என்று கூறியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) நாமக்கல் கவிஞர்

ஈ ) கவிமணி

விடை : அ ) பாரதியார்

2) மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' - என்றவர் யார் ?

அ) ஔவையார்

ஆ) சுரதா

இ) காக்கை பாடினியார்

ஈ) கவிமணி

விடை : ஈ ) கவிமணி

3) அதியமான் நெல்லிக்கனியை
யாருக்குக் கொடுத்தான்?

அ) மாசாத்தியார்

ஆ) ஔவையார்

இ ) காக்கை பாடினியார்

ஈ) பிசிராந்தையார்

விடை : ஆ ) ஔவையார்

4) சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் தூது போனவர் -----

அ) நச்செள்ளையார்

ஆ) ஆதிமந்தியார்

இ) பொன்முடியார்

ஈ) ஔவையார்

விடை : ஈ  ) ஔவையார்

5) சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் , கல்வி கற்ற
பெண்ணாக இருந்தவர் ------

அ) மாதவி

ஆ) கண்ணகி

இ) மணிமேகலை

ஈ) காயசண்டிகை

விடை : இ ) மணிமேகலை

6) பக்தி இலக்கியம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப்பாமாலை சூடியவர்கள் ----- , ------

அ) காரைக்காலம்மையார் , ஆண்டாள்

ஆ) காக்கைப்பாடினியார் ,
காவற்பெண்டு

இ   பொன்முடியார் , நன்முல்லையார்

ஈ) வெள்ளி வீதியார் ,
வெண்ணிக்குயத்தியார்

விடை : அ ) காரைக்காலம்மையார் , ஆண்டாள்

7) தமிழகத்தின் முதல் பெண்
மருத்துவர் -----

அ) மணியம்மையார்

ஆ) முத்துலட்சுமி அம்மையார்

இ) மூவலூர் இராமாமிர்தம்

அம்மையார்

ஈ) பண்டித ரமாபாய்

விடை : ஆ ) முத்துலட்சுமிஅம்மையார்

8) வேலூரில் இலவச மருத்துவம் 
அளித்த அமெரிக்கர் -----

அ) ஐடாஸ் சோபியா கட்டர்

ஆ) பெலோமினி

இ) மரியா

ஈ) ரேனியல் எல்லீஸ்

விடை : அ ) ஐடாஸ் சோபியா கட்டர்

9) தமிழின் பொற்காலம் எனப்படுவது ------

அ) சங்க காலம்

ஆ) பல்லவர் காலம்

இ) பாண்டியர் காலம்

ஈ) களப்பிரர் காலம்

விடை : அ ) சங்ககாலம்

10 ) சங்ககாலத்தில் உருவான நூல்கள் -----

அ) இராமாயணம் , மகாபாரதம்

ஆ) சிலப்பதிகாரம் , மணிமேகலை

இ) பத்துப்பாட்டு , எட்டுத்தொகை

ஈ) சிற்றிலக்கியம் , நிகண்டுகள்

விடை : இ ) பத்துப்பாட்டு , எட்டுத்தொகை

11) தேவதாசி ஒழிப்புச் சட்டம்
நிறைவேறத் துணை நின்றவர் யார்?

அ) திலகவதி

ஆ) கிரண்பேடி

இ) முத்து லட்சுமி

ஈ) மூவலூர் இராமாமிர்தம்

விடை : ஈ ) மூவலூர் இராமாமிர்தம்

12) பெண்ணடிமை தீரும் வரை
மண்ணடிமை தீருமோ எனப்பாடியவர் யார் ?

அ) பெருஞ்சித்திரனார்

ஆ) முடியரசன்

இ) பாரதிதாசன்

ஈ) பட்டுக்கோட்டை

விடை : இ ) பாரதிதாசன்

13) பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்திப் 12 ஆம் வயதிலேயே போராடியவர் யார் ?

அ) மலாலா

ஆ) ரூபலா

இ) பண்டித ரமாபாய்

ஈ) மணியம்மையார்

விடை : அ ) மலாலா

14) இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ------

அ) சாவித்திரிபாய் பூலே

ஆ) நீலாம்பிகை அம்மையார்

இ) காரைக்கால் அம்மையார்

ஈ) தருமாம்பாள் அம்மையார்

விடை : அ ) சாவித்திரிபாய் பூலே

15) தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர் யார்?

அ) நாகம்மையார்

ஆ) மணியம்மையார்

இ) பண்டிதரமாபாய்

ஈ) வள்ளியம்மை

விடை : இ ) பண்டித ரமாபாய்

16 ) எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கு தமிழக அரசு யார் பெயரில் திருமண உதவித்தொகை வழங்கி வருகிறது?

அ) மணியம்மையார்

ஆ) முத்துலெட்சுமி

இ) மூவலூர் இராமாமிர்தம்

ஈ) தில்லையாடி வள்ளியம்மை

விடை : இ ) மூவலூர் இராமாமிர்தம்

17) மறைமலையடிகளைப் போலவே தனித்தமிழ்ப்  பற்றுடைய அவரின் மகள்
பெயரென்ன?

அ) நீலாம்பிகை அம்மையார்

ஆ) மூகாம்பிகை அம்மையார்

இ) அசலாம்பிகை அம்மையார்

ஈ) செல்லம்மாள்

விடை : அ ) நீலாம்பிகை அம்மையார்

18) திருமந்திரம் , தொல்காப்பியம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல்
உண்மைகள் குறித்துச்   சொற்பொழிவாற்றியவர் யார் ?

அ) காரைக்கால் அம்மையார்

ஆ) நீலாம்பிகை அம்மையார்

இ) ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார்

ஈ) சிவகாமி அம்மையார்

விடை : விடை : இ ) ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார்

19 ) சாரதா சட்டம் எதைத்தடுக்க 1929 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது?

அ) விதவை மறுமணம்

ஆ) குழந்தைத்திருமணம்

இ ) பெண்கல்வி

ஈ) வறுமை ஒழிப்பு

விடை : ஆ ) குழந்தைத் திருமணம்

20 ) மகளிர் கல்வியை கோத்தாரி
கல்விக்குழு பரிந்துரைத்த ஆண்டு -----

அ) 1954

ஆ) 1958

 இ) 1960

ஈ) 1964

விடை : ஈ ) 1964




Post a Comment

1 Comments