தமிழ் - சங்கப்புலவர்கள்
சங்கப் புலவர்கள் பற்றிய குறிப்புகள்
ஔவையார்
* ஔவையார் என்பவர் பெண்பாற்புலவராவார். சங்கக் காலத்தைச் சேர்ந்தவர். சங்கக்காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர் அவர்களுள் அதிகமான அளவு பாடல்களை ஒளவையார் பாடியுள்ளார். சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறு வேறு நபர்கள் ஆவர். வேறு வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி அதிகமான தகவல்கள் வெளிப்படவில்லை.
மன்னன் அதியமானின் நண்பராக வாழ்ந்த ஔவையார். அரிய
நெல்லிக்கனியை அதியமானிடம் இருந்து பெற்றவர். பாரி மன்னன்
இறந்த பிறகு அவருடைய புதல்விகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.
நக்கிரனார்
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார். இவர், இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர். பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல்வாடையையும் இயற்றியவர்.
சங்கத்தொகை நூல்களில் இவர் இயற்றியவை, அகநானூறு
1 7 பாடல்கள்), குறுந்தொகை (7 பாடல்கள்), நற்றிணை (7 பாடல்கள்), புறநானூறு (3 பாடல்கள்).
மோசிகீரனார்
தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி' என்னும் ஊரில் வாழ்ந்தவர். 'கீரன்'
என்பது குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது. உடல் சோர்வினால்
அரசுக்குரிய முரசுக் கட்டிலில் படுத்து உறங்கியபோது, சேரமான்
பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற
பெருமைக்குரியவர். இவர் பாடிய பாடல்கள் புறநானூறு, அகநானூ
று, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.
கண்ணகனார்
கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது, பிசிராந்தையாரின்
வருகைக்காக காத்திருந்தான். அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார் ஆவார்.
மிளைகிழான் நல்வேட்டனார்
* மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார். இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல்
இயற்றியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடல்களும்,
குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல்கள் உள்ளன. இவர்
சங்ககாலத்தவர்.
0 Comments